ஜூன் 2ல் பள்ளிக்குத் திரும்பும் மாணவருக்கான கட்டுப்பாடுகள்

ஜூன் 2ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். ஆனாலும் தேசிய தேர்வுகளுக்குத் தயாராகும் தொடக்கநிலை 6, உயர்நிலை 4, உயர்நிலை 5 ஆகிய மாணவர்களுக்கு மட்டும் தினமும் வகுப்புகள் நடைபெறும். பாடம் கற்க வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக்ககவசம் அல்லது முகக் கேடயங்களை அணிவது கட்டாயம்.

இதர மாணவர்கள் அனைவரும் ஒரு வாரம் வீட்டிலிருந்தும் மறுவாரம் பள்ளிக்கு வந்தும் கற்கும் வழக்கத்தை மேற்கொள்வர். பள்ளிக்கூடங்களோடு எல்லா மாணவர் பராமரிப்பு நிலையங்களும் ஜூன் 2 முதல் திறக்கப்படும்.

பாலர் பள்ளிகள் அன்றைய தினம் திறக்கப்படும்போது கே1, கே2 பயிலும் ஐந்து வயது, ஆறு வயது பிள்ளைகள் முதலில் அனுமதிக்கப்படுவர்.

மழலை கல்வி 1, 2 வகுப்புகளில் பயிலும் பிள்ளைகள் ஜூன் 8அம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர்.
தொடக்கக் கல்லூரி மற்றும் மில்லனியா கல்விக்கழகம் ஆகியவற்றின் மாணவர்களில் பாதிப்பேர் வரை மாறி மாறி வகுப்புகளுக்குச் செல்லலாம். இவர்களைத் தவிற, சிறப்புக் கல்விக்கூடங்களின் மாணவர்கள் ஜூன் 2 முதல் பிரிவுகளாக ஜூன் 8ஆம் தேதி வரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.

பள்ளிக்கூடங்கள் மற்றம் கல்வி நிலையங்களுக்குள் நுழையும் அனைவரும் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். நுழைவாசலில் வருகையாளர்களின் உடல்வெப்ப நிலை சோதிக்கப்படும்.
வருகையாளர்களின் தொடர்பு தடங்களைக் கண்டறிய உதவும் வகையில் ‘சேஃப்என்ட்ரி’ மின்னிலக்க வருகைப் பதிவு முறை எல்லாப் பள்ளிகளிலும் பின்பற்றப்படுவது அவசியம்.
உள்ளே நுழையும் மாணவர்களுக்கும் வெளியேறும் மாணவர்களுக்கம் இடையே சிறிதளவு நேர இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். வெவ்வேறு நேரங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கூட்டத்தைக் குறைக்கலாம். குறிப்பாக, பொதுப் போக்குவரத்தில் இது சாத்தியப்படும்.

பயிற்சி வகுப்புகள் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும்போதும் சாப்பிடும்போதும் தவிற மற்ற எல்லா நேரங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அல்லது முகக்கேடயம் அணிவது கட்டாயம். மாணவர்களின் உடல்வெப்ப நிலை ஒவ்வொரு நாளும் சோதிக்கப்பட வேண்டும். அத்துடன் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாணவர்களிடம் காணப்படுகின்றனவா என்பதை ஆசிரியர்கள் பரிசோதித்து அறிய வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமருவது அவசியம்.

பாலர் பள்ளிகள்

பாலர் பள்ளிகளுக்கும் இதேபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் வருகையாளர்களுக்கு அவற்றில் அனுமதி இல்லை. சிறு குழுக்களாக பிள்ளைகள் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். ஆயினும் ஒரு குழுவினர் மற்ற குழுவோடு சேர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது.

நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கும் வகையில் பிள்ளைகளைக் கொண்டு வந்து விடுவதிலும் அழைத்துச் செல்வதிலும் மாறுபட்ட நேரங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் அலுவலர்களின் வகுப்புகளுக்கு இடையிலான நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!