‘லாபம் ஈட்டியதாக, ஊழலில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’

சிங்கப்பூர் எக்ஸ்போ மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் சுர்பானா ஜூரோங் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு வசிப்பிடம் தொடர்பில் சில தரப்பினர் லாபம் ஈட்டியுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தீய உள்நோக்கம் கொண்டவை என்றும் சுகாதார அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கொரோனா கிருமித்தொற்றால் இலேசாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது அதிலிருந்து குணமடைந்து வரும் நோயாளிகளைப் பராமரிப்பதற்காக சமூகப் பராமரிப்பு வசிப்பிடம் ஒன்றை அமைத்துத் தர தெமாசெக் ஹோல்டிங்சை அரசாங்கம் கேட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சும், தேசிய வளர்ச்சி அமைச்சும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.

தனது துணை நிறுவனங்களைக் கொண்டு குறுகிய காலகட்டத்தில் சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தை அமைக்க தெமாசெக் ஹோல்டிங்சுக்குத் தேவையான வளங்கள் இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சுகள் தெரிவித்தன.

“உதவி செய்ய தெமாசெக் ஹோல்டிங்ஸ் இணங்கியது. லாப நோக்கமில்லாது சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தை அமைக்க ஏற்படும் செலவை மட்டும் திரும்பப் பெற அது இணங்கியது. சில இடங்களில் ஏற்பட்ட செலவைவிட குறைவான தொகை அதற்குத் திரும்ப கிடைத்தது.

“சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தை அமைத்துத் தந்ததில் தெமாசெக் ஹோல்டிங்சுக்கும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கவில்லை,” என்று அமைச்சுகள் தெரிவித்தன.

சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தை அமைக்க பிஎஸ்ஏ இன்டர்நேஷனல், சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் என்ஜினியரிங், ஷியர்ஸ் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய நிறுவனங்களின் உதவியை தெமாசெக் ஹோல்டிங்ஸ் நாடியது.

பார்க்வே பந்தாய், ரிசோர்ட்ஸ் வொர்ல்ட் செந்தோசா, செர்ட்டிஸ் சிஸ்கோ ஆகியவற்றின் உதவியையும் தெமாசெக் நாடியது.

சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தைக் கட்டித்தர சுர்பானா ஜூரோங்கைத் தேர்ந்தெடுத்ததில் மனிதவள அமைச்சுக்கும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தைக் கட்ட ஏற்பட்ட செலவுகளை மனிதவள அமைச்சும் அமைச்சர் டியோவும் நிர்வகிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் சமூகப் பராமரிப்பு வசிப்பிடம் அமைக்கப்பட்டது தொடர்பாக ஊழல் நடந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்தை அமைக்க சிங்கப்பூர் எக்ஸ்போதான் பொருத்தமான இடம் என்று தெமாசெக் ஹோல்டிங்ஸ் அடையாளம் கண்டதாக அமைச்சு கள் தெரிவித்தன.

சிங்கப்பூர் எக்ஸ்போவை சிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான சமூகப் பராமரிப்பு வசிப்பிடமாக மாற்ற சுர்பானா ஜூரோங்கை தெமாசெக் ஹோல்டிங்ஸ் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சுகள் கூறின.

சமூகப் பராமரிப்பு வசிப்பிடத்திற்கான சுகாதாரப் பராமரிப்பு தேவைகள் குறித்து தெமாசெக் ஹோல்டிங்சுடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!