ஜூன் 2ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்குவது பற்றி வர்த்தகங்களுக்கு உதவும் கேள்விகளும் விளக்கங்களும்

1) முதல் கட்டத்தில் செயல்படத் தொடங்கும் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டன?

முதல் கட்டத்தின் நோக்கம், பொருளாதார, சமூக நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் படிப்படியாக மீண்டும் தொடங்கு வதாகும். எனவே, கிருமிப் பரவல் அபாயம் குறைவாக உள்ள வர்த்தகங்களில் தொடங்கி, படிப்படியாக அதிகமான ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப அனுமதிப்போம். உற்பத்தி, தயாரிப்புத் துறை தொழில்களும்; ஊழியர்கள், அலுவலகத்தில் அல்லது அதிகளவிலான மக்களுடன் நேரடித் தொடர்பு தேவையில்லாத இடங்களில் செயல்படும் வர்த்தகங்களும் இதில் அடங்கும்.

பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக வர்த்தகங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, https://covid.gobusiness.gov.sg/safemanagement/general என்ற இணையத்தளத்தில் காணப்படும் பாது காப்பு விதிமுறைகளுடன், அவற்றுக்கு பொருந்தக்கூடிய, துறை சார்ந்த விதி முறைகளையும் கடைப்பிடிப்பது கட்டாயம்.

முதலாளிகள் தொலைத்தொடர்புகளை அதிகபட்சம் பயன்படுத்த வேண்டும். தற்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் அப்படியே தொடர வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே அலுவலகம்செல்லலாம். எடுத்துக்காட்டாக, வீட்டில்இருந்து பயன்படுத்த முடியாத கணினி இயக்கங்களையும் சாதனங்களையும் பயன்படுத்த, அல்லது சட்டப்படி நேரில் சென்று மட்டுமே நிறைவேற்றக்கூடிய பரிவர்த்தனையை முடிக்க.


2) வெவ்வேறு வேலை, ஓய்வு நேரங்களை எப்படிச் செயல்படுத்துவது?

நுழைவாயில், வெளியேறும் இடங்கள், உணவுக்கூடம், தேநீர் அறை உட்பட அனைத்து பொது இடங்களிலும் ஊழி யர்கள் திரளாகக் கூடுவதைக் குறைக்க அவர்களின் வேலை, ஓய்வு நேரங்கள் வெவ்வேறாக இருப்பது முக்கியம்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடை முறைகளுக்கான மனிதவள அமைச்சின் நிபந்தனைகளின்படி, பணி இடங்களில் செயல்படத் தொடங்கும்போது முதலாளிகள் வெவ்வேறு வேலை, ஓய்வு நேரங்களைச் செயல்படுத்த வேண்டும். வெவ்வேறு வேலை நேரங்கள் குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.

இதில், ஒவ்வொரு பிரிவிலும் ஊழியர் தொகையில் பாதிக்கும் மேற்போகாத வர்களே வேலையைத் தொடங்குவதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை என்றால், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, ஒரு மணி நேர இடைவெளியில் ஊழியர்களை வேலைக்கு வரச் சொல்லலாம். (எ.கா. காலை 7.30 மணி - 8.30 மணி வரை, காலை 8.30 மணி - 9.30 மணி வரை, காலை 9.30 மணி - 10.30 மணி வரை), தொடங்கும் நேரத்தைப் பொறுத்து வேலை முடியும் நேரத்தையும் வெவ்வேறாகப் பிரிக்கலாம். மதிய உணவு, மற்ற இடைவெளிகளின் நேரங்களும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

சாத்தியமாகும்போது, வேலை தொடங்குவதும் முடிப்பதும் உச்ச நேர போக்குவரத்துடன் இணைந்ததாக இருக்கக்கூடாது, குறிப்பாக ஊழியர்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்து பவர்களாக இருந்தால்.

வேலையிட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன், வேலையிடத்தில் பணிபுரியத் தேவைப்படும் ஊழியர்களுடன் வெவ்வேறு வேலை நேர ஏற்பாடுகள் குறித்து முதலாளிகள் பேச வேண்டும்.

செயல்முறைக் காரணங்களால் (எ.கா. உற்பத்தி நடவடிக்கைகள்) வெவ்வேறு வேலை, ஓய்வு நேரங்களை செயல்படுத்து வது சாத்தியமில்லை என்றால் பொதுவான இடங்களில் ஊழியர்கள் திரள்வதைத் தவிர்க்க, முதலாளிகள் இதர ஏற்பாடு களை நடைமுறைப்படுத்த வேண்டும் (எ.கா. வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர் வருவதற்கும்/செல்வதற்கும் தனித்தனி வழிகளை அமைத்தல்).


3) ஜூன் 2ஆம் தேதி மீண்டும் தொழிலைத் தொடங்காமல் இருக்க நான் விலக்கு பெற வேண்டுமா?

இல்லை. அனுமதிக்கப்பட்ட வர்த்தகங்க ளின் பட்டியலில் உங்கள் தொழில் இடம்பெற்றிருந்தால், விதிவிலக்கு பெற நீங்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அதிக எண்ணிக்கையிலான வர்த்தகங்களைக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்த தோதாக, ஜூன் 2ஆம் தேதி நடவடிக்கை களை மீண்டும் தொடங்குவதில் இருந்து வர்த்தகங்களை வகைப்படுத்தி விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், வேலையிடத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை, தொழில் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் https://covid.gobusiness.gov.sg என்ற இணையத்தளத்தில் தெரியப்படுத்த வேண்டும். வர்த்தகங்கள் இந்த இணைய முகவரியில் உள்ள ‘அனுமதிகள் மற்றும் மனிதவள பிரகடனம்’ என்ற பொத்தானை அழுத்தி உடனடியாகத் தெரியப்படுத்தலாம்.


4) ஜூன் 2ஆம் தேதி எனது நிறுவனம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கலாம் என்பதை உறுதிப்படுத்த மின்னஞ்சல் அல்லது கடிதம் வருமா?

இல்லை. வராது.

உங்கள் தொழிலைத் தொடங்குவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், bizfile.gov.sg என்ற இணையத்தளத்தை நாடவும். உங்களது தொழில் வகை குறித்து அறிய உங்கள் CorpPass மூலம் சிங்கப்பூர் தரநிலை தொழில்துறை வகைப்பாடு (SSIC) குறியீட்டைப் பெறவும். நீங்கள் உள்நுழைந்ததும் உங்கள் SSIC குறியீட்டைப் பெற முடியும். அதைக்கொண்டு COVID GoBusiness இணையத்தளத்தில் அனுமதிக்கப்பட்ட வர்த்தகங்களின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


5) அனுமதிக்கப்பட்ட வர்த்தகங்களின் பட்டியலில் எனது தொழில் இடம்பெற்று இருந்தாலும் எனது ஊழியர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டுமா?

ஆமாம். அனைத்து வர்த்தகங்களும் வேலையிடத்தில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கையை, தொழில் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் https://covid.gobusiness.gov.sg என்ற இணையத் தளத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறும் வர்த்தகங்கள் கொவிட்-10 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தை மீறியவையா கும். முதல் தடவை குற்றம் புரிந்தவர் களுக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு $20,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


6) நான் சமர்ப்பிக்க வேண்டிய ஊழியர் விவரங்கள் யாவை?

பணியிடத்தில் வேலைபார்க்கும் ஊழியர் எண்ணிக்கையை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். அதோடு, நிறுவனங்கள் வேலை ஏற்பாடுகளுடன் கூடிய ஊழியர்களின் விவரங்களை வைத்திருக்க வேண்டும்

இதில் மாறுபட்ட நேரங்கள் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள், அவர்கள் வேலையிடத்துக்கு வரும் மற்றும் அங்கி ருந்து கிளம்பும் நேரம், ஓய்வு நேரம், அவர்களது குழுப் பிரிவுகள் ஆகியவை அடங்கும். நிறுவனங்கள் இந்த விவரங் களை COVID GoBusiness இணையத் தளம் வழியாக சமர்ப்பிக்கத் தேவை யில்லை. ஆனால் வேண்டுகோளின் பேரில் இந்த விவரங்களை அமலாக்க அதிகாரிகளுக்குக் காட்ட வேண்டும்.

2020 ஜூன் 2ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படக்கூடிய சேவைகளின் பட்டியலுக்கு:

https://covid.gobusiness.gov.sg/guides/permittedserviceslist.pdf

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள், துறை சார்ந்த விதிமுறைகளுக்கு:

https://covid.gobusiness.gov.sg/safemanagement/general (“பாதுகாப்பு நிர்வாக நிபந்தனைகள்”)

வருகைப் பதிவின் தகவல்களுக்கு:

go.gov.sg/safeentry-visitor-management-system

ஏனைய ஆதரவு நடவடிக்கைகள் பற்றி அறிய:

covid.gobusiness.gov.sg

கேள்விகள் உள்ளனவா?

அழையுங்கள்: 6898 1800

நேரடித் தொலைபேசி சேவை செயல்படும் நேரம்:

காலை 8.30 மணி மாலை 5.30 மணி (திங்கள்- வெள்ளி)

காலை 8.30 மணி - பிற்பகல்

1 மணி (சனிக்கிழமை)

*பொது விடுமுறை நாட்களில் செயல்படாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!