சுடச் சுடச் செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகள்

மனிதவளம் அதிகமாகவோ குறைவாகவோ உள்ள முதலாளிகள், மற்ற முதலாளிகளிடம் அவர்களின் நிலைமையைத் தெரிவித்து, மனிதவளத்தை முதலாளிகளுக்கிடையே பகிரும் திட்டங்களை வகுக்க அரசாங்கம் நீண்டகாலமாகவே சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

“பணிகளைத் தொடர முடியவில்லை என்றால் ஊழியர்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா என்ற மதிப்பீட்டை முதலாளிகளும் ஊழியர்களும் செய்ய வேண்டிய நேரம் வரும். அது ஒவ்வொரு நிறுவனத்தையும் பொறுத்துள்ளது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் நியாயமான நடைமுறைகள் எதிர்பார்க்கப்படும்.

“ஊழியர்களின் சூழ்நிலைகளைக் கருதி அவர்களுக்கு முடிந்தவரை உதவி வழங்க வேண்டும்,” என்றார் அமைச்சர் டியோ.

ஒரு துறையில் இருக்கும் முதலாளி தனது தொழிலைப் பேண முடியவில்லை என்றாலும் மற்ற துறைகள் சார்ந்த தொழில்களும் பேண முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று அமைச்சர் கூறினார்.

மேலும் மனிதவளம் தேவைப்படும் துறைகளைக் கண்டறிந்து அந்தத் துறைகளுக்கு ஊழியர்களை மாற்றும் வாய்ப்பை முதலாளிகளுக்கு வழங்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பு குறித்த தமிழ் முரசின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

முதலாளிகளுக்கான கட்டண தள்ளுபடி உதவிகள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. பணி களைத் தொடர முடியாத முத லாளிகளுக்கு இதே கட்டண உதவி கள் ஜூலை மாதத்திலும் வழங் கப்படும் என்றார் அவர்.

சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பும் ஊழியர்களைத் திருப்பி அனுப்பும் ஏற்பாடுகளை வெளிநாடு களுடன் இணைந்து அரசாங்கம் வழி நடத்தும் என்றார் அமைச்சர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon