அமைச்சர் வோங்: ஒன்றுகூடுவதால் ஏற்படும் அபாயம் அதிகம்

சமூக ஒன்றுகூடல்கள் வேறு அளவிலான கிருமித்தொற்று அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் முறியடிப்புத் திட்டம் நிறைவடைந்த நிலையில், இப்போது முதற்கட்டத் தளர்வு நடப்பில் இருந்து வருகிறது.

இந்தக் காலகட்டத்தில் பெற்றோரை அல்லது தாத்தா-பாட்டியைச் சென்று பார்க்கலாம் என்றாலும் ஒரு நாளைக்கு இருவர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு இடைவெளி விதி தளர்த்தப்பட்டுவிட்டது.

இதைத் தொடர்ந்து, முதற்கட்டத் தளர்வின்போது பொதுப் போக்குவரத்தில் மற்ற பயணிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது அனுமதிக்கப்படுவது ஏன் என்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக சந்திப்புகள் அனுமதிக்கப்படாதது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நேற்றைய அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது பதிலளித்த அதன் இணைத் தலை வரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான திரு வோங், இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

ஆனால், அந்தச் சூழல்களும் அதனால் ஏற்படும் அபாயங்களும் வேறு வேறு என்றார் அமைச்சர்.

“பொதுப் போக்குவரத்தில் நீண்ட நேரம் பயணம் செய்யப்போவது இல்லை. அவை நிலையற்ற அபாயங்கள். ஆனாலும் கூடுதல் முன்னெச்சரிக்கைகளுடன் அந்த அபாயங்களைக் குறைக்கவும் பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும் முடியும்.

“ஆனால், சமூக ஒன்றுகூடல்கள் ஒட்டுமொத்தமாக வேறு அளவிலான அபாயத்தை விளைவிக்கின்றன. உரையாட, கலந்துறவாட, சேர்ந்து உண்ண நாம் ஒன்றுகூடும்போது அபாயத்தின் அளவு அதிகமாக இருக்கிறது,” என்று திரு வோங் விளக்கினார்.

சமூக ஒன்றுகூடல்கள் போன்ற சில நிகழ்ச்சிகள் மூலம் அதிக அளவில் கொவிட்-19 கிருமி பரவியதை சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ந்த சில சம்பவங்கள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!