துணைப் பிரதமர்: சிங்கப்பூர் செல்லும் பாதையை பொதுத் தேர்தல் தீர்மானிக்கும்

அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிங்கப்பூர் செல்லும் பாதையை எதிர்வரும் பொதுத் தேர்தல் தீர்மானிக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

“தேர்தல் என்பது இனிசெல்லும் பாதையைத் தீர்மானிப்பது பற்றியது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் பிசினஸ் டைம்ஸ் நாளிதழ்களுக்கு அளித்த போட்டியில் அவர் கருத்துரைத்தார்.

சிங்கப்பூர் எதிர்கொள்வதற்கு குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதைச் சுட்டிய திரு ஹெங், அடுத்த 10 ஆண்டு காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சொன்னார்.

“ஒரு தலைமுறைக்கான சோதனையாக கொவிட்-19 திகழ்ந்தால், அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நமது தலைமுறை இந்தச் சோதனையை எவ்வாறு மீண்டுவரப் போகிறது என்பதிலேயே சவால் அடங்கியுள்ளது.

“அரசியலையும் தேர்தலையும் தாண்டி, சிங்கப்பூரர்கள் இந்த ஒரு விவகாரத்தில் கவனம் செலுத்துவர் என நம்புகிறேன். ஒரே மக்களாக நாம் எப்படி ஒன்றாக இருக்கப் போகிறோம் என்பது பற்றியதே அது,” என்றார் திரு ஹெங்.

கொவிட்-19 நிலவரத்தை சிங்கப்பூர் அரசாங்கம் கையாண்ட விதத்தின் விளைவாக தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, “அதை சிங்கப்பூரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் பதிலளித்தார்.

“மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் தற்போதைய சூழலில் நமது சமுதாயத்தை எப்படி ஒன்றுதிரட்டுகிறோம் என்பதே நாம் அனைவருக்கும் முக்கிய சவால்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் இன்னும் ஒரு சில வாரங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் திரு ஹெங் மேற்கண்ட கருத்துகளைக் கூறியுள்ளார்.

கொவிட்-19 பல தரப்புகளுக்கும் “திடீர் அதிர்ச்சியை” ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், இதனால் எழுந்துள்ள சவால்களை சிங்கப்பூர் கையாளும் விதத்தைப் பொறுத்து நீண்டகாலத்திற்கு நாடு செல்லும் பாதை தீர்மானிக்கப்படும் என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!