1,200 சிங்கப்பூரருக்கு ஓட்டுநர் வேலை

சிங்கப்பூரில் பொதுப் பேருந்து போக்குவரத்துச் சேவைகளை நிர்வகித்து நடத்தும் நான்கு நிறுவனங்கள், இந்த ஆண்டில் 1,200 சிங்கப்பூரர்களைப் பேருந்து ஓட்டுநர் வேலைகளில் சேர்க்க திட்டமிடுகின்றன.

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று ‘ஸூம்’ செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 90 சிங்கப்பூரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் டாக்சி ஓட்டுநர்களாக அல்லது தனியார் வாடகை கார் ஓட்டுநர்களாக வேலை பார்த்தனர்.

இன்றைய தேதியில், 300 பேருக்கும் அதிக ஓட்டுநர்கள் வேலையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் கலந்துகொண்ட செய்தியாளர் கூட்டத்தில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பிரமுகர்களும் பொதுப் பேருந்து தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.

போ கியான் தெக் என்பவர் 19 ஆண்டுகளாக டாக்சி ஓட்டி வந்தவர். இவர் பேருந்து ஓட்டுநர் வேலைக்கு மாறிவிட்டார். இவரைப் போன்ற இதர ஒன்பது ஓட்டுநர் பயிற்சியாளர்களும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பேருந்து ஓட்டுநர் வேலைக்கு வந்தது ஏன் என்பதைத் திரு போ விளக்கினார்.

கொவிட்-19 காரணமாக டாக்சி தொழிலில் வருமானம் 40 விழுக்காடு வரை படுத்துவிட்டதாகக் கூறிய அவர், தனியார் வாடகை கார் சேவையைப் பொறுத்தவரையில் போட்டி அதிகரித்துவிட்டது என்றார். கார் வாடகை, பெட்ரோல் செலவு எல்லாவற்றையும் கழித்துவிட்டு பார்க்கும்போது மிச்சம் எதுவுமே தேறாது என்று அவர் குறிப்பிட்டார்.

பேருந்து ஓட்டுநராகச் சேர்ந்திருப்பதால் நிலையான வருமானத்திற்கு வழி ஏற்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

அவர், கோ அஹெட் சிங்கப்பூர் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, டவர் டிரான்சிட் சிங்கப்பூர் ஆகியவை இதர நான்கு பொதுப் பேருந்து நிறுவனங்கள்.

பேருந்து ஓட்டுநராக வேலை பார்க்கும்போது சேவைத் தரங்களை நிலைநாட்டி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை பயிற்சியின்போது தெரிந்துகொண்டதாக திரு போ கூறினார்.

கொவிட்-19 காரணமாக பல சிங்கப்பூரர்களும் வேலை இழந்து இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர்களை வேலையில் சேர்க்க நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்றார் அமைச்சர்.

இங்கு இப்போது 10,000 பேருந்து ஓட்டுநர்கள் உள்ளனர். அவர்களில் சிங்கப்பூரர்களும் வெளிநாட்டினரும் அடங்குவர்.

இதனிடையே, 2016க்கும் 2019க்கும் இடையில் பேருந்து ஓட்டுநர் வேலையில் 600 பேருக்கும் அதிக உள்ளூர்வாசிகள் சேர்ந்து இருப்பதாக தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மெல்வின் யோங் தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநருக்கான சம்பளம் 2016 முதல் 20 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் கூடி இருக்கிறது. 2015ல் சுமார் $1,650 ஈட்டிய ஓட்டுநர்கள் இப்போது $2,000 சம்பளம் பெறுகிறார்கள் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!