(காணொளி) கனமழை காரணமாக சிங்கப்பூரின் சில பகுதிகளில் வெள்ளம்

கனமழை காரணமாக சிங்கப்பூரின் சில பகுதிகளில் இன்று (ஜூன் 23) காலை வெள்ளம் ஏற்பட்டது. 

ஜூரோங் டவுன் ஹால் ரோடு, ஓபெரா எஸ்டேட், பிடோக் நார்த் அவென்யூ 4 மற்றும் அப்பர் சாங்கி ரோடுக்கு இடைப்பட்ட பகுதி, நியூ அப்பர் சாங்கி ரோடு ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் காணப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.

இன்று காலை 8.30 வெள்ளம் ஏற்பட்டதாக தேசிய தண்ணீர் அமைப்பான அது தெரிவித்தது.

“அந்தப் பகுதிகளில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் உடனடி செயல்பாட்டுக் குழு (Quick Response Team) பணியமர்த்தப்பட்டனர்.  காலை 9.20 மணிக்குள்ளாக அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் வடிந்தது,” என்று ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.

சமூக ஊடகங்களில் பதிவான காணொளிகளில் பிடோக் கெனாலில் தண்ணீர் நிரம்பியிருந்ததையும் டோக் நார்த் அவென்யூ 4 மற்றும் அப்பர் சாங்கி ரோடுக்கு இடைப்பட்ட பகுதியில், சாங்கி தீயணைப்பு நிலையத்துக்கு அருகில் இரண்டு வாகனங்கள் மூழ்கியிருந்ததையும் காண முடிந்தது. 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online