வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரிப்பு

கொவிட்-19 சூழலிலும் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் இவ்வாண்டின் 2வது காலாண்டில் முதல் காலாண்டைவிட சற்று அதிகரித்தது. மறுவிற்பனை வீட்டு விலை குறியீடு 131.8. முன்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 விழுக்காடு அதிகம் என்று வீவகவின் மதிப்பீடு கூறுகிறது. இவ்வாண்டு முதல் காலாண்டில் விலை ஒரே நிலையில் இருந்தது. இந்த நிலையில் முழுமையான புள்ளி விவரங்கள் இம்மாதம் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று வீவக தெரிவித்தது. ஆகஸ்டு மாதத்தில் அங் மோ கியோ, பீஷான், சுவா சூ காங், கேலாங், பாசிர் ரிஸ், தெம்பனிஸ், தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் மேலும் 7,800 வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்படும். பீஷான், செம்பவாங், தெம்பனிஸ், தெங்கா, தோ பாயோ ஆகிய இடங்களில் நவம்பரில் மேலும் 5,700 வீடுகள் விற்கப்படும். இவற்றில் சுவா சூ காங், தெம்பனிஸ் நார்த், தெங்கா ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்கு காத்திருப்பு நேரம் குறைவாக இருக்கும் வீவக குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!