சான்: சுற்றுப்பயணத்துறை புதுப்பிப்பு அவசியம்

கொரோனா கிருமித்தொற்றால் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் சவால்களை முறியடிக்க சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

‘சுற்றுப்பயணத்துறை மீட்பு’ எனும் தலைப்பையொட்டி நடத்தப்பட்ட மெய்நிகர் கலந்துரையாடலில் பேசிய அமைச்சர் சான், சுற்றுப்பயணத்துறை மீண்டு வர அரசாங்கம் உதவி செய்யும் என்று தெரிவித்தார்.

சுற்றுப்பயணத்துறைக்கு உதவி செய்ய வகுக்கப்பட்டுள்ள

குறுகியகாலத்திலிருந்து நீண்டகாலத்துக்கான திட்டங்களை அமைச்சர் சான் கலந்துரையாடலின்போது மேற்கோள்காட்டினார்.

உயர்மட்ட பயணிகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்குச் சேவையாற்ற சிங்கப்பூருக்குக் கூடிய விரைவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

எப்போதும்போல பயணிகள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் மட்டும் அவர்களுக்குச் சேவையாற்றுவதற்குப் பதிலாக, பயணத்துக்கு முன்பு தேவைப்படும் சேவைகளையும் பயணத்துக்குப் பிறகு தேவைப்படும் சேவைகளையும் வழங்கும் அளவுக்கு சிங்கப்பூரின் சுற்றுப்பயணத் துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்றார் திரு சான். பயணிகள் தங்கள் பயணத்தைப் பாதுகாப்பாகத் தொடர, அவர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்களுடன் தொடர்புகொள்வது அவசியம் என்றார் அமைச்சர் சான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!