கடற்பாலத்தின் நடுவில் சந்தித்துப் பேசிய சிங்கப்பூர்-மலேசிய வெளியுறவு அமைச்சர்கள்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாடுகள் இன்று உறுதி செய்யப்பட்டன.
இருநாடுகளுக்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாட சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் கடற்பாலத்தின் நடுவில் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் உசேனை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று சந்தித்துப் பேசினார்.

அதையடுத்து, அவர் உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச்சாவடியில் செய்தியாளர்களைச் சந்தித்து இருவழிப் பயண ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தார். நீண்டகாலக் குடிநுழைவு அனுமதி பெற்றிருப்போர், அத்தியாவசிய அல்லது அதிகாரபூர்வப் பயணங்களை மேற்கொள்பவர்கள் ஆகியோர் இருநாடுகளுக்கிடையே தடையின்றி பயணம் செய்ய போக்குவரத்து ஏற்பாடுகள் வகை செய்யும் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 10ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இருவழித் தடையற்ற பயணமுறை, அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு தொடர்பான நடைமுறை விவரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இருவழித் தடையற்ற பயணமுறைக்குத் தகுதி பெறுவோர் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது, தங்கள் பயணத் திட்டங்களைச் சமர்ப்பிப்பது போன்ற விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்றார் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.
இது ஒரு புறம் இருக்க, வேலை மற்றும் வர்த்தக நிமித்தம் நீண்டகாலக் குடிநுழைவு அனுமதி பெற்றிருக்கும் சிங்கப்பூரர்களும் மலேசியர்களும் இருநாடுகளுக்கிடையே பயணம் செய்ய அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு வழிவகுக்கும் என்றார் அவர்.

மேல் விவரங்கள் நாளைய அச்சுப்பிரதியில்...

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!