விவியன்: ஹெங் சுவீ கியட்டை முழுமையாக ஆதரிக்கிறோம்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் தலைமைத்துவத்துக்கு நான்காம் தலைமுறை அமைச்சர்களின் முழு ஆதரவு இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பட்டது.

அரசாங்கத்தின் சிறப்பான பணிகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் அமைச்சரவைப் பதவி வகிப்பவர்கள் வெவ்வேறு துறைகளில் அனுபவங்கள் பெற வேண்டும் என்பதற்காகவும் அமைச்சரவையைப் புதுப்பிப்பதற்காகவும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருந்ததை வெளியுறவு அமைச்சர் மறுஉறுதி செய்தார்.

“அமைச்சரவையில் பிரதமர் செய்துள்ள மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தால் இந்த மூன்று கூறுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருப்பது நன்கு தெரியவரும்,” என்றார் அவர்.

நான்காம் தலைமுறை அமைச்சர்களில் தாமும் ஒருவர் என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரதமர் பதவியிலிருந்து திரு லீ சியன் லூங் விலகும்போது அப்பதவியை தற்போது துணைப் பிரதமராக இருக்கும் திரு ஹெங் சுவீ கியட் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சராகவும் இருக்கும் துணைப் பிரதமர் ஹெங்கிற்கு பொருளியல் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

“நான்காம் தலைமுறை அமைச்சர்கள் அனைவரும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் தலைமைத்துவத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். எனவே இதுகுறித்து எந்த கலந்துரையாடல்களுக்கும்

கேள்விகளுக்கும் தேவையிருக்காது.

“நாங்கள் அனைவரும் ஒருமனதாக அவரது தலைமைத்துவத்தை ஆதரிக்கிறோம்,” என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் புதிய தலைமைத்துவத்துக்கான மக்கள் செயல் கட்சியின் திட்டம் குறித்து பேசப்பட்டது.

திரு ஹெங்கைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வது குறித்து நான்காம் தலைமுறை அமைச்சர்கள் தங்களுக்கிடையே கலந்துரையாடியிருக்கிறார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், அதுகுறித்து நான்காம் தலைமுறை அமைச்சர்கள் கலந்துரையாடியது இல்லை என்றும் இனி கலந்துரையாட திட்டம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் எதிர்கொள்ளும் பொருளியல் சவால்களை முறியடிப்பதிலும் சிங்கப்பூரர்களின் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவதிலும் எங்கள் முழு கவனம் இருக்கிறது,” என்றார் அமைச்சர் சான்.

நான்காம் தலைமுறை அமைச்சர்களில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள லாரன்ஸ் வோங்கும் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஓங் யி காங்கும் தேசிய வளர்ச்சி அமைச்சராகும் டெஸ்மண்ட் லீயும் அடங்குவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!