வேலையிழப்பு சூழலை ஆராய்வதற்கு தேசிய சம்பள மன்றம் கூடுகிறது

கொரோனா கிருமித்தொற்று வேலைவாய்ப்புகளைப் பாதித்து வரும் வேளையில் தேசிய சம்பள மன்றம் கூடி நிலைமையை ஆராயப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்ளேனத் தலைவர் ராபர்ட் யாப் ஆகியோரைச் சந்தித்தபின் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதைத் தெரிவித்தார்.

“இந்த இக்கட்டான காலகட்டத்தில் தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகியோரின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும். பொருளியல், வேலைகள் தொடர்பாக அணுக்கமாக கலந்தாலோசிப்போம்,” என்றார் திருவாட்டி டியோ.

அரசாங்கம், ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மன்றம் இவ்வாண்டின் முற்பகுதியில் கூடி விவாதித்துள்ள நிலையில் தற்பொழுது அது மீண்டும் கூடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. பொதுவாக மே மாத இறுதியில் தனது பரிந்துரைகளை வெளியிடும் தேசிய சம்பள மன்றம் இவ்வாண்டு தனது பரிந்துரைகளை மார்ச் மாதம் 30ஆம் தேதியே வெளியிட்டிருந்தது.

அதன்படி, பல முதலாளிகள் தங்களிடையே அதிகமாக இருக்கும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்காமலிருக்க அவர்களை நீக்குப்போக்கான பணியில் அமர்த்தினர். மேலும், அவர்கள் வேலை செய்யாத நேரத்தை அவர்களிடமிருந்து வரவேண்டிய வேலையாக கணக்கில் கொண்டு அவர்களுக்கு முழுச் சம்பளத்தை அளித்தனர். கூடுதல் நேர வேலைக்கான படித்தொகையை இழந்தோர் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள இன்னொரு வேலையில் இருக்க அனுமதித்தும் பல முதலாளிகள் நிலைமையைச் சமாளித்தனர்.

இதன் தொடர்பில், ஊழியர்களின் சம்பளத்தைப் பாதிக்கக்கூடிய தங்களது செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் பற்றி சுமார் 3,600 முதலாளிகள் மனிதவள அமைச்சுக்குத் தெரியப்படுத்தினர். இதன் மூலம் கிட்டத்தட்ட 150,000 வேலைகள் காப்பாற்றப்பட்டதாக திருவாட்டி ஜோசஃபின் டியோ விளக்கினார்.

இதில், பெரும்பாலான முதலாளிகள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், பல சந்தர்ப்பங்களில் தமது அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்து முதலாளிகள், ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் ேநாக்கில் தங்கள் ஆரம்பகட்ட திட்டங்களை மாற்றினர் என்றார்.

“எனினும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான பொருளியல் சிரமங்களும் நிச்சயமற்ற சூழலும் தொடர்கின்றன. விற்பனைச் சந்தையில் தேவை குைறந்து வருவதால், பல முதலாளிகள் ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய வேண்டிய நெருக்குதலை எதிர்கொள்வர். எனவே, சம்பளம் தொடர்பாக அரசாங்கம், முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்பினரின் நிலையைத் தெரிவிப்பதுடன் முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகியோர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்,” என்று கூறினார் திருவாட்டி டியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!