என்டியுசி என்டர்பிரைஸ் அமைப்புடன் சேர்ந்து ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி முடிவு சிங்கப்பூரில் மின்னிலக்க வங்கியை ஏற்படுத்த திட்டம்

சிங்­கப்­பூ­ரில் மின்­னி­லக்க ரீதியில்­ஆன சேவை­களை மட்­டும் வழங்­கும் வங்­கியை ஏற்­ப­டுத்த பிரிட்­ட­னின் ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட் வங்கி திட்­ட­மி­டு­கிறது. தொழி­லா­ளர் இயக்­கத்­தின் சமூக நிறு­வனங்­களில் தனித்த, ஆகப்­பெ­ரிய அமைப்­பான ‘என்­டியுசி என்டர்பிரைஸ்’ நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து இந்த வங்­கியை அமைக்க ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட் முடிவு செய்து இருப்­ப­தாக தக­வல் அறிந்த வட்­டங்­கள் தெரி­வித்­துள்­ளன.

புதிய வங்­கி­யில் ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட் பெரும்­பான்மை பங்குகளைக் கொண்டு இருக்­கும். மற்­றவை என்­டி­யுசி என்டர் பிரைஸிடம் இருக்­கும். இந்த விவ­கா­ரம் இன்­ன­மும் ரக­சி­ய­மா­கவே இருக்­கிறது. ஆகை­யால் இந்­தத் தக­வல்­க­ளைத் தெரி­வித்­த­வர்­கள் தங்­கள் விவ­ரங்­களை வெளி­யிட விரும்­ப­வில்லை.

தொழிலாளர் இயக்­கம் பல சமூக நிறு­வ­னங்­க­ளைக் கொண்­டி­ருக்­கிறது. என்­டி­யுசி ஃபேர்பிரைஸ், என்­டி­யுசி ஃபர்ஸ்ட் கேம்­பஸ், என்டியுசி ஃபுட்ஃபேர், கோப்­பி­தியாம், என்­டி­யுசி ஹெல்த், என்டியுசி இன்­கம், என்­டி­யுசி லேர்­னிங்­ஹப் ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

இந்த அமைப்­பு­களில் எல்­லாம் தனித்த ஆகப் பெரிய நிறு­வ­ன­மாக என்­டி­யுசி என்­டர்­பி­ரைஸ் திகழ்­கிறது. இந்­தப் புதிய வங்கி தொடர்­பான தொழில்­முறை காரி­யங்­க­ளைக் கவ­னிக்க ஆஸ்­தி­ரே­லி­யா­வின் புதிய ‘ஜூடோ பேங்க்’ என்ற வங்கி­யின் இணை நிறு­வ­ன­ரான அலெக்ஸ் டுவிக் நிய­மிக்­கப்­பட்டு இருக்­கி­றார்.

ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட்-என்­டியுசி என்­டர்­பி­ரைஸ் மின்­னி­லக்க வங்கிக்கு ‘புரோ­ஜெட் ஃபோனிக்ஸ்’ என்று பெய­ரி­டப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அந்­தத் தக­வல் வட்­டா­ரங்­கள் குறிப்­பிட்­டன. ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட் வங்கி சிங்­கப்­பூ­ரில், டிபி­எஸ் குழு­மம் போன்ற போட்டி நிறு­வ­னங்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் தன்­னு­டைய மின்­னி­லக்­க­மய உத்­தி­களை வேகப்­ப­டுத்தி வரு­கிறது.

‘கிராப்’ போன்ற வங்கி அல்­லாத இதர நிறு­வ­னங்­களும் ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட் வங்­கிக்குக் கடும் போட்டியாக தலை எடுத்துள்ளன.

கிராப் நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரில் மின்­னி­லக்க உரி­மம் ஒன்றைப் பெறு­வ­தற்கு விண்­ணப்­பித்து இருக்­கிறது. வங்கி சாராத இதர நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த ஆண்­டில் இத்­த­கைய ஐந்து உரி­மங்­களை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வழங்­கும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட்-என்­டியுசி என்­டர்­பி­ரைஸ் வங்கி திட்­டம் பற்­றிய பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து வரு­கின்­றன என்­றும் அந்த வட்­டா­ரங்­கள் குறிப்­பிட்டுள்ளன.

இந்த இரண்டு அமைப்­பு­களும் சேர்ந்து சிங்­கப்­பூ­ரில் அமைக்­க­விருக்­கும் மின்­னி­லக்க வங்கி ஆசி­யா­வில் ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட் ஏற்­ப­டுத்­தும் இரண்­டா­வது மின்­னி­லக்க வங்­கி­யாக இருக்­கும்.

ஹாங்­காங்­கில் ‘மோக்ஸ்’ என்ற மின்­னி­லக்க வங்­கியை நடத்­து­வதற்­கான உரி­மையை ஹாங்­காங்­கின் உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து ஸ்டான்­டர்ட் சார்ட்­டர்ட் ஏற்­கெ­னவே பெற்று இருக்­கிறது. என்­றா­லும் இந்­தச் சேவை இன்­ன­மும் முழு­மையாக நடப்­புக்கு வர­வில்லை.

ஆப்பிரிக்காவில் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி பல மின்னிலக்க வங்கிகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!