சிங்கப்பூரில் மேலும் 54 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 8 சம்பவங்கள்

சிங்கப்பூரில் மேலும் 54 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 8 சம்பவங்கள்

1 mins read
a1923f0e-ced6-4c9c-b990-a2e24ed80075
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 30) நண்பகல் நிலவரப்படி புதிதாக 54 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,771 ஆகியுள்ளது.

இன்று உள்ளூர் சமூகத்தில் 8 பேருக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஒருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்; மற்ற எழுவரும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று அமைச்சின் முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

குறிப்புச் சொற்கள்