சுடச் சுடச் செய்திகள்

பல சமயத் தலைவர்களின் அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கு

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் காலத்­தில் சம­யங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்­தும் தற்­போ­தைய சூழ­லின் அனு­ப­வங்­க­ளை­யும் கண்­ணோட்­டங்­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்­ள­வும் அனைத்­து­லக மெய்­நி­கர் கருத்­த­ரங்கு சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னத்­தின் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 11ஆம் தேதி வெள்­ளிக்­கி­ழமை இரவு 7.30 மணிக்கு நடை­பெ­றும் மெய்­நி­கர் கருத்­த­ரங்­கில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­கி­றார்.

பல நாடு­க­ளைச் சேர்ந்த ஏழு அனைத்­து­லக பேச்­சா­ளர்­களும் மூன்று உள்­ளூர் பேச்­சா­ளர்­களும் இந்­தக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

இந்­தி­யா­வைச் சேர்ந்த பிர­பல எழுத்­தா­ள­ரும் தன்­மு­னைப்­புப் பேச்­சா­ள­ரு­மான சுகி சிவம், சென்னை எம்.ஜி.ஆர் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் துறைத் தலை­வர் டாக்­டர் டி. கமால் ‌‌ஷரீஃப் அனைத்­து­ல­கப் பேச்­சா­ளர்­க­ளா­கக் கலந்­துக்­கொள்­கின்­ற­னர்.

இந்­தாலி தலை­ந­கர் ரோம், சுவிட்­சர்­லாந்து, அமெ­ரிக்­கா­வின் சிக்­காகோ, தாய்­லாந்து போன்ற நாடு களி­லி­ருந்­தும் நகர்­க­ளி­லி­ருந்­தும் பேச்­சா­ளர்­கள் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் அனைத்­துச் சமய மன்­றத்­தின் முன்­னாள் தலை­வர் தூதர் கே.கேச­வ­பாணி, மன்­றத்­தின் கௌர­வச் செய­லா­ளர் தெரேசா சியாவ், சிங்­கப்­பூர் பௌத்த சம்­மே­ள­னத்­தின் தலை­வர் செக் குவான் ஃபிங், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முன்­னாள் பேரா­சி­ரி­யர் டாக்­டர் ஹுசேன் முத்­தா­லிப் ஆகி­யோர் சிங்­கப்­பூர் பேச்­சா­ளர்­க­ளா­கக் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் காலத்­தில் சம­யத் தலை­வர்­க­ளின் பங்கு என்ற கருப்­பொ­ரு­ளைக் கொண்ட கருத்­த­ரங்­கில் பல சம­யத் தலை­வர்­கள், வழி­பாட்­டா­ளர்­கள், நல்­லி­ணக்க ஆர்­வ­லர்­கள், அர­சாங்க அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள், முனை­வர்­கள், மாண­வர்­கள், இளை­யர்­கள், குடும்­பங்­கள் என பல தரப்­பி­ன­ரும் கலந்­து­கொள்ள அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அனைத்­து­லக மெய்­நி­கர் கருத்­த­ரங்கு jamiyahsg எனும் ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் Jamiyah Singapore யூடி­யூப் தளத்­தி­லும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­படும்.

கடந்த 1932ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னம் சம­யங்­க­ளுக்­கி­டையே புரிந்­து­ணர்வை வலுப்­ப­டுத்­த­வும் முக்­கிய அம்­சங்­கள் குறித்து பிணைப்பை ஏற்­ப­டுத்­த­வும் தொடர்ந்து ஆற்றி வரும் சேவை­யின் ஓர் அங்­க­மாக இந்த அனைத்­து­லக மெய்­நி­கர் கருத்­த­ரங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

“மக்­கள் வாழ்­வின் எல்­லாத் துறை­க­ளை­யும் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ கொரோனா நோய்த்­தொற்று பாதித்­துள்­ளது. சிங்­கப்­பூர் உள்­ளிட்ட அர­சாங்­கங்­கள் இந்­தச் சவாலை எதிர்­கொள்­ள­வும் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­ப­வும் ஆவன செய்­து­ வ­ரு­கின்­றன. இந்­தச் சவால் நிறைந்த சூழ­லில் சம­யத் தலை­வர்­க­ளின் பங்கு என்ன என்­பதை சிந்­திக்­க­வும், செய­லாற்­ற­வும் இந்த உல­க­ளா­விய மெய்­நி­கர் கருத்­த­ரங்கு ஏற்­பாடு செய்­யப்பட்டு உள்ளது,” என்­றார் இந்த அனைத்­து­லக கருத்­த­ரங்கை வழி­ந­டத்­த­ விருக்­கும் ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­வ­னத்­தின் துணைத் தலை­வர் டாக்­டர் எச்.எம். சலீம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon