கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 3 இடங்கள்

கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 3 இடங்கள்

1 mins read
c216e5af-d19d-4c35-ae52-165611c88dfb
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், லியன்ஹ சாவ் பாவ் -

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பள்ளி, பல்கலைக்கழகத்தின் நார்த் ஸ்பைன் பிளாசாவில் இருக்கும் கொரிய உணவகமான பைக்ஸ் பிபிம், நார்த் ஸ்பைன் உணவகம் உட்பட பல்கலைக்கழகத்தின் பல இடங்களுக்கு, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்) கடந்த மாதம் 25 முதல் 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்று வந்ததாக நேற்று (செப்டம்பர் 8) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

யூஹுவா சந்தை மற்றும் உணவங்காடி நிலையம், தி பினக்கிள்@டக்ஸ்டனில் உள்ள எஸ்ஸென் உணவகம், ஜெம் கடைத்தொகுதியில் உள்ள அபுஜியோங் முடி திருத்தகம் ஆகிய இடங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்