கேலி வதையால் தேசிய சேவையாளர் உயிரிழந்த சம்பவம்: இரண்டு அதிகாரிகளுக்கு தலா 10 வாரச் சிறை

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் தாங்­கள் பணி­பு­ரிந்த துவாஸ் வியூ தீய­ணைப்பு நிலை­யத்­தில் நிகழ்ந்த கேலி­ வதை சம்­ப­வம் தொடர்­பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த கடைசி இரண்டு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று தலா 10 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நீதி­மன்ற விசா­ர­ணைக்­குப் பிறகு, 42 வயது திரு நஸான் முகம்­மது நாஸி, 2018ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி இரவு தேசிய சேவை­யா­ளர் ஒரு­வர் மீது இதர படை வீரர்­கள் நடத்­திய கேலி வதை சம்­ப­வத்­தைத் தடுக்­கத் தவ­றி­னார் என்ற குற்­றம் கடந்த மாதம் நிரூ­ப­ண­மா­னது.

திரு நஸான் சம்­ப­வம் நடந்­த­போது துவாஸ் வியூ தீய­ணைப்பு நிலை­யத்­தின் துணைத் தலை­வரா­கப் பணி­யாற்­றி­னார்.

அதே தீய­ணைப்பு நிலை­யத்­தின் தலை­வ­ரான 40 வயது கென்­னத் சோங் சீ பூனுக்கு அதே தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

திரு சோங் இவ்­வாண்டு ஜூலை­யில் தமது குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

திரு நஸா­னின் வழக்­க­றி­ஞ­ரான திரு சிங்க ரத்­னம் தமது கட்­சிக்­கா­ரர் விதிக்­கப்­பட்ட தண்­ட­னைக்கு எதி­ராக மேல் முறை­யீடு செய்ய விரும்­பு­கி­றார் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

சம்­ப­வம் நடந்த நாளன்று, முழு நேர தேசிய சேவை­யா­ள­ரான 22 வயது கார்ப்­ப­ரல் கொக் யுவன் சின்னை 12 மீட்­டர் ஆழ­மான பயிற்­சிக் கிணற்­றுக்­குள் இறங்க அவ­ரது மேல­தி­கா­ரி­களும் சக வீரர்­களும் வற்­பு­றுத்­தி­னர்.

அவர் மறுக்­கவே, அவ­ரது சகாக்­களில் ஒரு­வ­ரான 34 வயது முகம்­மது நூர் ஃபத்வா மஹ்­முத் அவ­ரைக் கிணற்­றுக்­குள் தள்ளி விட்­டார்.

அதற்­காக, நூர் ஃபத்வா உட்­பட இந்­தப் பேரி­ட­ருக்­குக் கார­ண­மா­ன மூவருக்கு இதற்கு முன் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நூர் ஃபத்­வா­வுக்கு ஒராண்டு, நான்கு வாரச் சிறை விதிக்­கப்­பட்­டது.

நஸான், சோங் இரு­வர் மீது முன்­ன­தாக தங்களது அதி­கா­ரத்­தின் கீழ் உள்ள படை வீரர்­கள் குற்­றம் இழைக்க உத­வி­யாக இருந்­த­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. பின்­னர் அந்­தக் குற்­றச்­சாட்டு திருத்­தப்­பட்­டது.

கடந்த ஜூலை­யில் நீதி­மன்­றத்­தில் அவர்­கள் இரு­வ­ரும் சம்­ப­வம் நடந்­த­போது அந்த இடத்­தில் இல்லை என்­றும் அவர்­கள் அங்கு இருந்­தி­ருந்­தால் அந்­தப் பேரி­டர் நடப்­ப­தைத் தடுத்­தி­ருப்­பார்­கள் என்று தற்­காப்பு வழக்­க­றி­ஞர்­கள் முன்­வைத்த வாதத்தை மூத்த மாவட்ட நீதி­பதி ஓங் ஹியன் சுன் ஏற்­றுக்­கொண்­டார்.

இருப்­பி­னும், அவர்­கள் இரு­வ­ரும் தவ­றான செயல் நடக்­கா­மல் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்­பி­லி­ருந்து தவறிவிட்­ட­னர் என்று நீதி­பதி தமது தீர்ப்பில் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!