சிங்கப்பூரில் கூகல் நிறுவனத்துக்கு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை வழங்கும் செம்ப்கார்ப்

கூகல் சிங்கப்பூருக்குப் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை செம்ப்கார்ப் நிறுவனம் வழங்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் தனது தரவு மையங்கள் கரிமமற்ற மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்பதே கூகலின் இலக்கு.

இதன் காரணமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அது கூறியது.

செம்ப்கார்ப் நிறுவனத்துடன் செய்துள்ள இந்த ஒப்பந்தம் தென்கிழக்காசிய நாடுகளில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொடர்பாக கூகல் செய்திருக்கும் முதல் ஒப்பந்தம் ஆகும்.

ஒப்பந்தப்படி, ஏறத்தாழ 500 வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடங்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளிலிருந்து பெறப்படும் எரிசக்தி கூகல் சிங்கப்பூர் அலுவலகத்துக்கு வழங்கப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon