உயர்கல்வி மாணவர்களுக்கு நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் கல்வி உதவி நிதி

உயர்­கல்வி மாண­வர்­க­ளின் கல்­விச் செல­வு­க­ளைக் குறைக்க உதவு­கிறது நாகூர் தர்­கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் கல்வி உதவி நிதி.

இவ்­வாண்­டின் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­ப­டுத்­திய சவால்­களுக்கு மத்­தி­யில் தெலுக் ஆயர் வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள நாகூர் தர்கா இந்­திய முஸ்­லிம் மர­பு­டைமை நிலை­யத்­தில் இம்­மா­தம் 12ஆம் தேதி கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்­தே­றி­யது.

உயர்­கல்­வி­யில் பயி­லும் மாண­வர்­கள், குறிப்­பாக குறைந்த வரு­மான பின்­ன­ணி­யி­லி­ருந்து வரும் மாண­வர்­க­ளுக்கு கல்வி உத­வி­ நிதி வழங்­கும் நோக்­கத்­தில் பல இனத்­தை­யும் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு இந்த விரு­து­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

கிட்­டத்­தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் கல்வி, வெளி­யு­றவு இரண்­டாம் அமைச்­ச­ரு­மான முகம்­மது மாலிக்கி ஒஸ்­மான் கலந்­து­கொண்டு விரு­து­களை வழங்­கி­னார்.

‘வக்­காஃப் ஜாமிஆ’ (Wakaf Jamae) என்ற அறக்­கட்­டளை நிதி­யின் ஆத­ர­வில் இவ்­வாண்டு 25 மாண­வர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு $1,000,

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு $800, தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கங்­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு $600 என்று கிட்டத்தட்ட $21,000 மதிப்­புள்ள கல்வி நிதி நிகழ்ச்­சி­யில் வழங்­கப்­பட்­டது.

கொவிட்-19 கார­ணத்­தி­னால் பாது­காப்பு தூர இடை­வெ­ளி­யோடு நிகழ்ச்சி நடந்­தா­லும் மாண­வர்­கள், பெற்­றோர்­க­ளின் உற்­சா­கம் குறை­ய­வில்லை என்­றார் நாகூர் தர்கா இந்­திய முஸ்­லிம் மர­பு­டைமை நிலை­யத்­தின் செய­லா­ளர் திரு நசீர் கனி.

“விருது பெற்ற மாண­வர்­கள் எதிர்­கா­லத்­தில், வாழ்­வில் ஒரு நல்ல நிலையை அடை­யும்­போது, அவர்­க­ளுக்கு உத­விய சமு­தா­யத்தை திரும்­பிப் பார்க்­க­வேண்­டும். அவர்­களைப் போன்­ற­வர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்­டும் என்­பது என் வேண்­டு­கோள்,” என்­றார் திரு நசீர்.

ஏறத்­தாழ 40 விண்­ணப்­பங்­களில் 25 மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே நிதி வழங்க முடிந்­தது என்­றும் விருது பெறாத மாண­வர்­கள் மற்ற உதவி அமைப்­பு­க­ளுக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­ட­னர் என்­றும் குறிப்­பிட்­டார் திரு நசீர்.

நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் தொழில் பரி­வர்த்­தனை, நிதித் துறை­யில் பயிலும் 24 வயது முஹம்­மது இர்­ஃபா­னுல்­லாஹ் விருது பெற்­ற­வர்­களில் ஒரு­வர். தனிப்­பட்ட செல­வு­கள் உட்­பட பள்­ளிக்­கான கட்­ட­ணங்­க­ளை­யும் சுய­மா­கச் சமா­ளித்து வரு­கி­றார் அவர்.

“சேமிப்பு, வேலைப்­ப­யிற்சித் திட்­டங்­களில் சம்­பா­திப்­பது ஆகிய வழிகளில் தனி­யா­கவே என் கல்­விக்­குக் கட்­ட­ணத்­தைச் செலுத்தி வரு­கி­றேன். என் தந்­தைக்கு உடல்­நலப் பிரச்­சி­னை­கள் உள்­ளன. தாயார் முன்பு பணி­யாற்­றி­னார், தற்­போது இல்­லத்­த­ர­சி­யாக இருக்­கி­றார். அது­போக, எனக்கு மூன்று சகோ­த­ரர்­களும் உள்­ள­னர். இந்தக் கல்வி உத­வி­ நிதி எனக்­கும் என் குடும்­பத்­தா­ருக்­கும் பெரு­ம­ள­வில் உத­வும்,” என்று குறிப்­பிட்­டார் திரு இர்­ஃபா­னுல்­லாஹ்.

அதே பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உயி­ர் அறி­வி­யல் துறை­யில் பயி­லும் திரு யூசோஃப் ஃபரித், தமது சொந்­தச் செல­வு­க­ளுக்கு பகுதி நேர­மாக ‘ஃபுட்பாண்டா’ உணவு விநி­யோக ஓட்­டு­ந­ராகப் பணி­பு­ரி­கி­றார். அவ­ரும் இந்நிகழ்ச்சியில் விருது பெற்­றார்.

“சொந்­தச் செல­வு­களை நானே வேலை செய்து கவ­னித்­து­கொள்­கி­றேன். கல்­விக்­கான போக்­கு­வரத்து, உணவு என்ற அன்றாட செல­வு­க­ளுக்கு இந்த உத­வித் தொகை­யைப் பயன்­ப­டுத்­து­வேன். என் பெற்­றோர் மீதுள்ள நிதி பாரத்­தைக் குறைக்க இந்த நிதி உத­வும்,” என்­றார் 23 வயது யூசோஃப் ஃபரித்.

விருது பெற்ற தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் இரண்­டாம் ஆண்டு மாண­வ­ரான 19 வயது குமாரி பிரபா வேலா­யு­த­னும் அவ­ருக்கு கிடைத்த $800 கல்வி உதவி நிதி தமது பள்ளிக் கட்­ட­ணங்­க­ளுக்கு உத­வும் என்று­குறிப்­பிட்­டார்.

நாகூர் தர்கா இந்­திய முஸ்­லிம் மர­பு­டைமை நிலை­யத்­தின் வரு­டாந்­திர கல்வி உத­வி­ நிதி விருது வழங்கும் நிகழ்ச்சி 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து நடந்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!