மாணவியைத் தாக்கியதாக மாணவர் மீது குற்றச்சாட்டு

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த கொரிய நாட்­ட­வ­ரான கிம் தோயுங், 22, என்ற மாண­வர், பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் உள்ள தங்­கும் அறை ஒன்­றில் சென்ற ஆண்டு மார்ச் 21ஆம் தேதி ஒரு மாண­வி­யைத் தாக்கி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த மாண­வர் மீது கடந்த புதன்­கி­ழமை நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அவ­ரின் வழக்கு அக்­டோ­பர் 7ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது. இதன் தொடர்­பில் விவ­ரம் கேட்­ட­போது வழக்கு நீதி­மன்­றத்­தில் இருப்­ப­தால் மேல் விவ­ரங்­களை இப்­போ­தைக்­குத் தெரி­விக்க இய­லாது என்று இப்­பல்­க­லைக்­க­ழ­கம் கூறி­விட்­டது.

பல்­வேறு குற்­றச்­செ­யல்­கள் தொடர்­பில் உள்­ளூர் உயர்­கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த பல மாண­வர்­கள் அண்­மை­யில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாகியுள்­ள­னர். அவர்­களில் கிம் ஒரு­வர்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழக மாண­வ­ரான லீ யான் ரு என்­ப­வர், சென்ற ஆண்டு ஜன­வரி 8ஆம் தேதி அந்­தப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் ஒரு மாண­வியை மான­பங்­கம் செய்து இருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்த வழக்கு இன்­ன­மும் நிலு­வை­யில் இருக்­கிறது. லீ, 24, விசா­ரணை கோரி இருக்­கி­றார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த முன்­னாள் மாண­வ­ரான ஹான் ஷியு, 18, என்­ப­வ­ருக்கு கடந்த ஜன­வரி மாதம் நீதி­மன்­றத்­தில் இரண்டு வார தடுப்­புக் காவல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அந்­தப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் உள்ள பெண்­கள் கழி­வ­றைக்­குள் அத்­து­மீறி நுழைந்து குளித்­துக்­கொண்டு இருந்த ஒரு மாண­வியை அந்த மாண­வர் படம் எடுத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­தக் காரி­யத்தை அவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி செய்­தார். அத­னை­ய­டுத்து பல்­க­லைக்­க­ழ­கம் அவரை நீக்­கி­விட்­டது.

இத்­த­கைய குறு­கிய கால தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­ப­டு­வோர் கொஞ்ச நாட்­க­ளுக்­குச் சிறை­யில் இருப்­பார்­கள். இருந்­தா­லும் விடு­த­லை­யான பிறகு இவர்­க­ளின் பெயர் குற்­ற­வா­ளி­க­ளின் பதி­வேட்­டில் இடம்­பெற்று இருக்­காது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!