கிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்த சிங்கப்பூரருக்கு பரிசு

அனைத்துலக வடிவமைப்புப் போட்டியில் கிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்த நால்வர் கொண்ட குழுவுக்கு பரிசு கிடைத்துள்ளது.

பரிசை வென்ற நால்வரில் 23 வயது சிங்கப்பூர் மாணவரும் நான்கு வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர். அந்த மூன்று வெளிநாட்டு மாணவர்களையும் ஸூம் தொழில்நுட்பத் தளத்தில் சந்தித்து 24 மணி நேரத்தில் கிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்ததாக திரு ரயன் டியோ தெரிவித்தார்.

கிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்துக்கான வடிவமைப்பில் பேருந்தின் முழு நீளத்துக்குத் திறக்கக்கூடிய கதவு, தானியங்கி கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பம், யூவி ஒளிக்கதிரால் சுத்தம் செய்யப்படும் சுற்றும் கைத்தடி போன்ற அம்சங்கள் உள்ளன.

வழக்கமான பேருந்துச் சேவையுடன் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை இப்பேருந்து வழங்கும் என்று திரு டியோ தெரிவித்தார்.

“உலகிலேயே ஆகச் சிறந்த பொதுப் போக்குவரத்துச் சேவையைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் கிருமிப் பரவலைத் தடுக்க எந்த ஒரு பொதுப் போக்குவரத்துச் சேவையும் பொருத்தமானதாக இருக்கவில்லை,” என்று அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவரான திரு டியோ கூறினார்.

“இதைக் கருத்தில் கொண்டு எதிர்காலப் பேருந்தை நாங்கள் வடிவமைத்துள்ளோம். வழக்கமான பேருந்துச் சேவையுடன் பொதுப் போக்குவரத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை நாங்கள் அலசி ஆராய்ந்தோம்.

தானியங்கி கட்டணம் செலுத்தும் முறை ஏற்கெனவே நடப்பில் இருப்பதாக திரு டியோ தெரிவித்தார்.எஸ்டி எஞ்ஜினியரிங் தயாரித்த நீண்டதூர ஒலிஅலை சாதனத்தை அவர் சுட்டினார். அத்தகைய சாதனத்தை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளலாம் அல்லது அது அட்டை வடிவிலோ இருக்கலாம் என்றார் அவர். அதை வைத்துக்கொண்டு தடுப்பு ஏதும் இல்லாத கதவின் வழியாக பேருந்தில் ஏறும்போது கட்டணம் தானாகவே கழிக்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் பேருந்துக் கட்டண அட்டைகளுக்கான தேவை இருக்காது.

பேருந்தின் முழு நீளத்துக்குத் திறக்கக்கூடிய கதவுகள் இருப்பதால் தற்போது உள்ள சிறு கதவுகளுக்கு வெளியே பயணிகள் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்க வேண்டியதில்லை என்றார் திரு டியோ.

“பயணிகள் தொடர்பு கொள்வதைத் குறைக்க பேருந்தின் உட்புற வடிவமைப்பை நாங்கள் மீண்டும் வடிவமைத்தோம்,” என்றார் திரு டியோ.

பேருந்தின் வடிவமைப்பு குறித்து பயணிகள் சிலரிடம் திரு டியோவின் குழு கலந்துரையாடியது. இதில் பொதுப் பேருந்துகளில் தனியாக அமர பயணிகள்விருப்பப்படுவதாக தெரியவந்துள்ளது என்று திரு டியோ கூறினார். இதைப் பூர்த்தி செய்ய பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமரும் பயணி வேறு திசை நோக்கி இருக்கும் இருக்கையை வடிவமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக இம்மாதிரியான வடிவமைப்புக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் எடுக்கும். ஆனால் நாங்கள் அதை 24 மணி நேரத்தில் செய்து முடித்தோம்,” என்றார் திரு டியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!