வேலை பற்றிய கவலைகளுக்கு தீர்வு காண இளையர் விவாதம்

தேசிய இளை­யர் மன்­றம் நடத்­திய மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­ட­லில் இளை­ய­ரும் மாண­வர்­க­ளு­மாக 120 பேர் கலந்­து­கொண்­ட­னர். மூன்று வெவ்­வேறு தலைப்­பு­களில் அவர்­கள் விவா­தம் செய்­த­னர். வேலை­கள், அவற்­றின் எதிர்­கா­லம், எளி­தில் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்­கான ஆத­ரவு, சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் நீடிக்­கும் நிலைத்­தன்மை ஆகி­யன பற்றி அவர்­கள் அர­சாங்­கப் பிர­தி­நி­தி­க­ளு­டன் விவா­தித்­த­னர்.

கொரோனா கொள்­ளை­நோ­யால் ஏற்­பட்­டி­ருக்­கும் பாதிப்­பு­நி­லை­யில் வேலை தேடு­வ­தைப் பற்­றிய கவ­லையே அவர்­க­ளி­டம் மிகுந்து காணப்­பட்­டது. கொள்­ளை­நோ­யின் தாக்­கத்தை கவ­னத்­தில் கொண்டு சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்தை நோக்­கிய நட­வ­டிக்­கை­க­ளைப் பரி­சீ­லிப்­ப­தற்­காக ஜூன் மாதம் முதல் அர­சாங்­கம் கலந்­து­ரை­யா­டல் தொகுப்­புக்கு ஏற்­பாடு செய்து வரு­கிறது.

‘ஒன்­றி­ணைந்து வலிமையுடன் மீண்­டெ­ழுவதற்கான சிங்­கப்­பூர் கலந்­து­ரை­யா­டல்’ என்­னும் அந்த நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக நேற்று முன்­தி­னம் தேசிய இளை­யர் மன்­றத்­தின் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­ச­ரும் சட்­டத் துறை இரண்­டாம் அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங் நிகழ்வை முன்­னின்று நடத்­தி­னார்.

மனி­த­வள, தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, கல்வி மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங், உள்­துறை மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான், கலா­சார, சமூக, இளை­யர் துறை நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா ஆகி­யோ­ரும் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர்.

இதில் கலந்­து­கொண்­டோ­ரில் அக்­கிலா தியானா பர்­வின் ஆ, 20, என்­னும் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழக மாண­வ­ரும் ஒரு­வர். ஒவ்­வொரு நிறு­வ­ன­மும் அனு­ப­வ­சா­லிகளை வேலைக்கு எடுப்­ப­து­ போ­லத் தோன்­று­வ­தா­க­வும் படித்து பட்­ட­யம், பட்­டம் போன்­ற­வற்­று­டன் வேலை­தே­டத் தொடங்­கும் தலை­மு­றை­யி­ன­ருக்கு அது கவலை அளிக்­கும் போக்கு என்­றும் அவர் கலந்­து­ரை­யா­ட­லுக்­குப் பின்­னர் செய்­தி­யா­ள­ரி­டம் கூறி­னார். இருப்­பி­னும் நிறு­வ­னங்­க­ளின் தேவைக்­கேற்ற அனு­ப­வ­சா­லி­க­ளைத் தேடு­வது கடி­ன­மா­னது என்­றும் அக்­கிலா தெரி­வித்­தார்.

அதே­நே­ரம் முகம்­மது ருடி அப்­துல் ஹமித், 31, என்­னும் மூத்த சமூக சேவை நிர்­வாகி வேறு­வி­த­மா­கக் கருத்து தெரி­வித்­தார். வேலைத்­தி­றனை வெளிக்­காட்­டு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளை­யும் உள்­ள­கப் பயிற்­சி­க­ளை­யும் முன்­கூட்­டியே, உயர்­நி­லைப் பள்ளி மட்­டத்­தி­லேயே அளிக்­க­லாம் என்­னும் யோசனை தமது விவா­தக் குழு­வில் தெரி­விக்­கப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கலந்­து­ரை­யா­டலை முடித்து வைத்­துப் பேசிய அமைச்­சர் டோங், இது இத்­து­டன் நின்­று­வி­டா­மல் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் கலந்­து­ற­வாடி புதிய யோச­னை­களை உரு­வாக்­கு­ மா­றும் அந்த யோச­னை­க­ளுக்­குச் செயல்­வ­டி­வம் தரு­வது குறித்து சிந்­திக்­கு­மா­றும் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!