பாதுகாப்பாக இணையத்தில் வாங்க முடியும்

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அதிரடித் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடப்புக்கு வந்தபோது, பல சில்லறை வர்த்தகக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

அப்போது சில பொருட்களை வாங்க வேண்டியதாக இருந்தால் மின் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்கள் ஈடுபடுவதாக இருந்தது.

மின் வர்த்தக இணையத் தளங்களுக்குச் சென்று இதர பொருட்களை வாங்குவதில் பழக்கம் உடையவர் இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி திரு த.ராஜசேகர்.

அதிரடித் திட்டம் நடப்பிலிருந்தபோது, வீட்டிற்கு நுண்ணலை அடுப்பு (microwave oven) போன்ற வீட்டு மின்னியல் சாதனங்களையும் புத்தகங்களையும் இவர் இணையம் வழி வாங்கினார்.

‘கூகல்’ வழி பொருட்களைத் தேடும்போது, ‘லசாடா’, ‘‌‌‌ஷாப்பீ’ போன்ற பிரபல மின் வர்த்தக தளங்களில் மிக கவர்ச்சியான விலைகளில் அவை விற்கப்படும் என்று தெரிவித்த திரு ராஜசேகர், ஒரு பொருளை அத்தகைய தளங்களில் பார்த்த உடனேயே வாங்கிட அவசரப்படக்கூடாது என்கிறார்.

போலிஸ் தகவல்படி, மின் வர்த்தக குற்றச் செயல்கள் 2018 ஆண்டில் 1,013 ஆக இருந்து 2019 ஆண்டில் 1,435க்கு உயர்ந்துள்ளது.

இத்தகைய குற்றச்செயல்கள் பிரபல வர்த்தக தளங்களான ‘கெரெளசெல்’, ‘லஸாடா’, ‘‌‌‌ஷாப்பீ’ போன்றவற்றிலும் அதிகம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 கிருமித்தொற்று பரவ, இணையத்தில் முகக் கவசங்கள் விற்க முயன்றோர் வாடிக்கையாளர்கள் அவற்றுக்குக் கட்டணம் செலுத்தியதும் தொடர்புகொள்ள முடியாமல் போன சம்பவங்களும் இவ்வாண்டு தொடக்கத்தில் பதிவாகியுள்ளன.

இது இரு வகைப்படும் என்று திரு ராஜசேகர் விளக்கினார்.

முதலாவதாக ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது முகக் கவசங்களின் தேவை எதிர்பாராத விதத்தில் அதிகரித்ததால் அதனைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு விற்பவர் தள்ளப்பட்டிருக்கலாம் என அவர் சொன்னார்.

அதிக விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போது அதனைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் விலையை திரு ராஜசேகர் சரிபார்த்துக் கொள்வது வழக்கம்.

உதாரணத்திற்கு, அண்மையில் அவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை இணையத்தில் வாங்கியபோது, அவர் வாங்க விரும்பிய தொலைக்காட்சிப் பெட்டியின் தயாரிப்பு நிறுவன உள்ளூர் இணையப் பக்கத்திற்கு சென்று அதன் விலையைக் கண்டறிந்தார்.

பிறகு, பல ஆண்டுகளாக அறைகலன், வீட்டு மின்னியல் சாதன வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் உள்ளூர் நிறுவனத்தின் அதிகாரத்துவ இணையத் தளத்தில் அவர் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கினார்.

“ஒரு பொருளின் விலையைக் காட்டிலும் அந்தப் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம். அதிக மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கும்போது நமக்கு பழக்கப்பட்ட, பல ஆண்டுகளாக இயங்கிவரும் நிறுவனத்திடமிருந்து வாங்கும்போது பொருளின் தரத்தை உறுதிசெய்ய முடியும்,” என்றார் திரு ராஜசேகர்.

முன்பு ஒருமுறை பிரபல வர்த்தக தளத்தில் ‘செல்ஃபீ ஸ்திக்’ ஒன்றைக் குறைந்த விலையில் வாங்கினார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பொருளின் தரம் அமையவில்லை.

விற்பனைத் தளத்தில் இடம்பெற்ற புகைப்படத்தை ஒப்பிடுகையில், வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட அப்பொருளின் நிறமும் தரமும் மாறுபட்டிருந்ததாம்.

ஒரு பொருளை இணையத்தில் வாங்கும்போது, பொருளை இதற்குமுன் அத்தளத்தில் இடம்பெறும் விற்பனையாளரிடமிருந்து வாங்கிய வாடிக்கையாளர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் படிப்பதும் இந்நிலையில் முக்கியமாகின்றது என அவர் வலியுறுத்தினார்.

இது ஓரளவு அப்பொருளின் தரத்தை மதிப்பிட உதவும் என்று கூறிய திரு ராஜசேகர், சில சமயங்களில் ஏமாற்றுக்காரர்கள் பொருட்களின் பொய்யான வாடிக்கையாளர் கருத்துகளையும் அத்தளத்தில் பதிவு செய்யக்கூடும் என்றார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்திலிருந்து வாங்கும்போது, ஏதாவது பிரச்சினைகள் எழுந்தால், வாடிக்கையாளருக்கு உதவ சேவை தொடர்பு அம்சங்கள் அதில் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டுமென்றும் அவர் கருதுகிறார்.

அதோடு, அவர் கூறுகையில், ‘பேநெள’, ‘பேபெல்’, ‘மாஸ்டர்கார்ட்’, ‘விசா’ போன்ற அங்கீகரிக்கப்பட்ட இணைய கட்டணச் சேவை அத்தளத்தில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் அவசியமானது.

“எதிர்காலத்தில் சில்லறை வர்த்தக கடைகளின் எண்ணிக்கை குறைய வர, இணையம் வழி பொருட்களை வாங்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கும்.

“உங்களது கடன் அட்டையை வழங்கும் வங்கி பரிந்துரைக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தவாறு நம்பிக்கையுடன் பொருட்களை இணையம் வழி வாங்க நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என பகிர்ந்துகொண்டார் திரு ராஜசேகர்.

இணையத்தில் எப்படி பொருட்களைப் பாதுகாப்பாக வாங்குவது குறித்த மேல் விவரங்களை அறிய http://www.1click.sg/tm என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.

ஊடக அறிவு மன்றத்தின் (Media Literacy Council) ‘ஃபேஸ்புக்’ https://www.facebook.com/MediaLiteracyCouncilSG/ அல்லது ‘இன்ஸ்டகிராம்’ https://www.instagram.com/betterinternetsg/ பக்கங்களிலும் இவை இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!