‘தொழில்முனைவராகும் கனவிலிருந்து பின்வாங்க வேண்டாம்’

பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே தொழில் முனைவராக வேண்டும் என ஆசைப்படும் மாணவர்கள் கொவிட்-19 நெருக்கடிநிலையால் அதிலிருந்து பின்வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் ‘ரியல் பிசினஸ்’ என்ற தொழில்தொடங்கு சங்கத்தின் தலைவராக இருக்கும் ஜீவன் பிரசாத் ஆறுமுகம்.

உலகெங்கும் தாண்டவம் ஆடிவரும் கொவிட்-19னால் திணறித் தத்தளிக்கும் தொழில்தொடங்கு வர்த்தகங்களைக் கண்டு வருங்காலத்திற்கு இவர் தம்மைத் தயார்ப்படுத்தி வருகிறார்.

மின்னிலக்க சந்தைப்படுத்துதல் (Digital Marketing), நிரலிடுதல் உள்ளிட்ட வேலைச் சூழலுக்குத் தேவையான திறன்களைக் கற்பிக்கும் பயிலரங்குகளை இந்தச் சங்கம் மாணவர்களுக்கு நடத்துகிறது. அத்துடன், தொடர்பு வட்டங்களை மேம்படுத்துதல், வர்த்தகச் சூழலைப் பற்றிப் பிறருடன் பேசி கற்றுக்கொள்ளுதல் போன்றவற்றுக்காக இந்தச் சங்கம் கைகொடுக்கிறது. பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியில் பயிலும் ஜீவன், சுயதொழில் செய்ய ஆசைப்படும் பிற மாணவர்களுக்கு இந்தச் சங்கம் கைகொடுப்பதாகக் கூறினார்.

புதிய வர்த்தகங்களுக்கு மூலதனம் வழங்க உதவும் டைகர்ஹால் (Tigerhall), பெலடிம் கேப்பிட்டல் (Paladigm Captial) போன்ற நிறுவனங்களின் பேராளர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களிடம் தங்களது வர்த்தக யோசனைகளைப் பகிரும் வாய்ப்பையும் அவர் வழங்குகிறார்.

தற்போதைய சூழலில் புதிய நிறுவனங்களைத் தொடங்க மாணவர்கள் தயங்க வேண்டியது இல்லை என்று கூறிய ஜீவன், கொவிட்-19 சூழலில் பல வர்த்தகங்கள் இணையம் வழியாக விரிவடைவதைச் சுட்டினார்.

“ உணவு, பானத்துறையில் புதிய வர்த்தகத்தைத் தொடங்க வேண்டாம் என பலர் கூறியிருப்பர். ஆயினும், அப்படி செய்த ஒருவரை நாங்கள் எங்கள் பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களிடம் பேச சொன்னோம். தொழில்நுட்பம் மூலமாக தாம் எப்படி வெற்றி அடைந்தார் என்பதை அவர் பகிர்ந்துகொண்டார். மாணவர்கள் இப்போதே என்னென்ன கற்றுக்கொண்டால் வருங்காலத்திற்கு நல்லது என்பதை கற்றுக்கொண்டனர்,” என்றார்.

கூகள், ஃபேஸ்புக், யூனிலெவர் போன்ற பிரபல நிறுவனங்களில் பணியாற்ற தமக்குத் தெரிந்த பல மாணவர்கள் விரும்பினாலும் சுயதொழில் செய்வதே தமது விருப்பம் என ஜீவன் தெரிவித்தார்.

“பெரிய நிறுவனங்களில் உள்ள அலுவலகச் சூழலில் வேலை செய்யவும் வருங்காலத்தில் உயர் பதவிகளை அடைய பிறருடன் போட்டியிடவும் எனக்குப் பிடிக்கவில்லை. சுயதொழில் செய்ய விரும்புகிறேன்,” என்று தற்போது ப்ரூடென்ஷல் நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பகுதி நேரமாகப் பணியாற்றும் ஜீவன் தெரிவித்தார்.

பகுதி நேர வேலை செய்துகொண்டு முழு நேர மாணவராகவும் இந்த வர்த்தகச் சங்கத்தின் தலைவராகவும் இருப்பது எளிதல்ல என்றார் ஜீவன்.

“எங்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பவர்கள் பல நேரங்களில் அதற்கான சரியான வழிகாட்டுதலை அளிக்கத் தவறுவதால் அதனால் ஏற்படும் சில சிரமங்கள் எங்களுக்கு நல்ல அனுபவமாகிவிடுகின்றன. வர்த்தக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த நானும் எனது செயற்குழுவும் அதன் தொடர்பான சில விண்ணப்பங்களைச் செய்யத் தவறினோம். இந்தச் சங்கத்தில் எங்களுக்கு முன்பு இருந்தவர்கள் எங்களுக்குச் சரியாக வழிகாட்டவில்லை. அலுவலகமும் வெளியுலகமும் இப்படி இருக்கும் என்ற படிப்பினையை சங்கத்தில் பணியாற்றும்போது

கற்றுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

பட்டம் பெறுவதற்கு இன்னும் ஈராண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி தயாராகி வருவதாக ஜீவன் தெரிவித்தார்.

வருங்காலத்தில் சிறந்த தொழில்முனைவர் ஆகவும் இத்துறையில் பிறருக்கு வழிகாட்டும் விரிவுரையாளராக இருக்கவும் இவர் விரும்பு கிறார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற ஊடகத் தளங்களில் மின்னிலக்க சந்தைப்படுத்துதலை (Digital Marketing) எப்படி மேற்கொள்வது என்பது பற்றி கற்றுக்கொள்கிறார்.

தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தினால்தான் போட்டித்தன்மை மிக்க வர்த்தகச் சூழலை எதிர்கொள்ள முடியும் என்பதை உணர்வதாகக் கூறிய ஜீவன், அதே நேரத்தில் தமது பலம், பலவீனங்களைப் பற்றி தெரிந்துகொள்வதாகக் கூறினார். “ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்த திறன்கள் இருக்கும். எல்லோரும் எல்லாவற்றையும் கற்பது கடினம். சந்தைப்படுத்துதலும் ஊடகங்களில் படைப்புகளை உருவாக்குவதும் எனக்குப் பிடித்திருப்பதால் அதனைச் சார்ந்த நடவடிக்கைகளில்தான் முக்கியமாக ஈடுபடுவேன். எனக்கு இல்லாத திறன்களை நான் வேறொருவரிடம் கண்டால் அவருடன் இணைந்து செயல்படுவேன். இத்தகைய பங்காளித்துவங்களின் மூலமாகத்தான் நல்ல வர்த்தகங்கள் உருவாகின்றன,” என்றார் அவர்.

செய்தி: கி.ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!