'முரசிடம் கேளுங்கள்': மசேநி சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் ஷீனா

“55 வய­தான பிறகு தமது மத்­திய சேம­ நிதி (மசேநி) கணக்­கி­லி­ருந்து சேமிப்­பு­களை எடுக்க முடி­யாது, 55 வயதை எட்­டும்­போது சேமிப்­பு­களை எடுக்­கா­விட்­டால் பின்­னர் பணத்தை எடுக்க முடி­யாது,” ­போன்ற பல தவ­றான கருத்­து­கள் மக்­க­ள் இடையே இன்­ற­ள­வும் நில­வு­கின்றன.

அவை உண்மை என்று நம்பி அச்­செய்­தி­களை மற்­ற­வர்­க­ளி­டம் அவர்­கள் பகிர்­வ­தும் உண்டு.

இதை முறி­ய­டிக்­கும் வண்­ணம், மசேநி குறித்த விவ­ரங்­களை விளக்கி உண்மை என்­ன­வென்­பதை மக்­க­ளுக்­குப் புரி­ய­வைக்­கி­றார் மசேநி பீஷான் சேவை நிலை­யத்­தின் துணை வாடிக்­கை­யா­ளர் சேவை நிர்­வா­கி­யாக பணி­யாற்­றும் திரு­மதி ஷீனா கஸ்­தூரி, 35.

மசேநி குறித்த ஐயங்­க­ளைத் தெளி­வு­ப­டுத்த நிலை­யத்­திற்கு வரு­ப­வர்­களில் பெரும்­பா­லா­னோர் முதி­ய­வர்­கள் என்­றும் அவர்­கள் சொல்­வ­தைப் பொறு­மை­யாக கேட்­பது அவ­சி­யம் என்­றும் மசேநி வாடிக்­கை­யா­ளர் சேவைத் துறை­யில் ஏறக்­கு­றைய 13 ஆண்­டு­கால அனு­ப­வ­மு­டைய திரு­மதி ஷீனா சொன்­னார்.

“சில நேரங்­களில் மக்­கள் அதி­கம் கோபப்­ப­டு­வார்­கள். பணம் எடுக்­க­லாம் என்று என் நண்­பர் சொன்­னார், நானும் எடுக்க போகி­றேன் என்று வாதி­டு­வார்­கள். உண்மைத் தக­வ­லைப் பொறு­மை­யு­டன் அவர்­க­ளுக்கு விளக்­கு­வோம்,” என்­றார் திரு­மதி ஷீனா.

ஓய்­வுக்­கா­லத் தொகை, சொத்து உரிமை ஆகிய அம்­சங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு, தகுதி பெறு­பவர்­கள் 55 வயதை எட்­டி­ய­வு­டன் மசே­நிதி கணக்­கி­லி­ருந்து சேமிப்­பு­களை எடுக்க முடி­யும் என்­றும் 55 வயதை எட்­டி­ய­து­டன் எந்த நேரத்­தி­லும் சேமிப்­பு­களை எடுக்க அவர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம் என்றும் விளக்­கி­னார் திரு­மதி ஷீனா.

“வங்­கி­க­ளை­விட மசேநி கணக்­கில் இருக்­கும் தொகை கூடு­தல் வட்­டி­யைப் பெறு­கிறது. மசேநி உறுப்­பி­னர்­க­ளி­டம் இதை எடுத்­து­ரைக்­கும்­போது சில வேளை­களில் அவர்­கள் சேமிப்பை எடுக்க விரும்­ப­மாட்­டார்­கள். அவர்­க­ளி­டம் இது­குறித்து விளக்­கும்­போது அவர்­களுக்கு தெளி­வும் மன­வு­று­தி­யும் கிடைக்­கிறது,” என்­றார் திரு­மதி ஷீனா.

மசேநி உறுப்­பி­னர் ஒரு­வர் ஒவ்­வொரு மாத­மும் $20, $50 போன்ற சிறிய தொகையை மசேநி கணக்­கில் சேமித்து வந்­ததை திரு­மதி ஷீனா நினை­வு­கூர்ந்­தார்.

“அவர் தற்­போது ஒவ்­வொரு மாத­மும் $400 முதல் $500 வரை மாதாந்­திர வழங்­கு­தொ­கை­யைப் பெற்று வரு­கி­றார். அவர் சேமித்து வந்த சிறு தொகை கூட்டு வட்­டி­யாக (compund interest) ஆண்டுக்கு ஆண்டு அதி­க­ரித்து வந்­தது,” என்று திருமதி ஷீனா கூறி­னார்.

ஓய்­வுக்­கால செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்கு கையில் போதிய அளவு பணம் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த ஒரு­வர் பணக்­கா­ர­ராக இருக்­க­வேண்­டும் என்­பது அவ­சி­ய­மில்லை.

சிறு தொகை­யாக இருந்­தா­லும் முன்­கூட்­டியே சேமித்து வந்­தால், பணக்­க­வ­லை­யின்றி ஓய்­வுக்­காலத்தை கழிக்­க­லாம் என்­பதை இச்­சம்­ப­வம் எடுத்து காட்­டு­கிறது.

மசேநி குறித்த மேல் விவ­ரங்­களுக்கு cpf.gov.sg என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

'முரசிடம் கேளுங்கள்'

மசேநி தொடர்பில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் உள்ளனவா? 'முரசிடம் கேளுங்கள்' என்ற புதிய கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைந்திருங்கள். உங்கள் ஐயங்களைத் தீர்க்கும் வகையில் மத்திய சேம நிதிக் கழகம் கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளிக்கும்.

கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இம்மாதம் 14ஆம் தேதி வெளிவரும் தமிழ் முரசில் கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!