சிங்கப்பூர்: $3,000 குழந்தை ஆதரவு மானியம்

நோய்ப் பர­வல் சூழ­லுக்­கி­டையே குழந்தை வளர்ப்­புக்­கான செல­வு­ க­ளைச் சமா­ளிக்க குழந்தை ஆதரவு மானி­யம் எனும் திட்­டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்­மா­தம் 1ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு செப்­டம்­பர் 30 ஆம் தேதி வரை­யில் பிறக்­கும் சிங்­கப்­பூ­ரர் குழந்­தை­க­ளின் பெற்­றோர்­க­ளுக்கு அத்­திட்­டத்­தின்­ மூலம் ஒரு­முறை $3,000 வழங்­கப்­படும். ஏற்­கெ­னவே செயல்­பாட்­டில் இருக்­கும் $10,000 வரை­யி­லான குழந்தை போனஸ் ரொக்க அன் ­ப­ளிப்­புக்கு மேல் இந்­தத் தொகை வழங்­கப்­படும். ரொக்க அன்­ப­ளிப்­பைப் பெற பெற்­றோர்­கள் நிய­மித்த அதே வங்­கிக் கணக்­கில் இந்­தத் தொகை­யும் சேர்க்கப்படும்.

அடுத்த ஆண்டு ஏப்­ரல் 1ஆம் தேதி அல்­லது குழந்தை போனஸ் திட்­டத்­தில் இணைந்­த­தி­லி­ருந்து ஒரு மாதத்­திற்­குள் எந்­தத் தேதி பிறகு வரு­கி­றதோ அதி­லி­ருந்து நிதி கணக்­கில் போடப்­படும்.

இந்­தப் புதிய திட்­டத்தை பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று அறி­வித்­தார்.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளு­டன் பேசிய அமைச்­சர், திரு­ம­ணம் செய்துகொள்­ள­வும் குடும்­பத்­தைத் தொடங்­க­வும் திட்­ட­மிட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள­தைச் சுட்­டி­னார்.

“திரு­ம­ணம் செய்­ய­வும் பெற்­றோர்­க­ளாக விரும்­பும் தம்­ப­தி­யி­ன­ருக்கு உதவ அர­சாங்­கம் அனைத்து முயற்­சி­க­ளை­யும் எடுக்­கும்,” என்­றார் அமைச்­சர்.

“வேலை­யை­யும் குடும்­பத்­தை­யும் தம்­ப­தி­கள் சமா­ளிக்­க­வும் இளம் குடும்­பங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டி­யான விலை­களில் பொருட்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் வழங்­க­வும், ஆக மொத்­தத்­தில் குடும்­பங்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட சிங்­கப்­பூரை அமைக்­க­வும் மேலும் அதி­க­மான நிறு­வ­னங்­களும் சமூக அமைப்­பு­களும் ஆத­ரவு வழங்க முன்­ வ­ரு­வார்­கள்,” என்று தான் நம்­புவதாக குமாரி இந்­தி­ராணி குறிப்பிட்டார்.

சில நிறு­வ­னங்­கள் இந்த முயற்­சியை மேற்­கொள்ள முன்­வந்­து உள்­ளன என்று கூறிய அவர், இளம் பிள்­ளை­க­ளுள்ள குடும்­பங்­க­ளுக்கு அவை சிறப்­புச் சலு­கை­களை வழங்கி­ வரு­கின்­ற­ன என்­றார்.

அடுத்த 12 மாதங்­களில் குழந்­தைப் பெற்­றுக்­கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­க­ளை குழந்தைகளுக்கான பொருட்­களை விற்­கும் ‘மதர்­கேர்’ நிறு­வ­னம் ‘விஐபி’ உறுப்­பி­ன­ராக வர­வேற்க உள்­ளது. அத­னால் சிறப்­புக் கழி­வு­க­ளைப் பெற்­றோர்­கள் எதிர்­பார்க்­க­லாம்.

இதற்கிடையே இந்­தப் புதிய திட்­டத்­தின் தொடக்­கத்­திற்கு ஒரு நாளை குறிக்க வேண்­டும் என்­ப­தால் இம்­மா­தம் 1ஆம் தேதி என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அந்­தத் தேதியை தவ­ற­விட்ட சிலர் வருத்­தம் அடை­யக்­கூ­டும் என்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­டன் இணைந்து குழந்தை ஆத­ரவு மானி­யத்தை நிர்­வ­கிக்­கும் தேசிய மக்­கள் தொகை மற்­றும் திறன் பிரிவு கூறி­யது.

பொது­மக்­க­ளின் புரிந்­து­ணர்வை நாடு­வ­தா­கக் கூறிய பிரிவு, அக்­டோ­பர் மாதத்­திற்கு முன்பு பிறந்த குழந்­தை­கள் தொடர்ந்து திரு­ம­ணம் மற்­றும் பெற்­றோர் பருவ தொகுப்­புத் திட்­டத்­தின் மூலம் பல­ன­டை­வர் என்று தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!