செந்தோசா சிலோசோ கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லை

செந்­தோ­சா­வின் சிலோசோ கடற்­கரைக்­குச் செல்ல இப்­போது யாருக்­கும் அனு­ம­தி­யில்லை. அங்கு கட­லில் ஒரு வகை ‘பாக்ஸ்’ ஜெல்­லி­மீன் காணப்­பட்டு இருப்­பதே இதற்­குக் கார­ணம்.

ஜெல்­லி­மீன் இனத்­தைச் சேர்ந்த சில சிற்­றி­னங்­கள் மிக­வும் நச்­சுத்­தன்மை வாய்ந்­தவை. அது யாரை­யா­வது கொட்­டி­விட்­டால் மர­ணம் கூட ஏற்­பட்­டு­வி­டும். கட­லில் குளிக்­கும்­போது யாரை­யா­வது அந்த மீன் கொட்­டி­விட்­டால் அவர்­கள் வலி தாங்க முடி­யா­மல் வாதம் ஏற்­பட்டு மூழ்­கி­வி­ட­வும் வாய்ப்பு இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டில் குறைந்­த­பட்­சம் இரண்டு பேர் இத்­தகைய ஜெல்­லி­மீன் கார­ண­மாக காய­ம­டைந்து இருப்­ப­தா­கத் தெரிய­ வ­ரு­கிறது. செந்­தோசா நிர்­வா­கம் வெள்­ளிக்­கி­ழமை இரவு சுமார் 10 மணிக்கு அத­னு­டைய ஃபேஸ்புக் பக்­கத்­தில் ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டது. அடுத்த அறி­விப்பு வரும் வரை அந்­தக் கடற்­க­ரை­ பகுதியில் கடலில் குளிக்க யாருக்­கும் அனு­மதி இல்லை என்று அந்த அறி­விப்பு தெரி­வித்­தது.

ஒவ்­வொ­ரு­வ­ரின் பாது­காப்­பும் நல்­வாழ்­வுமே மிக முக்­கி­யம் என்­பதை அது சுட்­டி­யது. கடற்­கரை மற்­றும் கடல்­நீர் கண்­காணிப்பு நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்டு இருக்­கின்­றன என்­றும் செந்­தோசா தெரி­வித்­துள்­ளது. யாரா­வது இத்­த­கைய ‘பாக்ஸ்’ ஜெல்­லி­மீனை பார்த்­தால் அது பற்றி 1800-726-4377 என்ற எண் மூலம் உட­ன­டி­யா­கத் தெரி­விக்­க­வேண்­டும் என்று செந்­தோசா நிர்­வா­கம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!