இலவச சட்ட சேவை: விழிப்புணர்வு அவசியம்

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் நிர­ப­ரா­தி­யாக இருந்­தா­லும் நீதி­மன்­றத்­தில் அவர் சார்­பில் வழக்­க­றி­ஞர் வாதாடும் அளவுக்கு வசதி இல்­லா­மல் இருக்­க­லாம். ‘புரோ போனோ’ என அழைக்­கப்­படும் இல­வச சேவையை வசதி குறைந்­தோ­ருக்­காக வழக்­க­றி­ஞர் சமூ­கம் காலங்­கா­ல­மாக வழங்கி வரு­கிறது. ஆனால், இது குறித்து இன்­னும் கூடு­தல் விழிப்­பு­ணர்வு தேவை என்று இரு இளம் வழக்­க­றி­ஞர்­கள் பகிர்ந்­து­கொள்­கின்­ற­னர்.

சட்­டத்­தின்முன் சமத்­து­வம் இருக்க வேண்­டும் என்று நம்­பும் சிராஜ்குற்­ற­வி­யல் அல்­லது சிவில் வழக்கை எதிர்­நோக்­கும் பலர், என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் கடை­சி­வரை திண­று­கின்­ற­னர், அல்­லது வெகு­தா­ம­த­மா­கவே உதவி நாடு­கின்­ற­னர். குறிப்­பாக வசதி குறைந்­த­வர்­களுக்கு இல­வ­சச் சேவை சென்­ற­டை­யும்­போது, அது சட்­டத்­தின் சமத்­து­வத்தை நிலை­நாட்ட, வழக்­க­றி­ஞர் ஆற்­றும் கடமையாகக் கருதப்படுகிறது என்று 100க்கும் அதி­க­மான வழக்­கு­களை இல­வ­ச­மா­கக் கையாண்ட சிராஜ் தெரி­வித்­தார்.

இல­வ­சச் சேவை­களில் பெரும்­பகுதி குற்­ற­வி­யல் வழக்­கு­க­ளாக இருக்­கும். ஏனெ­னில், அத்­த­கைய வழக்­கின் முடிவு, குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ரின் வாழ்க்­கை­யில் மிகப் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் தன்மை பெற்­றி­ருக்­கும். மரண தண்­டனை தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் உயி­ரு­டன் தொடர்ந்து இருப்­பாரா என்­பதை நிர்­ண­யிக்­கும் அள­வுக்கு இத்­த­கைய வழக்­கு­கள் இருப்­ப­தால் இல­வச சட்ட சேவை அமைப்­பு­கள் இவற்­றுக்கே முன்­னு­ரிமை தந்து வரு­கின்­றன.

‘சில்­வெஸ்­டர் லீகல்’ சட்ட நிறு­வ­னத்­தில் தற்­போது பணி­யாற்­றும் 32 வயது சிராஜ் ஷேக் அஸிஸ், முன்­ன­தாக ‘கிளாஸ்’ வழக்­க­றி­ஞ­ராக ஈராண்டு­க­ளுக்கு, அரசு மற்­றும் உச்ச நீதி­மன்­றங்­களில் பல­ருக்­காக இல­வச சேவை ஆற்றி வந்­தார். வேலைக்­கான சம்­ப­ளம் குறைவு என்­றா­லும் நீதி­மன்ற விசா­ர­ணை­யைத் தனியே எதிர்­நோக்­கு­ப­வ­ரது வாழ்க்­கை­யில் நல்ல திருப்­பத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்பதே தம் ஆசை என்று சிராஜ் தெரி­வித்­தார்.

“இந்த உத­வி­யால் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ரின் பதற்­றம் குறை­கிறது. சட்­டம் பற்­றிய சரி­யான புரி­த­லின்றி அவர் நீதி­மன்ற விசா­ர­ணை­யின்­போது தடு­மாற வேண்­டி­ய­தில்லை,” என்று சிராஜ் தெரி­வித்­தார்.

இல­வச சேவை­யால் மறு­ம­லர்ச்சி ஏற்­ப­டுத்­த­லாம்

சரி­யான நேரத்­தில் செய்­யப்­படும் தமது சேவை­யால் சில­ரின் வாழ்க்­கை­யில் மறு­ம­லர்ச்சி ஏற்­பட்­டி­ருப்­ப­தை­யும் அவர் மகிழ்ச்­சி­யு­டன் சுட்­டி­னார்.

“கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கி­ய­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்ட 25 வயது ஆட­வர் ஒரு­வ­ருக்­காக நான் வாதா­டி­னேன். அவ­ரு­டன் குற்­றம் சாட்­டப்­பட்ட மேலும் இரு­வ­ருக்கு ஏற்­கெ­னவே சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் நான் அந்த ஆட­வ­ரின் வழக்கை ஏற்­றுக்­கொண்­டேன். அவ­ருக்­குச் சட்­ட­ரீ­தி­யா­கத் தகுந்த பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கி­ய­தால் இறு­தி­யில் அந்த ஆட­வ­ருக்கு கண்­கா­ணிப்பு ஆணை விதிக்­கப்­பட்­டது. எந்­தக் குற்­ற­வி­யல் பதி­வும் அவ­ரது பெய­ரில் இல்­லா­ததை அடுத்து கடந்த மாதம் ஒரு நிறு­வ­னத்­தில் ஆட­வ­ருக்கு வேலை கிடைத்­தது. இது­போன்ற நிகழ்வு எனக்கு மன­நி­றைவை அளிக்­கிறது,” என்று சிராஜ் தெரி­வித்­தார்.

‘விழிப்­பு­ணர்வு தேவை’

குற்­ற­வி­யல் வழக்­கு­கள் மட்­டு­மின்றி மணமுறிவு, உயில், விபத்து மற்­றும் காயம் தொடர்­பி­லான முறை­யீடு, மருத்­துவ சிகிச்­சை­யில் கவ­னக்­கு­றைவு போன்ற விவ­கா­ரங்­க­ளுக்­குச் சட்ட அமைச்­சின்­கீழ் இயங்­கும் சட்ட உத­விப் பிரிவு, சேவை வழங்­கு­கிறது.

மரண தண்­ட­னை­யு­டன் தொடர்­பில்­லாத குற்­ற­வி­யல் வழக்­கு­க­ளுக்கு ‘கிளாஸ்’ திட்­டம் பய­ன­ளிக்­கும். மரண தண்­டனை வழக்­கு­க­ளுக்கு ‘லாஸ்கோ’ திட்­டம் உள்­ளது. திட்­டங்­க­ளுக்­குத் தகு­தி­பெ­றா­விட்­டா­லும் ‘தேவை அடிப்­ப­டை­யில் இல­வச சட்ட உத­விக்­கான பரிந்­துரை திட்­டம்’ (Adhoc Pro Bono Referral Scheme) உள்­ளது.

இவ்­வாறு பல்­வேறு திட்­டங்­கள் மூலம் உதவி பெறும் சாத்­தி­யம் உள்­ள­போ­தும் இவை குறித்த விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை இருப்­ப­தாக சிராஜ் கரு­து­கி­றார். இளம் வழக்­க­றி­ஞர்­கள் இத்­த­கைய பணி­களை மேற்­கொள்ள அவர்­க­ளது முத­லா­ளி­களும் மேல் அதி­கா­ரி­களும் ஊக்­கு­விக்க வேண்­டும் என கூறி­னார்.

“சட்­டத் துறை­யில் பணி­பு­ரி­யா­த­வர்­களும் இத்­த­கைய உத­வித் திட்­டங்­களைப் பற்றி தெரிந்­து­கொண்டு உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு வழி­காட்­ட­லாம். இது வழக்­க­றி­ஞர்­களான எங்­க­ளுக்­கும் ஒட்­டு­மொத்த சமு­தா­யத்­திற்­கும் பேரு­த­வி­யாக இருக்­கும்,” என அவர் கூறி­னார்.

‘மேலும் சிறந்த வழக்­க­றி­ஞ­ரா­க­லாம்’ என்று கூறும் அஷ்வின்

வசதி குறைந்த கட்­சிக்­கா­ரர்­க­ளுக்­காக இல­வ­ச­மாக வாதா­டும்­போது வழக்­க­றி­ஞர்­க­ளுக்­குத் தேவை­யான பண்­பு­களை மேலும் வளர்த்­துக்­கொள்ள முடி­வ­தாக வழக்­க­றி­ஞர் அஷ்­வின் ஹரி­ஹ­ரன், 28, கூறு­கி­றார்.

கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக 25க்கும் அதி­க­மான வழக்­கு­களில் இல­வ­ச­மாக வாதிட்­டுள்ள அஷ்­வின், தற்­போது இல­வ­ச­மாக 10 வழக்­கு­களைக் கையாள்­கி­றார்.

“குற்­ற­வி­யல் சட்ட உத­வித் திட்­டத்­தில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேர்ந்­த­போது இல­வச சட்ட சேவை வழங்­கி­னேன். சட்ட ஆலோ­சனை நிலை­யங்­க­ளி­லும் நான் தொண்­டூ­ழி­யம் ஆற்­றி­னேன்,” என்று அவர் தெரி­வித்­தார். நம்­பிக்கை மோசடி, ஊழல், பாலி­யல் குற்­றங்­கள் உள்­ளிட்ட வழக்­கு­களில் அஷ்­வின், கட்­சிக்­கா­ரர்­களைப் பிர­தி­நி­தித்­தி­ருக்­கி­றார். குற்­ற­வி­யல் வழக்­கு­களில் ஒரு­வ­ரது சுதந்­தி­ரம், வாழ்­வா­தா­ரம், ஏன் உயி­ரும்­கூட பண­ய­மாக வைக்­கப்­ப­டு­வ­தால் அவர்­ க­ளுக்­காக இல­வ­ச­மாக வாதி­டு­வது முக்­கி­யம் என்­கி­றார் காளி­தாஸ் சட்ட நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் அஷ்­வின்.

குற்­ற­வி­யல் சட்ட உத­வித்திட்­டத்­தின் முக்கியத்துவம்

குற்­ற­வா­ளியை ஒரு வழக்­க­றி­ஞர் பிர­தி­நி­திக்­காத சூழலில் வழக்­கின் சில உண்­மை­கள் வெளி­வ­ரா­மல் போக­லாம். தண்­ட­னை­யின் கடு­மை­யைக் குறைக்க அல்­லது மாற்­று­வ­தற்­கான வாய்ப்பை நீதி­மன்­றம் இழக்­க­லாம் என்று அவர் தெரி­வித்­தார். அப்போது குற்­ற­வி­யல் சட்ட உத­வித் திட்­டம் பேரு­த­வி­யாக உள்­ளது. வழக்­க­றி­ஞர், குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ருக்­காக தொடக்­கத்­தி­லேயே குற்­றத்­தைப் பற்றி தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யின் அலு­வ­ல­கத்­தி­டம் விளக்­கம் தர­லாம்.

“இத­னால் குற்­றச்­சாட்டு மீட்­கப்­ப­ட­லாம் அல்­லது குறைக்­கப்­ப­ட­லாம். சிறைத்­தண்­ட னையைத் தவிர்க்­கும்­ப­டி­யும் வழக்­க­றி­ஞர் கேட்­டுக்­கொள்­ள­லாம்,” என்று அஷ்­வின் கூறி­னார். முதல்­முறை குற்­றம் சாட்­டப்­படும் ஒரு­வ­ருக்­குச் சட்ட ரீதி­யான நடை­மு­றை­களை அவர் சார்­பில் இல­வ­ச­மாக வாதா­டும் வழக்­க­றி­ஞர்­கள் எடுத்­து­ரைக்­க­லாம் என்­றும் கூறி­னார்.

‘கிளாஸ்’ திட்­டத்­தின்­கீழ் விண்­ணப்­பிக்­கும் ஒரு­வ­ரது வரு­மா­னம், அவர் பக்­கம் உள்ள நியா­யம் ஆகிய இரண்டு கூறு­க­ளின் அடிப்­ப­டை­யில் அந்த விண்­ணப்­பம் மதிப்­பி­டப்­படும்.

“இவ்­வாறு தகு­தி­பெ­றாத சில­ருக்­கா­க­வும் நான் உதவியி­ருக்­கி­றேன். அப்­ப­டிச் செய்­த­தால் அவ்வழக்­குகளின் முடிவும் மாற்றி அமைக்­கப்­பட்­டது,” என்று அவர் தெரி­வித்­தார். கடந்­தாண்டு ஆகஸ்ட் மாதத்­தில் ஜாலான் புசாரில் தீ மூட்டி நாச வேலை செய்­த­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்ட ஓர் ஆட­வர், ஆயுள் தண்­ட­னையை எதிர்­நோக்­கி­னார். ‘கிளாஸ்’ திட்­டத்­தின் வழி­யாக தலை­மைச்­சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தி­டம் முறை­யிட்டு குற்­றச்­சாட்­டின் கடு­மை­யைத் தாம் குறைத்­த­தாக அஷ்­வின் கூறி­னார்.

“தண்­ட­னையை அதி­க­ரிக்க அரசு­ த­ரப்பு முயன்­ற­போ­தும் இறு­தி­யில் என் கட்­சிக்­கா­ர­ருக்கு ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது,” என்­றார். இன்­னொரு வழக்­கில் முன்­னாள் மனை­வியை வேண்­டு­மென்றே காயப்­படுத்­திய குற்­றத்­திற்­கா­கச் சிறைத் தண்­ட­னையை எதிர்­நோக்­கிய ஆட­வ­ரின் வழக்கை, இத்­திட்­டத்­தின் வாயி­லாக கையாண்­டார் அஷ்­வின். தன் கட்­சிக்­கா­ரர் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர் என்­பதை நிரூ­பிக்க மன­ந­லக் கழக அறிக்­கைக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தார். இத­னால் அந்த ஆட­வர் சிறைத் தண்­ட­னைக்குப் பதி­லாக கட்­டாய சிகிச்சை ஆணையை நிறை­வேற்­றி­னார்.

“சி­லர் பசி தாளாமல் உணவு திருடி பிடிப­டு­வர். உணவு வாங்­கக் காசு இல்­லா­தோ­ருக்கு ஒரு வழக்­க­றி­ஞ­ரைப் பணி­யில் அமர்த்­து­வ­தற்­கான சிந்­தனை ஏது? இது­போன்ற சூழ­லில் உள்ள சில­ருக்கு நான் உத­வி­யுள்­ளேன்,” என்று அவர் கூறி­னார்.

இல­வச சட்ட உத­விக்கு ஒரு­வர் எவ்­வாறு தகு­தி­பெ­ற­லாம்?

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ருக்­காக இல­வ­ச­மாக வாதா­டும் வழக்­க­றி­ஞர்­கள், ‘கிளாஸ்’ (CLAS) எனப்­படும் குற்­ற­வி­யல் சட்ட உத­வித் திட்­டத்­தின் மூலம் இச்­சே­வையை வழங்­கு­கின்­ற­னர். இத்­திட்­டத்­தின் கீழ் உத­வி­பெற விரும்­பு­வோர் இரண்டு நிபந்­த­னை­களை நிறை­வேற்­ற­வேண்­டும்.

ஒன்று, ‘மீன்ஸ் டெஸ்ட்’ அதா­வது விண்­ணப்­ப­தா­ர­ரின் வரு­மா­னம், வாழ்க்­கைத் துணை­யின் வரு­மா­னம், சேமிப்பு, சொத்து ஆகி­யவை 12 மாதக் கால­த்­தில் 10,000 வெள்­ளிக்கு மேல் போகா­மல் இருக்க வேண்­டும்.

மற்­றொன்று, ‘மெரிட்ஸ் டெஸ்ட்’. இதில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ரின் வழக்­கில் நியா­யம் உள்­ளதா என்­பது ஆரா­யப்­படும்.

படங்கள்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!