கனவு மாறினாலும் நிறைவு தரும் பாதையில் ஷிவானி

உயர்­நி­லைப் பள்ளி நாட்­களிலிருந்தே வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குச் சேவை வழங்­கும் துறை ஒன்­றில் இருக்க வேண்­டும் என்­பது 22 வயது ‌‌‌ரா.ஷிவா­னி­யின் ஆசை. குறிப்­பாக, அழ­கான தோற்­றத்­து­டன் சிறந்த வாடிக்­கை­யா­ளர் சேவை வழங்­கும் விமா­னப் பணிப்­பெண்­ணாக எதிர்­கா­லத்­தில் ஆக வேண்­டும் என்­ப­தில் அவர் உறு­தி­யாக இருந்­தார்.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் அவர் சுற்­றுப்­ப­ய­ணத் துறை சார்ந்த நைடெக்’ சான்­றி­தழ் பெற்று ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வாடிக்­கை­யா­ளர் அனு­பவ நிர்­வா­கத் துறை­யில் பட்­ட­யக்­கல்­வி­யைப் பயின்று முடித்­தார். இவ்­வாண்டு மே மாதம் பட்­ட­யக்­கல்வி முடிந்­த­வு­டன் கனவு மெய்ப்­படும் என்று நம்­பிக்கை கொண்­டி­ருந்த ‌ஷிவா­னிக்கு கொவிட்-19 கொள்ளை நோய் சூழல் சவால் விடுத்­தது. ஒட்­டு­மொத்த விமா­னத் துறையே நிலை­குத்­திப் போகும் என்று சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை.

“ஏமாற்­றம் இருந்­தது. இது பல ஆண்டு கனவு மட்­டு­மல்ல. அதற்­கான உழைப்­பை­யும் நான் முத­லீடு செய்­தி­ருந்­தேன். இருப்­பி­னும், தற்­போ­தைய கிரு­மித்­தொற்று நில­வ­ரம் விமா­னப் பணிப்­பெண் ஆவ­தைப் பற்றி சிந்­திக்க வைத்­தது,” என்று ‌ஷிவானி பகிர்ந்­து­கொண்­டார்.

தமக்கு வேறு எதில் ஈடு­பாடு உள்­ளது என்ற சிந்­த­னை­யோட்­டத்­தில் சமூக சேவைத் துறை ஏற்­ற­தாக தோன்­றி­யது. குறிப்­பாக சிறப்­புத் தேவை­க­ளு­டைய பிள்­ளை­க­ளு­டன் செயல்­பட வேண்­டும் என்று தன் பெற்­றோ­ரு­டன் கலந்து ஆலோ­சித்­த­தில் முடி­வெ­டுத்­தார்.

ஆனால் அதற்­கான துறை சார்ந்த வேலை அனு­ப­வ­மும் அதன் தொடர்­பான படிப்­பும் இல்­லா­தது, வேலை தேடு­த­லின்­போது ‌ஷிவா­னிக்­குத் தடை­யாக இருந்­தது. சுமார் 30 சமூக சேவைத் துறை வேலை­க­ளுக்கு விண்­ணப்­பித்­த­தில் எந்த பதி­லும் வர­வில்லை. ‌ஷிவானி முயற்­சி­யைக் கைவி­ட­வில்லை. செயிண்ட் ஆண்ட்­ரூஸ் சிறப்­புத் தேவைப் பள்­ளி­யில் உதவி ஆசி­ரி­ய­ருக்­கான 12 மாத­கால ‘எஸ்ஜி ஒற்­றுமை வேலைப் பயிற்­சித் திட்­டத்­திற்கு’ அவர் விண்­ணப்­பித்­த­போது அவ­ரின் முயற்சி கைகூடி வந்­தது. கடந்த ஆகஸ்ட் மாதம், அப்­பள்­ளி­யில் இணைந்த ‌ஷிவானி, உதவி ஆசி­ரி­ய­ரா­கப் பயிற்சி பெற்று வரு­கி­றார்.

ஆசி­ரி­யர்­க­ளு­டன் இணைந்து பிள்­ளை­க­ளின் கற்­றல் நட­வ­டிக்­கை­களில் உத­வு­வது இவ­ரது பொறுப்பு. சிறப்­புத் தேவை மாண­வர்­க­ளைத் திறம்­பட சமா­ளிப்­ப­தற்­குத் துறை­மீது உள்ள இவ­ரது பேரார்­வம் கைகொ­டுக்­கிறது.

“சில சம­யங்­களில் பிள்­ளை­கள் தங்­க­ளின் உணர்ச்­சி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் வெளிக்­காட்­டு­வர். அப்­போது என்ன செய்­வது என்று தெரி­யா­விட்­டால் சக ஆசி­ரி­யர்­கள் தாங்­கள் கையா­ளும் உத்­தி­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வர். மேலும், ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் தனிப்­பட்ட கல்­விப் பாடத்­திட்­டம் உள்­ளது. பள்ளி

இது­வரை மாண­வர்­க­ளைப் பற்றி சேக­ரித்­துள்ள குணா­தி­சய பின்­ன­ணியை உள்­ள­டக்­கும் அறிக்கைகளை­யும் நான் விவ­ர­மாக படித்து வரு­கி­றேன்,” என்று சொன்­னார் ‌ஷிவானி.

பிள்­ளை­க­ளு­டன் சேர்ந்து பள்ளி வளா­கத்­தில் நடப்­பது, உடற்­ப­யிற்சி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது, அவர்­களை நட­வ­டிக்­கை­க­ளின் வழி மகிழ்­விப்­பது, சக ஆசி­ரி­யர்­க­ளுக்கு உத­வு­வது என செய்­யும் பணி­யில் இன்­பம் காண்­கி­றார் இளை­யர் ‌ஷிவானி. பிள்­ளை­க­ளின் தொடர்­புத் திறன்­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்ற முனைப்­பில் இவ­ரது புதிய பாதை உரு­வாகி வரு­கிறது.

உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சமூக சேவை சார்ந்த பட்­டப்­ப­டிப்­பைப் பகு­தி­நே­ர­மாக மேற்­கொள்ள வேண்­டும் என்­பது இவ­ரது அடுத்த இலக்­கா­கும்.

“நமது கட்­டுப்­பாட்­டில் இல்­லாத வற்­றைப் ‌‌பற்றி எண்ணி துவண்டு போகக்­கூ­டாது. அடுத்து என்ன செய்­ய­லாம் என யோசிக்க வேண்­டும். தேர்ந்­தெ­டுக்­கும் புதிய பாதை மகிழ்ச்சி தந்­தால், தாரா­ள­மாக அந்­தப் பாதை­யி­லேயே செல்­லுங்­கள்,” என்று உற்­சா­க­மூட்டுகிறார் ‌ஷிவானி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon