சுடச் சுடச் செய்திகள்

நிலையான அதிகாரப் பத்திரம்: பொதுமக்கள் கருத்து தேவை

நிலையான அதி­கா­ரப் பத்­தி­ரத்­தை (Lasting Power of Attorney) சமர்ப்­பிக்க, இணை­ய­வா­சல் ஒன்று திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்து பொது­மக்­கள் கருத்து தெரி­விக்­கு­மாறு சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு கோரு­கிறது.

ஒரு­வர் சுய­மாக முடி­வெ­டுக்க இய­லாத நிலை­யில், அவர் சார்­பில் இன்­னொ­ரு­வர் முடி­வெ­டுப்­ப­தற்­கான சட்ட ஆவ­ணத்தை இணை­யத்­தில் விண்­ணப்­பித்­துப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்­பது பொதுக் காப்­பா­ளர் அலு­வ­ல­கம் முன்­மொ­ழி­யும் திட்­ட­மா­கும். விண்­ணப்­ப­தாரர்­களுக்கு இது வச­தி­யாக இருப்­ப­து­டன் பதிவு செய்­வ­தற்­கான கால­மும் குறைக்­கப்­ப­டு­கிறது.

இணை­யத்­தில் இவ்­வாறு சமர்ப்­பிக்­கும் முறையை அனு­ம­திக்க மன­நல ஆற்­றல் சட்­டத்­தைத் திருத்த அமைச்சு முன்­மொ­ழி­கிறது.

திருத்­தச் சட்­டம் தொடர்­பில் அக்­டோ­பர் 28ஆம் தேதி தொடங்கி நவம்­பர் 18ஆம் தேதிக்­குள் கருத்து தெரி­விக்­கு­மாறு அமைச்சு பொது­மக்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­கிறது.

தற்­போ­தைய முறை­யில் பதிவு செய்­வ­தற்கு மூன்று வாரங்­கள் ஆகிறது. இணை­யம் வழி அது எட்டு நாட்­க­ளாகக் குறைக்­கப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon