8 ஆண்டுகளில் 5 பிள்ளைகள்; வளர்ப்புத் தாயாருக்கு விருது

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக ஐந்து வளர்ப்­புப் பிள்­ளை­களை வளர்த்த வளர்ப்­புத் தாய்க்கு விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

வளர்ப்­புப் பிள்­ளை­களை வளர்த்த அதே சம­யத்­தில் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­கும் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய முதி­யோ­ருக்­கும் உதவ சமூக நலத் திட்­டம் ஒன்­றை­யும் 53 திரு­வாட்டி சரிமா அமாட் தொடங்­கி­ வைத்­தார்.

இல்­லத்­த­ர­சி­யான திரு­வாட்டி சரிமா அமாட் வசதி குறைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த உள்­ளூர் பிள்­ளை­க­ளுக்­கும் வெளி­நாட்­டுப் பிள்­ளை­க­ளுக்­கும் பள்­ளிக்­குத் தேவை­யான புத்­த­கங்­கள்,

பேனாக்­கள், பென்­சில்­கள் போன்ற பொருட்­களை வழங்­கும் திட்­டத்தை நடத்தி வரு­கி­றார்.

அது­மட்­டு­மல்­லாது தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­களில் உள்ள ஆத­ர­வற்ற குழந்­தை­க­ளுக்கும் அவர் உத­விக்­க­ரம் நீட்­டி­னார். மலே­சி­யா­வில் வெள்­ளம் ஏற்­பட்­ட­போது அதன் கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வும் வகை­யில் நிவா­ர­ணப் பணிக­ளுக்கு அவர் ஏற்­பாடு செய்­தார்.

திரு­வாட்டி சரிமா அமாட்­டின் இந்த அரும்­பெ­ரும் பணி­களை அடை­யா­ளம் கண்டு அவ­ருக்கு இவ்­வாண்­டின் மிகச் சிறந்த ஈசூன் குடி­யி­ருப்­பா­ளர் விருது வழங்­கப்­பட்­டது. திருவாட்டி சரிமா அமாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள விருதை நீ சூன் நகர மன்­றம் முதல்­மு­றை­யாக வழங்­கு­கிறது.

சமூ­கத்­துக்­குப் பங்­க­ளித்­துள்ள, சேவை செய்­யும் உணர்­வுள்ள குடி­யி­ருப்­பா­ளரை அடை­யா­ளம் கண்டு அவ­ருக்­குப் பெருமை சேர்ப்­பதே இந்த விரு­தின் இலக்கு.

விருது பெறு­வ­தற்­காக ஐந்து பேர் முன்­மொ­ழி­யப்­பட்­ட­னர். ஃபேஸ்புக் மூலம் நடத்­தப்­பட்ட வாக்­க­ளிப்­பில் பெரும்­பா­லா­னோர் திரு­மதி சரிமா அமாட்­டைத் தேர்ந்­தெ­டுத்­த­னர்.

2010ஆம் ஆண்­டில் முழங்­கா­லில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக திரு­வாட்டி சரிமா அமாட்­டுக்­குக் குழந்­தைப் பரா­ம­ரிப்பு ஆசி­ரி­யர், சீலாட் தற்­காப்­புக் கலை பயிற்­று­விப்­பா­ளர் ஆகிய பணி­களி­லி­ருந்து விலக வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அடுத்து என்ன செய்­ய­லாம் என்று யோசித்­து­கொண்­டி­ருந்­த­போது, பிள்­ளை­களை வளர்க்­கும் திட்­டம் குறித்து தெரி­ய­வந்­த­தாக அவர் கூறி­னார்.

2012ஆம் ஆண்­டில் நான்கு வயது சிறு­மியை அவர் பரா­ம­ரிக்­கத் தொடங்­கி­னார். இந்­தச் சிறுமி இன்­றும் அவ­ரது பரா­ம­ரிப்­பின்­கீழ் உள்­ளார். 2013ஆம் ஆண்­டில் மூன்று வயது சிறு­வனை அவர் வளர்க்­கத் தொடங்­கி­னார்.

ஆனால் ஏழு மாதங்­க­ளி­லேயே வலிப்பு நோய் கார­ண­மாக அச்­சி­று­வன் உயி­ரி­ழந்­தான்.

அத­னைத் தொடர்ந்து, இன்­னொரு மூன்று வயது சிறு­வ­னைத் திரு­வாட்டி சரிமா அமாட் ஆறு மாதங்­க­ளுக்கு வளர்த்­தார். 2015ஆம் ஆண்­டில் இரண்­டரை வயது சிறு­வனை ஐந்து மாதங்­க­ளுக்கு அவர் வளர்த்­தார்.

2016ஆம் ஆண்­டில் இரண்டு மாதப் பெண் குழந்­தையை அவர் வளர்க்­கத் தொடங்­கி­னார். அக்­கு­ழந்தை இன்­றும் அவ­ரு­டன் வசித்து வரு­கிறது.

திரு­வாட்டி சரிமா அமாட்­டுக்கு சொந்த பிள்ளைகள் மூவர் உள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் வளர்ந்து பெரி­ய­வர்­க­ளா­கி­விட்­ட­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!