இனி வாழ்வில் பொற்காலம்

புத்­தாடை அணிந்து, பல­கா­ரங்­க­ளைச் சுவைத்­துக்­கொண்டே குதூ­க­லத்­து­டன் ஓடி விளை­யா­டும் பிள்­ளை­க­ளைப் பார்த்­த­போது திரு ரவி - மகா­லெட்­சுமி தம்­ப­திக்கு ஆனந்­தக் கண்­ணீர் பெரு­கி­யது. பல ஆண்­டு­கால சிர­மத்­திற்­குப் பிறகு, குடும்­பத்­து­டன் மகிழ்ச்­சி­யோடு தீபா­வளி கொண்­டா­டும் உற்­சா­கம் அவர்­கள் முகங்­களில் ஒளிர்ந்­தது.

பதின்ம வய­தில் வாழ்க்­கை­யில் தடம்­மாறி தீய வழி­யில் சென்று, பல­முறை சிறை­யில் தனது நாட்­களை கழித்­த­வர் திரு ரவி.

குடும்­பச் சூழல் கார­ண­மாக தொடக்­க­நிலை 6 வரை அவ்­வப்­போ­து­தான் பள்­ளிக்குச் செல்­வார். சரி­யான வழி­காட்­டு­தல் இல்லை. குடும்­பத்­தி­ன­ரும் ஆத­ர­வாக இல்லை. வாக­னத் திருட்டு, சிகரெட் கடத்­தல் போன்ற பல குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டார்.

2012ல் ஒரு சண்­டை­யில் தோள், முகம், கைகள், விரல்­கள் என பல இடங்­களில் ஆழ­மான வெட்­டுக்­கா­யம் ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார். அப்போது அவ­ரைக் கவ­னித்­துக்­கொண்­ட­வர் மகா­லெட்­சுமி மட்­டும் ­தான். தனி­மை­யில் இருந்­த­போது தனது நிலையை நினைத்து வேத­னைப்­பட்ட திரு ரவி, இனி இது­போன்ற சட்ட விரோத நட­வடிக்­கை­க­ளி­லும் ஈடு­ப­டக்­கூ­டாது என்று உறு­தி­பூண்­டார். 2013ல் மகா­வைத் திரு­ம­ணம் செய்­து­கொண்டு புதிய பாதை­யில் காலடி வைத்­தார்.

வாழ்க்­கை­யில் நல்ல நிலைக்கு வர வேண்­டும் என்ற ஒரே இலக்­கு­டன் உழைத்து வந்த இவர்­களுக்கு பல சறுக்­கல்­கள்.

2014 முதல் ‘ஹிர­யமா’ என்ற தசைத் தளர்வு நோயால் பாதிக்­கப்­பட்ட 38 வயது திரு ரவி ராஜ­சே­க­ர­னுக்கு கைகள் அவ்­வப்­போது செய­லி­ழந்து விடும். இருப்பினும், பல வேலை­க­ளைச் செய்த அவர், கடந்த ஈராண்­டு­க­ளாக வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­யில் துப்­பு­ர­வா­ள­ரா­கப் பணி­பு­ரிந்து வந்­தார்.

திரு­மதி மகா பாலர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் பகு­தி­நே­ரமாகப் பணி­பு­ரிந்­தார். இரு­வ­ரும் ஈட்டிய $2,900 மொத்த வரு­மா­னம், கொவிட்-19 கிரு­மித்தொற்று பர­வல் அதி­க­மா­ன­போது நின்­று­போ­னது. திரு ரவிக்கு வேலை போனது. தொடக்­கப்­பள்­ளி­யில் படிக்­கும் மக­னும், பாலர்­பள்­ளி­யில் படிக்­கும் மகளும் இணை­யம் வழி பாடம் கற்க வேண்டி இருந்­த­தால் திரு­மதி மகா வேலையை விட­வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது. வீட்­டில் ­கணினி இல்­லா­தா­தல், பெற்­றோ­ரின் கைத்­தொ­லை­பே­சி­க­ளின் வழி­தான் அவர்­கள் பாடங்­க­ளைக் கற்­ற­னர்.

“மிக­வும் கடி­ன­மான சூழ்­நிலை. வரு­மா­னமே இல்லை. பிள்­ளை­களுக்குத் தேவை­யா­ன­வற்றை வாங்­கித் ­தர பண­மும் இல்லை,” என்­றார் 30 வயது திரு­மதி மகா.

அந்­நே­ரத்­தில் அர­சாங்­கம், சிண்­டா­வின் பல்­வேறு உத­வி­கள் அவர்­க­ளுக்கு வாழ்க்­கையை நடத்த ஓர­ளவு உத­வின.

தமது பிள்­ளை­கள் தம்மைப் போன்று வாழ்க்­கை­யில் சிரமப்படக்­கூ­டாது என்று தொடர்ந்து வேலை தேடி­னர். ‘ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர்’ திட்­டம் வழி, திறனை வளர்த்­துக்­கொண்டார். துப்­பு­ர­வா­ள­ராகப் பணியைத் தொடங்­கிய திரு ரவி, தற்­போது ‘கிளி­யர்3’ என்ற நிறு­வ­னத்­தில் துப்­பு­ரவு செயல்­பாட்டு மேலா­ள­ராக உள்ளார்.

தொடக்­கத்­தி­லி­ருந்து தமது பெற்­றோ­ரின் ஆத­ரவு தமக்­குப் பெரிய பல­மாக இருப்­ப­தா­கக் கூறும் திரு­மதி மகா, தற்­போது இந்­திய வர்த்­தக நிறு­வ­ன­மொன்­றில் நிர்­வா­கி­யாக உள்­ளார்.

“எனக்கு வாழ்க்­கை­யில் மூன்று குறிக்­கோள்­கள் உள்­ளன. எனது பிள்­ளை­க­ளுக்கு நல்ல எதிர்­கா­லத்தை அமைத்து தர­வேண்­டும். சொந்த வீடு வாங்க வேண்­டும். என்னை போன்ற முன்­னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­கும் உதவ வேண்­டும். அர­சாங்க அமைப்­பு­களும், முக்­கி­ய­மாக சிண்­டா­வும் வாழ்க்­கை­யின் அடி­மட்­டத்­தி­லி­ருந்து மேலேறி வர எனக்கு கைகொடுத்து உத­வி­யி­ருக்­கின்­ற­னர். இப்போது ஓர­ள­வு ­நல்ல நிலை­யில் இருக்­கும் நான் எனக்கு உத­விக்­க­ரம் நீட்­டிய சமூ­கத்­திற்கு என்­னால் முடிந்த விதத்­தில் உதவ விரும்­பு­கி­றேன். நான் துப்­பு­ர­வா­ள­ராக இருந்­த­போது பலர் என்னை இழி­வா­க­ப் பேசி­யிருக்­கின்­ற­னர். அப்­போது நான் அடைந்த வேத­னையை, வாழ்ந்து சாதித்­துக்­காட்ட வேண்­டும் என்ற வெறி­யாக மாற்­றி­னேன்,” என்ற திரு ரவி­யி­டம் அந்த உறுதி தென்­பட்­டது.

“பல அமைப்­பு­களும் அர­சாங்­க­மும் தனி மனி­தர்­களும் எங்­க­ளுக்கு உதவி உள்­ள­னர். எனினும் சொந்­தக் காலில் நின்று எனது குடும்­பத்­தை நல்ல நிலைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். கைகள் ஒழுங்­காக செயல்­ப­டா­விட்­டா­லும் உடம்­பில் உயிர் இருக்­கும் வரை எப்­ப­டி­யா­வது கடி­ன­மாக உழைத்து எனது பிள்­ளை­கள் விரும்பி கேட்­கும் அனைத்­தை­யும் செய்­து­கொ­டுக்க வேண்­டும். தற்­போது செய்­யும் பணி­யில் சிறக்க பல முயற்­சி­கள் எடுத்து வரு­கி­றேன். இத்துறை சம்­பந்­த­மா­ன­வற்றை பற்றி இணை­யத்­தில் படித்து என்னை மேம்­ப­டுத்­திக்­கொள்­கி­றேன்,” என்றார் திரு ரவி.

கொவிட்-19 கிரு­மித் தொற்று பர­வல் கட்­டுப்­பாட்டு காலத்­தின்­போது, தமது அடுக்­கு­மா­டி­யில் குடி­யி­ருக்­கும் வய­தா­ன­வர்­க­ளின் நலம் கருதி கட்­ட­டத்­தின் லிஃப்டை பல­முறை தாமே முன்­வந்து துடைத்து சுத்­தம் செய்த திரு ரவி ஆற்­றிய பொது சேவைக்­காக தேசி­யச் சுற்­றுப்­புற அமைப்பு அவ­ருக்கு விருது அளிக்­க­வுள்­ளது.

தீபத் திரு­நாளை முன்னிட்டு தமது நிறு­வ­னத்­தின் மேற்­பார்­வை­யா­ளர், முன்பு பணி­பு­ரிந்த ‘அகோரி ஆத்மா’ இறு­திச் சடங்கு சேவை நிறு­வ­னம் ஆகி­யோ­ரு­டன் இணைந்து வசதி குறைந்­த­வர்­களுக்கு உணவு பொட்­ட­லங்­கள் வழங்­க­வுள்­ளார் திரு ரவி.

சிரமப்படுபவர்களுக்கு பிறரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை நான் நன்கு உணர்ந்தவன். இந்த தீபாவளி விழாக்காலத்தில் எனது குடும்பம் அடையும் மகிழ்ச்சியை பிறருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ரவி ராஜசேகரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!