வருத்தம் தீர்த்த தீபாவளி வர்த்தகம்

லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­க­ளுக்கு இவ்­வாண்டு தீபா­வளி விற்­பனை இன்ப அதிர்ச்­சி­யாக அமைந்­தது. கொவிட்-19 நெருக்­க­டி­யால் பல மாதங்­க­ளாக வியா­பா­ரம் இல்­லா­மல் முடங்­கிக் கிடந்த பல­ரும் தீபா­வளி வியா­பா­ரம் குறித்து மிகுந்த நம்­பிக்கை கொள்­ள­வில்லை. அத­னால் புதிய பொருள்­கள் இறக்­கு­ம­தி­யை­யும் கொள்­மு­த­லை­யும் சற்று அச்­சத்­து­ட­னும் கவ­ன­மா­க­வும் செய்­தனர்.

ஆனால், அவர்­கள் நினைத்­த­தற்கு மாறாக, கடந்த ஒரு மாதத்­திற்­கு முன்னரே வர்த்­த­கம் சூடு­பி­டிக்கத் தொடங்கியது.

சிராங்­கூன் சாலை, பஃப்ளோ சாலை, கேம்­பல் லேன், டன்­லப் ஸ்தி­ரீட், அப்­பர் டிக்­சன் சாலை என லிட்­டில் இந்­தி­யா­வில் மக்­கள் நட­மாட்­டம் அதி­க­முள்ள பல பகு­தி­களி­லும் கடை வைத்­துள்ளோருக்கு இந்­தத் தீபா­வளி செழிப்­பான விழாக்­கா­ல­மாக அமைந்­தது.

பெருவாரியான ஆதரவு தந்த உள்ளூர்வாசிகள், மலேசியர்கள்

தீபா­வளி எக்ஸ்போ, விற்­ப­னைச் சந்­தை­கள் இல்­லாத கார­ணத்­தால் நிரந்­த­ர­மாக செயல்­படும் கடை­களுக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வருகை அதி­க­மாக இருந்­தது என்­றார் தேக்­கா­வில் ஐந்து கடை­களை வைத்­தி­ருக்­கும் ‘மஹி‌‌‌ஷா கலெக்­‌‌ஷன்ஸ்’ உரி­மை­யா­ளரான திரு முருகை­யன் இளங்கோ, 48.

“விற்­ப­னைச் சந்­தை­யில் கடை­கள் எடுத்து நடத்­தி­னால் அதற்­கே ­கிட்­டத்­தட்ட $20,000 செல­வா­கும். இம்­முறை அது இல்­லா­த­தால் மக்­கள் வழக்­க­மாக இயங்­கும் கடை­களுக்கு வந்­த­னர். அங்­கும் இங்­கும் செல்ல வேண்­டிய அலைச்­ச­லும் இல்லை. கடந்த ஆண்­டை­விட இவ்­வாண்டு வியா­பா­ரம் 40% அதி­க­மாக இருந்­தது. சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சி­யர்­கள் பல­ரும் புத்­தாடைகளை வாங்­கிச் சென்­ற­னர்,” என்­றார் திரு இளங்கோ.

அதே நேரத்­தில், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வருகை குறை­வாக இருந்­தது சில கடை­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

“தீபா­வ­ளிக்கு வேட்டி, சட்டை வாங்­கு­வ­தற்­காக கணி­ச­மான எண்­ணிக்­கை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வரு­வார்­கள். இவ்­வாண்டு அவை கிட்­டத்­தட்ட 50%தான் விற்­பனை­யா­கின,” என்­றார் ‘ஸ்ரீ கணே‌ஷ் டெக்ஸ்­டைல்ஸ்’ உரி­மை­யா­ளர் திரு ராஜேந்­தி­ரன்.

“வழக்­க­மாக தீபா­வ­ளித் திரு­நா­ளுக்­காக விடு­முறை எடுத்து அதி­க­மான இந்­திய ஊழி­யர்­கள் சொந்த ஊர் செல்­வர். இல்லை எனில், இந்­தியா செல்­லும் நண்­பர்­கள் மூல­மா­கவோ, ‘கூரி­யர்’ சேவை மூல­மா­கவோ குடும்­பத்­தி­ன­ருக்­குப் பொருள்­களை வாங்கி அனுப்­பு­வர். இம்­முறை அந்த வியா­பா­ரம் நடக்­கவே இல்லை,” என்­றார் ‘சங்­கம் டெக்ஸ்­டைல்ஸ்’ ஊழி­யர் திரு­வாட்டி பாக்­கி­ய­லட்சுமி.

ஆயி­னும், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வராத குறையை மலே­சி­யர்­களும் உள்­ளூர்­வா­சி­களும் தீர்த்து வைத்­த­னர் என்று சொன்னார் ‘மினோரா ஜுவல்ஸ்’ நகைக்­க­டை­யின் திருவாட்டி இந்­திரா.

“இவ்­வாண்டு தீபா­வளி அமோ­க­மாக அமைந்­தது. புதிய ‘டிசைன்’ களை நாங்­கள் தரு­வித்­த­தோடு விலை­யை­யும் மற்ற கடை­க­ளை­விட குறைத்து விற்­றோம். அத­னால் நாங்­கள் இது­வரை காணாத அளவிற்குத் தீபா­வளி வியா­பா­ரம் நடந்­தது,” என்று அவர் கூறினார்.

தையல் தொழில் அமோகம்

இந்­தத் தீபா­வ­ளிக்குப் பல தையல் கடை­களிலும் தொழில் சிறப்­பாக இருந்­தது. தீபா­வ­ளிக்கு ஏறத்­தாழ இரண்டு வாரங்­களே இருந்தபோது தையற்­கா­ரர்­கள் பல­ருக்­கும் வேலை­கள் குவிந்­தன.

“தீபா­வ­ளிக்கு ஏறக்­கு­றைய 2,000 தையல் வேலை­கள் செய்­தோம். சிங்­கப்­பூ­ரர்­கள், மலே­சி­யர்­கள் எனப் பல­ரும் வெளி­நா­டு­சென்று தைக்க முடி­யா­த­தால் எங்­களை நாடி வந்­த­னர். தீபா­வ­ளிக்­குப் பத்து நாள்­க­ளுக்கு முன்­னரே புதுக் கோரிக்­கை­கள் எடுப்பதை நிறுத்­தி­விட்­டோம்,” என்­றார் தேக்கா சந்­தை­யில் 15 ஆண்­டு­க­ளாக ‘டீலக்ஸ் ஃபே‌ஷன்’ தையல் கடையை நடத்தி வரும் திரு மு. வேலுச்­சாமி, 53.

வழக்­க­மாக தீபா­வளிக்கு ஒரு வாரத்­திற்கு முன்­னர்­தான் வியா­பாரம் சூடு­பி­டிக்­கும் என்றும் ஆனால் இவ்­வாண்டு ஒரு மாதகால­மா­கவே வியா­பா­ரம் அதி­க­மாக இருந்­தது என்றும் சொன்­னார் ‘‌‌‌ஷாருக்கான்’ துணிக்கடை­யின் திருவாட்டி நவ­மணி, 51.

“இம்­முறை வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ரும் பேரம் பேசா­மல் சொன்ன விலைக்கு வாங்­கிச் சென்­ற­னர். கொரோனா தொற்று பிரச்­சினை தொடங்­கி­ய­போது வியா­பா­ரம் துவண்டுபோனது. தீபா­வ­ளிக்கு ஒரு மாதம் இருந்த நிலை­யில் வியா­பா­ரம் சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­யது. கடந்த பல மாதங்­களில் ஏற்­பட்ட இழப்பை தீபா­வளி மூலம் பல கடை­களும் ஈடு­கட்­டி­விட்­டன,” என்று திருவாட்டி நவ­மணி கூறினார்.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளாக தீபா­வ­ளிக்கு கைப்­பட பல­கா­ரங்­களைச் செய்து விற்று வரு­கிறது ‘கதிஜா பேக்ஸ்’. இவ்­வாண்டு நேரடி கடை எடுத்து நடத்த திட்­ட­மி­டாமல் இணை­யம் வழி­யாக விற்க முயன்­ற­தா­கச் சொன்­னார் அந்தப் பலகாரக் கடை­யின் உரிமை­யா­ளர் திரு­வாட்டி கதிஜா பேகம், 53.

“ஆனால், தயார் செய்து வைத்த பல­கா­ரங்­களை இணை­யம் மூலம் விற்­பது கடி­ன­மாக இருந்­தது. கடை வைத்து விற்றபோது எதிர்­பார்க்­காத அள­விற்கு வியா­பா­ரம் ஆனது. சென்ற ஆண்­டை­விட இரண்டு மடங்கு அதி­க­மாக விற்­றோம்,” என்­றார் திரு­வாட்டி கதிஜா.

விற்றுத் தீர்ந்த பழைய சரக்கு

வீட்டு உப­யோக, அலங்­கா­ரப் பொருள்­களை விற்­கும் ஒரு கடை, இந்­தத் தீபா­வ­ளிக்­கெ­னப் பிரத்­தி­யே­க­மாக சரக்­குக் கொள்­மு­தல் செய்­ய­வில்லை. வழக்­க­மாக தீபா­வளிக்­கா­கக் கிட்­டத்­தட்ட $100,000 மதிப்­பி­லான பொருள்­களை இறக்கு­மதி செய்­யும் அக்­கடை, இம்முறை இருப்­பில் இருந்த பொருள்­களை விற்­றுத் தீர்த்­தது.

பெயர் கூற விரும்­பாத அந்தக் கடையின் ஊழி­யர் ஒருவர், “விற்க முடி­யாது என்று இது­வரை நினைத்­தி­ருந்த பழைய சரக்­கு­களை இம்­முறை விற்­று­விட்­டோம்,” என்­றார்.

“இவ்­வாண்­டில் பட்ட இழப்பை எல்­லாம் தீபா­வளி வியா­பா­ரத்­தைக் கொண்டு சரி­செய்­து­விட்­டோம்,” என்று நிம்­ம­திப் பெரு­மூச்­சு­விட்­டார் ஆடை அணி­க­லன்­கள் விற்­கும் 64 வயதான திரு தியா­க­ரா­ஜன்.

முதல்­மு­றை­யாக முழுக் கடை­வீட்டை ஒன்­றரை மாதம் தற்­கா­லிக வாட­கைக்கு எடுத்த ‘பாவாஸ் டெலி­கசி’ நிறு­வ­னம், வியா­பா­ரம் சிறப்­பாக இருந்­ததால் டன்­லப் ஸ்திரீட்­டில் நிரந்­த­ர­மாகத் தொழில் செய்­யத் திட்­ட­மிட்டு வருகிறது.

அதிக விலையால் அதிர்ச்சி

தீபா­வளி வியா­பா­ரம் வர்த்­த­கர்­கள் பல­ருக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக இருந்­தா­லும் பொருள்­க­ளின் விலை அதி­க­மாக இருந்­த­தாக வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ரும் மனக்­கு­றைப்­பட்­ட­னர்.

“எதிர்­பார்த்த அள­விற்கு தீபா­வளிக்­குத் தேவை­யான எல்லா பொருள்களும் தேக்காவில் உள்ள கடை­களில் கிடைத்­தா­லும் விலை­அதி­க­மா­கவே இருந்­தது,” என்­றார் திரு­மதி சாந்தி பழனி­யப்­பன், 48.

“நான் தேக்கா நிலை­யத்­தில் ஒரு கடை­யில் $50க்கு சுடி­தார் வாங்­கி­னேன். அக­லம் அதி­க­மாக இருந்­த­தால் தையற்­கா­ர­ரி­டம் சென்­றேன். அதற்கு அவர் 35 வெள்ளி தையற்கூலி கேட்டதால் அதிர்ச்­சி­யில் உறைந்து­போ­னேன்,” என்று மனம் குமு­றி­னார் குமாரி திவ்­ய­லட்­சுமி கணே­சன், 26.

இம்­முறை பட்­டாசு இறக்­கு­மதி குறை­வாக இருந்­த­தா­கக் கடைக்­கா­ரர்­கள் தெரி­வித்­த­னர். ஆயி­னும், அவை கொள்ளை விலைக்கு விற்­கப்­பட்­ட­தா­கக் கூறி ஆதங்­கப்­பட்­டார் திரு­வாட்டி கல்­பனா, 38.

“ஒரு கம்பி மத்­தாப்­புப் பெட்­டி­யில் இருந்து மூன்று பாக்­கெட்­டு­களை வெளி­யில் எடுத்து, அது 20 வெள்ளி எனக் கடைக்­கா­ரர் சொன்­ன­தால் வாங்­கா­மல் வீடு திரும்­பி­விட்­டேன்,” என்­றார் அவர்.

கால்கடுக்கக் காத்திருப்பு

அதே­போல, பூ, பல­கா­ரம், அலங்­கா­ரம், இறைச்சி, காய்­கறி, மளிகை போன்ற பொருள்­களை விற்­கும் கடை­களில் தீபா­வளி தினத்தை ஒட்­டிய நாட்­களில் வாடிக்­கை­யா­ளர் கூட்­டம் அதி­க­மாக இருந்­த­தால் பல­ரும் வெகு­நே­ரம் காத்­தி­ருக்க வேண்­டி­ய­தா­யிற்று.

“இரண்டு மணி நேரத்­திற்கு மேலாக இறைச்சி வாங்க வரி­சை­யில் நின்­றேன். எனது முறை வந்­த­வு­டன் நான் கேட்ட இறைச்சி வகை­கள் விற்­றுத் தீர்ந்து­விட்­ட­தா­கக் கடைக்­கா­ரர் கூறினார். அத­னால் கிடைத்­ததை வாங்கி வர வேண்­டி­ய­தா­யிற்று,” என்று புலம்­பினார் திரு தமி­ழ­வேல், 41.

“இனிப்­புப் பல­கா­ரங்­களை நான் எப்­போ­தும் லிட்­டில் இந்­தியா ஆர்­கேட்­டில் உள்ள கடை­யில்­தான் வாங்­கு­வேன். ஆனால் எந்த ஆண்­டும் இல்­லாத அள­விற்கு இம்­முறை நீண்ட வரி­சை­யில் கால்­க­டுக்க நிற்க வேண்­டி­யி­ருந்­தது,” என்­றார் 65 வய­தான திரு புக­ழேந்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!