முதியோருக்கு விமானத்தில் விருந்தோம்பல்

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் தனது ‘ஏ380’ ரக விமா­னங்­களை உண­வ­கங்­க­ளாக்கி மக்­கள் உண­வ­ருந்­தும் சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அந்த அனு­ப­வத்தை தங்­க­ளின் அமைப்­பைச் சேர்ந்த மூத்­தோ­ருக்கு ஏற்­ப­டுத்­தித் தந்­தது சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக்.

“சங்­கம் தொடர் நிகழ்ச்­சிகள் மூலம் உறுப்­பி­னர்­க­ளுக்கு கலந்­து­ற­வா­டும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­தும். கொரோனா சூழலில் அது சாத்திய மாகவில்லை. எனவே, மன உளைச்­ச­லுக்கு உள்­ளான மூத்த உறுப்­பினர் ­க­ளுக்கு மகிழ்ச்சி ஏற்­ப­டுத்த விருந்தை வழங்கினோம்,” என்­றார் ஏற்பாட்டை முன்­னின்று செய்த அமைப்­பின் துணைச் செய­லா­ளர் திரு முஹை­யத்­தீன் பிச்சை, 60.

“பொரு­ளா­தார நெருக்­க­டி­யைச் சந்­திக்­கும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்சுக்கு அமைப்பு ஆத­ரவை அளிக்க முனைந்­தது,” என்­றார் சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக்­கின் ஆலோ­ச­க­ரும் முன்­னாள் தலை­வ­ரு­மான திரு நசீர் கனி.

“விருந்­துக்கு வந்­த­வர்­களில் சிலர் தங்­கள் வாழ்­நா­ளில் விமா­னத்­தில் ஏறி­யதே கிடை­யாது. இந்த அனு­ப­வம் அவர்­க­ளுக்கு மறக்­க­மு­டி­யாத அனு­ப­வ­மாக அமைந்­தது,” என்­றார் திரு முஹை­யத்­தீன்.

சக உறுப்­பி­னர்­க­ளு­டன் விருந்­துண்டு விமா­னத்­தைச் சுற்­றிப்­பார்த்ததில் மகிழ்ச்சி­ய­டைந்­தார் ஓய்­வு­பெற்ற தமி­ழா­சி­ரியை திரு­மதி மரி­யம் பீவி.

“வெளி­நாட்­டுக்­குச் சென்று வந்­த­தைப் போலவே இருந்­தது. விமா­னத்­தில் இருந்­த­போது மழை பெய்­தது. விமா­னம் பறப்­பது போன்றே உணர்வு இருந்­தது,” என்ற அவர், இது தனித்­து­வ­மான அனு­ப­வ­மாக இருந்­ததென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!