சீன இசையுடன் ஒலித்த ‘உன்னைக் கண்டு நான் ஆட’ பாடல்

தமிழ்ப் பாட­லுக்கு சீன இசைக் கரு­வி­க­ளைக் கொண்டு சீன இசைக் குழு ஒன்று மெல்­லிசை வழங்கி அசத்­தி­யுள்­ளது. ‘உன்­னைக் கண்டு நான் ஆட’ எனும் பிர­பல தமிழ்ப் பாட­லுக்கு சீன இசை வழங்­கப்­பட்­டுள்­ளது.

தீபா­வ­ளியை முன்­னிட்டு வெளி­யி­டப்­பட்ட இந்த இசைக் காணொளியை, தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் வளா­க­மும் நினை­வுச் சின்­னப் பாது­காப்­புப் பிரி­வும் சிங்­கப்­பூர் சீனப் பண்­பாட்டு மைய­மும் இணைந்து தயா­ரித்­துள்­ளன.

தேசிய நினை­வுச் சின்­னங்­களை வேறொரு கண்­ணோட்­டத்­தில் காண­வும் உள்­ளூர் இசைக் கலை­ஞர்­க­ளின் திறன்­களை வெளிக்­கொண்­டு­வ­ர­வும் இந்த முயற்சி எடுக்­கப்­பட்­ட­தாக தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் தெரி­வித்­தது.

தீபா­வ­ளியை முன்­னிட்டு வெளி­யி­டப்­பட்ட இந்­தக் காணொ­ளி­யில் ‘MUSA’ எனும் மூவர் கொண்ட இசைக் குழு, தமிழ்ப் பாடலுக்கு சீன இசைக் கரு­வி­க­ளைக் கொண்டு புது­வித இசையை வழங்­கி­யுள்­ளது. ‘குரோஸ் ரே‌ஷியோ’ எனும் இசைப் படைப்பு நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பா­ளர் ஜாய்ஸ், இப்­பா­டலை சீன இசைக்­க­ரு­வி­க­ளுக்கு ஏற்ப மாற்றி அமைத்­துள்­ளார்.

‘MUSA’ குழு­வின் டெயின் இங் கீபோர்ட் கரு­வி­யை­யும் இரட்­டை­யர்­க­ளான டான் சூமின் கிளேரா ‘சொங்­ரு­வான்’ இசைக் கரு­வி­யை­யும் டான் சூஹுயி சோஃபி ‘கூசெங்’ இசைக்­க­ரு­வி­யை­யும் கொண்டு பாட­லுக்­குப் புதிய வடி­வத்தை வழங்­கி­யுள்­ள­னர்.

இரட்­டை­யர்­கள் சீனா­வின் ‌‌‌ஷாங்­கா­யில் சீன இசை­யில் முது­க­லைப் பட்­டம் பெற்­ற­வர்­கள்.

தந்­தை­யின் அதீத இசை ஆர்­வத்­தால் இந்­தத் துறை­யி­லேயே தங்­க­ளின் வாழ்க்­கைத் தொழி­லைத் தொடங்­கி­னர்.

இரு­வ­ரும் முத­லில் இசைக் குழு தொடங்­கி­ய­போது பதிவு பொறி­யாள ராக டெயின் செயல்­பட்­டார். மூவ­ரும் நன்­யாங் நுண்­க­லைக் கழ­கத்­தில் பயின்­ற­வர்­கள். தற்­போது டெயின் அங்கு துணை விரி­வுரை யாள­ரா­க­வும் செயல்­ப­டு­கி­றார்.

“இந்­தப் படைப்­பில் ஈடு­பட்­டது மிக­வும் பய­னுள்ள அனு­ப­வ­மாக இருந்­தது. ஒவ்­வோர் இசை­யும் அந்­தந்த கலா­சா­ரத்­திற்கு ஏற்ப தனித்­து­வம் வாய்ந்து இருக்­கும். வேறொரு கலா­சார கரு­வி­க­ளைக் கொண்டு வாசிப்­பது சிர­மம்­தான். ஆனால் அதற்கு ஏற்ப மாற்றி அமைத்து இந்­தப் பாடலை உரு­வாக்­கி­ய­தில் பெருமை கொள்­கி­றோம்,” என்­றார் சோஃபி.

https://www.youtube.com/watch?v=oGLGko4PgGE என்ற இணைய முகவரியில் காணொ­ளி­யைக் கண்­டும் கேட்­டும் ரசிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!