எழுதுவது, வாசிப்பது, படிப்பது எல்லாமே இவருக்கு சிரமம்தான்.... ஆனால்...

தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு முடி­வு­க­ளைக் கைகளில் வாங்­கிப் பார்த்த ஷாஷனா ஏஷ்லி இயந்­திரா­வுக்கு கண்­ணீர் பெருக்­கெ­டுத்­தது. ஓடிச் சென்று அம்­மாவை அணைத்­துக்­கொண்­டார்.

மகள் தேர்­வில் தேர்ச்­சி­ய­டை­ய­வில்லை என்ற முடி­வோடு, அவ­ளைச் சமா­தா­னப்­ப­டுத்த சிரித்­த­முகத்­து­டன் அவளை அணைத்து ஆறு­தல் தெரி­வித்­தார் அம்மா.

அப்­போது, கைக­ளி­ல் பிடித்­தி­ருந்த தேர்வு முடி­வு­களைக் காட்டி உயர்­நி­லைப் பள்­ளிக்­குச் செல்ல தான் தகு­தி­பெற்­று­விட்­ட­தாக ஷாஷனா கூற­வும், தாயார் ஜெக­தீஸ்­வ­ரிக்­கும் அள­வற்ற மகிழ்ச்­சி­யில் கண்­ணீர் பெரு­கி­யது.

“என் மக­ளுக்கு இது ஒரு பெரிய சாதனை. இத்­தனை சிர­மங்­க­ளி­லும் 136 மதிப்­பெண்­கள் வாங்­கிய எனது மகளைக் கண்டு நான் பெரு­மி­தம் அடை­கி­றேன்,” என்று உணர்ச்­சி­மே­லிட, கண்­ணீர் மல்க கூறி­னார் 35 வயது ஜெகதீஸ்­வரி.

கற்­றல், எழு­து­தல், வாசித்­தல் ஆகிய மூன்று அடிப்­ப­டைக் காரி­யங்­க­ளைச் செய்­ய­வும் ஷாஷனா எஷ்லி இயந்­திரா போராட வேண்­டும். “ஏன் வாக்­கி­யங்­களை நினைவு வைத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை? ஏன் வார்த்­தை­கள் மாறிக்­கொண்டே இருக்­கின்­றன?” என்று புரி­யா­மல் தடு­மா­றி­ய ஷாஷ­னா­வுக்கு ‘டிஸ்­லெக்­சியா’ எனும் கற்­றல் குறைபாடு இருப்­பது அவ­ரது ஒன்­ப­தா­வது வய­தில்­தான் கண்­ட­றி­யப்­பட்­டது.

அதற்கு பிறகு வந்த சவால்­கள் நியூ டவுன் தொடக்­கப்­பள்­ளி­யில் பயி­லும் ஷாஷ­னா­வின் கல்­விப் பய­ணத்தை கடி­ன­மான ஒன்­றா­கி­யது. தன்­னம்­பிக்கை குறைய, தாழ்வு மனப்­பான்மை அதி­க­ரிக்க மனக்­கவலை­களும் பதற்­றங்­களும் கூடின.

“இத­னா­லேயே ஷாஷ­னா­வுக்கு அதி­கம் நண்­பர்­கள் இல்லை. அவளுக்கு குறை­பாடு இருப்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை. அவள் மெது­வா­கப் படிப்­ப­வள் என்றே நினைத்­தேன். தெரிந்த பிறகு சிறப்பு உத­வி­களை நாட வச­தி­யும் இல்லை. அவளாகவே முயற்சி எடுத்துப் படிக்கிறாள். நிறைய நூல்கள் வாசிப்பாள், பேப்பர் வாசிப்பாள்,” என்­றார் பாது­கா­வல் துறை­யில் பணி­பு­ரி­யும் அவ­ரது தாயார்.

ஷாஷ­னா­வுக்கு உயர்­நி­லை­யில் பயி­லும் இரு அக்­கா­மா­ரும் தொடக்­க­நி­லை­யில் பயி­லும் இரு தங்­கை­களும் உள்­ள­னர்.

வாக்­கி­யத்தை எழுத்­துக்­கூட்டி படிக்­கவே மிக­வும் சிர­மப்­படும் ஷாஷ­னா­வுக்கு ஆங்­கி­லம், தமிழ் மொழி­க­ளைப் படிப்­பது பெரும் சவா­லாக இருந்­தது. அவ­ரது தமிழ் ஆசி­ரி­யர் திரு பூபதி தியாக ராஜன் ஷாஷ­னா­வின் குறை­பாட்­டைப் பற்­றி­யும் அவ­ளது மற்ற பிரச்­சினை­களை பற்­றி­யும் நன்கு அறிந்­த­வர். ஷாஷ­னா­வுக்கு ஏற்ற வகை­யில் கற்­றல் முறையை மாற்றி அவரை ஊக்­கு­வித்து வந்­தார்.

“ஷாஷனா சிறந்த மாணவி. அவ­ரின் உற்­சா­கத்­தை­யும் ஆர்­வத்­தை­யும் பார்த்து அவ­ருக்கு இன்­னும் சிறந்த முறை­யில் கற்­பிக்­க­வேண்­டும் என்ற ஊக்­கம் எனக்கு பிறந்­தது. ஷாஷனா கேட்­டல் கருத்­த­றி­தல், வாய்­மொழி நட­வ­டிக்­கை­களில் தீவி­ர­மாக பங்­கேற்­பார்.

“கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக எழுத்­துக்­களைக் கண்­ட­றி­வ­தி­லும், வாசிப்பு திறனை மேம்­ப­டுத்­து­வ­தி­லும் தொடர்ந்து பயிற்­சி­கள் மேற்­கொண்­டார். தொடக்­க­நிலை இறு­தி­யாண்டுத் தேர்­வில் அவர் காட்­டிய முன்­னேற்­றம், அவ­ரது கடின உழைப்­புக்­குக் கிடைத்த பலன்,” என்­றார் திரு பூபதி.

“ஆக்கபூர்வமான அணு­கு­மு­றை­கொண்ட ஷாஷனா, உதவி கேட்­கவோ, ஆசி­ரி­யர்­க­ளி­ட­மி­ருந்து தெளிவு பெறவோ தயங்­கு­வ­தில்லை. தடை­களைச் சந்­திக்­கும்­போது துவண்­டு­வி­டா­மல் தொடர்ந்து முயற்­சிக்­கும் அவ­ரது சுபா­வம் என்னை எப்­போ­தும் நெகிழ வைக்­கும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘டிஸ்­லெக்­சியா’ குறை­பாட்­டு­டன் ஷாஷ­னா­வுக்கு சிறு வய­தி­லேயே வாழ்க்­கை­யி­லும் பல­விதங்களிலும் பல்­வேறு துய­ரங்­கள்.

அவ­ர் உடல் ரீதி­யா­க­வும் பல துன்­பங்­களை எதிர்­கொண்­டுள்­ளார். இதனால் ஷாஷனா எளி­தில் சோர்­வ­டைந்து விடு­வார். துய­ரங்­க­ளைக் கடந்து செல்­வ­தற்கு இலக்­கு­களே உத­வு­கின்­றன.

பிஎஸ்­எல்இ தேர்­வில் தேர்ச்சி பெறு­வது அவ­ரின் முதல் இலக்கு. வழக்­க­நிலை தொழில்­நுட்­பப் பிரி­வுக்­குத் தகு­தி­பெற்­றுள்ள அவர், தீவி­ர­மா­கப் படித்து, வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்­விக்­குத் தகுதி பெறுவதை அடுத்த இலக்­கா­கக் கொண்­டுள்­ளார். விலங்கு மருத்­து­வ­ரா­கப் பட்­டம் பெற வேண்­டும் என்­பது விலங்­கு­கள் மீது மிகுந்த அன்­பு­கொண்­டி­ருக்­கும் ஷாஷ­னா­வின் வாழ்க்கை இலட்­சி­யம்.

டிஸ்லெக்சியா

‘டிஸ்லெக்சியா’ என்பது கற்றல் திறன், மொழித் திறன் ஆகியவற்றில் ஏற்படும் ஒரு கற்றல் குறைபாடு. ‘டிஸ்லெக்ஸியா’ பிரச்சினையுள்ள பிள்ளைகளுக்கு வாசித்தல், எழுதுதல், எழுத்துக்கூட்டுதல், பேசுதல், கணிதம் ஆகியவற்றில் சிரமங்கள் இருக்கும். இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். சில பிள்ளைகளுக்கு வாசித்தலிலும் எழுதுவதிலும் பிரச்சினைகள் இருக்கலாம், சிலரால் புதிய சொற்களை, அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம். குறிப்பாக, மொழியைக் கற்றுக் கொண்டு பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய இந்தச் சிரமங்க ளால் பெரும்பாலான பிள்ளைகளின் கல்வி பாதிப்படையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!