குழந்தைப் பராமரிப்பில் சிறந்தோங்கும் ஜசிந்தா முன்னாளில் தாதி... இப்போது...

தொழில்­நுட்ப கல்­விக் கழ­கத்­தில் (கிழக்குக் கல்­லூரி) தாதி­மைத் துறை­யில் சான்­றி­தழ் பெற்­று­விட்டு சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் ஈராண்­டு­க­ளாக அறுவை சிகிச்சைப் பிரி­வில் தாதி­யாகப் பணி­யாற்­றி­ய­வர் குமாரி ஜெ.ஜசிந்தா, 27.

சிறு வய­தி­லி­ருந்தே பிள்­ளை­களு­டன் இணைந்து செயல்­ப­டு­வது என்­றால் ஜசிந்­தா­வுக்கு அள­வில்லா ஆனந்­தம்.

மருத்­துவ சிகிச்­சைக்­காக வரும் பிள்­ளை­க­ளு­டன் இவர் அன்­பு­டன் உரையாடி அவர்­களை மகிழ்­விக்க முற்­ப­டு­வார். ஆனால் அவர்­களை நோயா­ளி­க­ளாகப் பார்ப்­பது இவ­ரது மன­திற்கு ஏற்­றுக்­கொள்­ளும் வித­மாக இல்லை.

மகிழ்ச்­சி­யான சூழ­லில் அவர்­களு­டன் இணைந்து செயல்­பட வேண்­டும் என்ற எண்­ணம், ஜசிந்­தாவை ஏறக்­கு­றைய ஆறு ஆண்டு­களுக்கு முன்­னர் வேலை மாற்­றம் செய்­யத் தூண்­டி­யது.

வேலை தேடும் இணை­யத் தளத்­தில் பாலர் பள்ளி துணை ஆசி­ரி­ய­ருக்­கான வேலைக்கு விண்­ணப்­பித்து புதிய துறை­யில் இவர் கால்­பதித்­தார்.

அங்கு மழ­லை­யர்­க­ளுக்கு வாசிக்­க­வும் எழு­த­வும் இவர் சொல்­லிக் கொடுத்­தார்.

புதிய சவாலுக்கு இணங்க, இரண்டு வய­திற்­கும் கீழ் உடைய குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிக்­கும் Tots and Teddies எனும் குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் இவர் வேலைக்­குச் சேர்ந்­தார்.

குழந்­தை­க­ளைப் பராம­ரிப்­ப­தற்­கான சான்­றி­த­ழுக்­குப் பயின்று, அவர்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் ஆசி­ரி­ய­ராக கடந்த மூன்று ஆண்­டு­களாக இவ­ரது பய­ணம் நீடிக்­கிறது.

குறு­கிய காலத்­தி­லேயே தனித்­துவ வேலை­யிடப் பண்­பு­கள் இவ­ரி­டம் வெளிப்­பட்­டன. உதா­ர­ணத்­திற்கு, குழந்­தை­க­ளு­டன் அணுக்­க­மாகச் செயல்­ப­டு­வ­து இவ­ருக்கு இயல்­பான ஒன்­றாக அமைந்­தது.

குழந்­தை­க­ளி­டம் என்ன செய்ய வேண்­டும் என்­பதை மட்­டும் சொல்­லா­மல் ஒரு வி‌‌ஷ­யத்­தைச் செய்­வ­தால் அதன் பின்­வி­ளை­வு­கள் எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கும் என்­ப­தைப் பக்­கு­வ­மாக எடுத்­துச் சொல்­வார் ஜசிந்தா.

பெற்­றோ­ரி­டம் குழந்­தை­க­ளின் மேம்­பாடு, தேவை குறித்து அவ்வப்­போது பகிர்ந்­து­கொள்­ளும் ஜசிந்­தா­வுக்கு, இவ்­வாண்­டின் நம்­பிக்­கை­ய­ளிக்­கும் ஆரம்­ப­கால பாலர் கல்வி ஆசி­ரி­யர் விருது வழங்­கப்­பட்­டது.

ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ மேம்­பாட்டு வாரி­யம் 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து வழங்­கும் இந்த வரு­டாந்­திர விரு­து­களில் இவ்­வாண்டு மொத்­தம் 25 சிறந்த ஆரம்­ப­கால கல்வி ஆசி­ரி­யர்­களும் பள்­ளி­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

“குழந்­தை­கள் எனது பரா­ம­ரிப்­பில் வளர்ந்து முதல் வார்த்­தை­கள் சொல்­லும்­போது அல்­லது சுய­மாக உணவு உண்­ணும்­போது, பணியை நன்கு ஆற்­றி­யுள்­ளோம் என்ற திருப்தி கிடைக்­கிறது.

“கொடுக்­கப்­பட்ட பணி­யைச் சரி­யாக செய்­கி­றேன் என்­ப­தற்கு இவ்­வி­ருது ஓர் அங்­கீ­கா­ரம். ஆரம்­ப­கால கல்­வித் துறை­யில் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொண்டு குழந்­தை­க­ளைப் பற்றி இன்­னும் ஆழ­மாக புரிந்­து­கொள்ள முனை­வது எனது இலக்கு,” என்று ஜசிந்தா சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!