முரசொலி: மரணத்திலும் தனிமை: பக்கத்து வீட்டுக்காரரின் காவலரா, நான்?

ஏம்பர் ரோட்டில் இருக்கும் கூட்டுரிமை அடுக்கு மாடி வீடு ஒன்றில் திருவாட்டி லில்லி லோ என்ற 80 வயதைக் கடந்த ஒரு முதிய மாதின் உடல் நவம்பர் 23ஆம் தேதி காணப்பட்­டது. அந்த மாது ஏறக்­கு­றைய இரண்­டாண்டு கால­மாக யார் கண்­ணி­லும் பட­வில்லை. தன்­னந்­த­னி­யாக வசித்து தன்­னத்­த­னி­யாகவே மாண்­டு­விட்­டார். அவ­ரின் வளர்ப்பு நாய்க்­கும் அவரோடு அதே வீட்டில் அவரை போன்ற அதே கதி ஏற்­பட்­டு­விட்­டது.

எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் இல்லை. அந்த மாது தனக்குத் தானே வாழ்ந்து வந்தார்; பல மாதங்களாக அக்கம்பக்கத்தினர் யாருமே அவரைப் பார்க்கவில்லை.

அவருடைய வீட்டுக்கு வெளியே அஞ்சல் பெட்டியில் ஏராளமான கடிதங்கள் குவிந்து கிடந்தது கண்கூடு. என்றாலும் இவற்றை எல்லாம் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதை விவரித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

பக்­கத்து வீட்­டுக்­கா­ரர் ஒரு­வர், தன் வீட்டு வாசலில் ஏதோ ஒரு வகை துர்­நாற்­றம் வந்­த­தா­க­வும் சில வாரங்­களில் அது­வும் மறைந்­து­விட்­ட­தா­க­வும்கூட கூறி இருந்­தார்.

திரு­வாட்டி லோ வசித்து வந்த வீட்­டின் கத­வைத் தட்டி என்ன, ஏது என்று விசா­ரிப்­போம் என்ற மன­நிலை யாருக்­குமே வர­வில்லை. இச்சம்பவம் சங்­க­ட­மான பல கேள்­வி­களை எழுப்­பு­கிறது.

திரு­வாட்டி லோ மன­நி­லை­யும் உடல்­நி­லை­யும் சரி­யில்லை என்று 2018 ஆகஸ்ட்­டில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் சிலர் கூறி­யதை அடுத்து அந்த அடுக்­கு­மாடி வீட்­டுத்தொகு­தி­யின் நிர்­வா­கம், சமூ­க சேவை­ அமைப்புகளை அந்த மாதுக்கு உத­வி­யாக ஈடு­படுத்­தி­யது. அவருக்கு உதவி தேவையா என்­பதை மதிப்­பிட போலி­சா­ரும் அழைக்­கப்­பட்­ட­னர்.

ஆனால் அந்த மாது போலி­சார் வரு­கையை விரும்­ப­வில்லை என்று தி நியூ பேப்­பர் செய்­தித்­தா­ளில் வெளி­யான ஒரு தக­வல் தெரி­வித்­தது. அந்­தக் கூட்­டு­ரிமை வீட்டு நிர்­வா­கம், இந்த விவ­கா­ரத்­தில் கண்­டும் காணாத ஓர் அணு­கு­மு­றை­யைக் கைக்­கொண்­டது ஏன் என்­ப­து­தான் குழப்­பாக இருக்­கிறது.

அந்த நிர்­வா­கம், திரு­வாட்டி லோவின் வீட்­டுக்கு அரு­கில் நீதி­மன்ற அறி­விப்பு ஒன்­றை­யும் ஒட்­டி­விட்­டுச் சென்­ற­தாக ‘மதர்­ஷிப்’ என்ற இணையச் செய்­தித்­த­ளத்­தி­டம் வாச­கர் ஒரு­வர் கூறி­னார்.

இப்­ப­டிப்­பட்ட ஒரு நிர்­வா­கத்­தின் கண்­களில் இருந்து அந்த மாதின் அஞ்­சல் பெட்­டி­யும் அதில் குவிந்து கிடந்த கடி­தங்­களும் எப்­படி தப்­பின என்­ப­து­ம் கேள்­விக்­குறி. இது ஒரு­பு­றம் என்­றால், துர்­நாற்­றம் வீசி­ய­தைத் தெரிந்­து­கொண்ட அக்­கம்­பக்­க­வாசி, திரு­வாட்டி லோவு­டன் தொடர்­பு­கொள்ள முய­ல­வில்லை. அந்த மாது­டன் வசித்து வந்த வளர்ப்பு நாய் நிச்­ச­யம் குரைத்து இருக்­கும். அது கூட யார் காதி­லும் விழா­மலா போய்­விட்­டது?

அந்த வீட்­டுத்தொகு­தி­யில் வசிக்­கும் ஒரு­வ­ரு­டன் கூட திரு­வாட்டி லோவுக்கு தொடர்­பில்­லா­மலா இருக்கும்; ஒரு­வ­ருக்­குக்கூட அவ­ரின் தொலை­பேசி எண் தெரி­யா­மலா இருக்­கும்;

எல்­லா­வற்­றை­யும் வைத்து பார்க்­கை­யில் அந்த மாதுக்குத் தெரிந்­த­வரோ, குடும்­பத்­தி­னரோ யாரும் இல்லை என்றே தெரி­கிறது. கடை­சி­யாக மவுண்ட்­பேட்­டன் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லிம் பியோவ் சுவானை குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் அணுகி உதவி நாடி­னார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் போலி­சுக்கு தக­வல் தெரி­வித்­தார். அத­னை­ய­டுத்து திரு­வாட்டி லோவின் உடல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

முதி­யோ­ருக்கு இப்­படி ஓர் அவ­லம் ஏற்­பட்­டது இது­தான் முதல் தடவை என்று அல்ல. சிங்­கப்­பூ­ரில் 2016ல் குறைந்­த­பட்­சம் 100 உடல்­களை யாருமே கோரி பெற­வில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் 2017ல் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை மூப்­ப­டை­கிறது. 2035ல் 65 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 32 விழுக்­கா­டாக உய­ரும் என்று கணிக்­கப்­பட்டு இருக்­கிறது.

2030ல் 83,000 முதி­ய­வர்­கள் தனி­மை­யில் வாழ்­வார்­கள் என்று புள்­ளி­வி­வ­ரத் துறை மதிப்­பி­டு­கிறது. 2016ல் தனித்து வாழ்ந்த 65 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 47,000 ஆக இருந்தது.

தனித்து வாழ்­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கிறது என்­ப­தால் தனி­மை­யில் மர­ணம் அடை­யும் மக்­க­ளின் எண்­ணிக்கை­யும் அதி­க­ரிக்­க வாய்ப்பு உள்ளது என்று டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் வயது மூப்பு ஆய்­வுக் கல்வி நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான இணைப் பேரா­சி­ரி­யர் ஏஞ்சலிக் சான் இந்த ஆண்டு தொடக்­கத்­தில் தெரி­வித்து இருந்­தார்.

சிங்­கப்­பூ­ரில் வாழ்க்­கைச் சூழல், நகர வடி­வ­மைப்பு கார­ண­மாக சமூக உணர்வு குறைந்­து­விட்­டது என்­பதை அவர் சுட்­டி­னார். “பெரும்­பா­லான நேரத்­தில் மூடிய வீட்­டுக்­குள்­ளேயே நாம் வசிக்­கி­றோம். ஆகை­யால் பக்­கத்து வீட்­டுக்­கா­ர­ரைத் தெரிந்து­கொள்­ளக்­கூட சிர­ம­மாக இருக்­கிறது. யாரை­யும் நாம் தெரிந்­து­கொள்­வ­தும் இல்லை; யாரு­ட­னும் நாம் பேசு­வ­து­மில்லை,” என்­றார் அவர்.

அக்­கம்­பக்கத்தில் அக்­கறை இல்லாத உணர்வு மாற­வில்லை என்­றால் முதி­ய­வர்­கள் தனி­மை­யில் மர­ண­ம­டை­யும் அதிக சம்­ப­வங்­களை நாம் சந்­திக்­கத்­தான் வேண்டி இருக்­கும். அக்­கம்­பக்­கத்­தி­னர்­தான் இயற்­கை­யி­லேயே அமை­யக்­கூ­டிய ஆத­ரவாளர்கள் என்­பதே உண்மை நில­வ­ரம். சிங்­கப்­பூர் கருணை இயக்­கம் இதைத்­தான் எப்­போ­துமே மேம்­படுத்தி வந்­துள்­ளது.

மக்­கள் நெருக்­க­மாக வாழும் சிங்­கப்­பூ­ரில் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் அந்­த­ரங்­கத்தை மதிக்க வேண்­டும் என்­பது புரிந்து­கொள்­ளக் கூடி­யதே. இருந்­தா­லும் நம்­முடைய பர­ப­ரப்­பான வாழ்­வில் கரு­ணைக்­கும் இட­மி­ருக்க வேண்­டும்.

அது என் வேலை அல்ல. மற்­ற­வர்­களின் அந்­த­ரங்­கத்­தில் தலை­யி­டக்­கூ­டாது போன்ற சாக்குப்போக்கு களைச் சொல்லி நம்­மு­டைய சக மக்­க­ளி­டம் அக்­கறை கொள்­ளா­மல் இருப்­பது மரி­யா­தைக்­கு­ரிய ஒரு செயல் அல்ல. அக்­கறை இல்­லாத ஒரு செய­லா­கவே அது பார்க்­கப்­படும்.

அக்­கம்­பக்­கத்­தி­னர் தனி­மை­யில் மர­ணம் அடை­வ­தைத் தவிர்க்க எளி­மை­யான மூன்று வழி­கள் இருக்­கின்­றன. அக்­கம்­பக்க முதி­ய­வர்­களை வேண்­டு­மென்றே எட்­டுங்­கள்; காலக்­கி­ரம அடிப்­படை­யில் அவர்­க­ளைச் சென்று பார்த்து உதவி, உற­வாடி வாருங்­கள்; கவனித்­துக்­கொள்ள நீங்­கள் இருக்­கி­றீர்­கள் என்­ப­தைப் புலப்­ப­டுத்­துங்­கள்.

தனி­யாக வாழ்­வ­தைத் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்­ளும் முதி­ய­வர்­கள் தனி­யா­கத்­தான் மர­ணம் அடை­ய­வேண்­டும் என்­ற அவ­சி­ய­மில்லை.

ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரைக் கவ­னித்­துக்­கொண்­டால், தோழ­மைக் கரம் நீட்­டி­னால் குறிப்­பாக அக்­கம்­பக்­கத்­தில் வாழும் முதி­ய­வர்­க­ளி­டம் நாம் இதைச் செய்­தால் யாருமே கடைசி காலத்­தில் தனி­மை­யில் இல்லை. யாரும் மறக்­கப்­ப­ட­வில்லை என்­பதை உறு­திப்­படுத்த நாம் உத­வ­மு­டி­யும்.

யதார்த்தமாக நமக்கு வாய்த்த அக்கம்பக்கத்தினரே எப்போதும் நமக்கு நெருக்கமான நண்பர்கள் என்பதை உறுதிப்படுத்துவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!