அகம் மேடைநாடக அமைப்பின் தயாரிப்பில் இளையர்களின் படைப்பு

ஐந்து இளையர்களை முதல் முறையாக நாடகத்துறையில் ஈடுபடுத்தி, அவர்களின் படைப்புகளை மேடையேற்றும் வாய்ப்பை வழங்குகிறது ‘இஸம்ஸ்’ என்ற புத்தாக்கமிக்க மேடைநாடகப் படைப்பு.

சுய நியதி, தோல் நிறத்தால் பாகுபாடு, சமூகப் பிரிவினையால் விளையும் பிரச்சினைகள் போன்ற தலைப்புகளில் ஒவ்வொரு கலைஞரும் தனிப்பட்ட முறையில் 10 நிமிடப் படைப்பைத் தயாரித்துள்ளனர். படைப்புகளை இளையர்களே சுயமாக எழுதி, இயக்கி, நடிக்கின்றனர். செப்டம்பர் மாதம் முதல் நாடகத்துறையின் பல பிரிவுகளைக் கற்று, அறிந்து தாமே உருவாக்கிய படைப்புகளை இந்த இளையர்கள் மேடையேற்றுவார்கள்.

‘அகம் மேடைநாடக அமைப்பு’ தயாரிப்பில் நடைபெறும் இந்த படைப்பு ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் அரங்கேற்றப்படும்.

இம்மாதம் 18, 19, 20ஆம் தேதிகளில் நான்கு நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடிக்கும். ஒவ்வொரு நுழைவுச்சீட்டுக்கும் $15 கட்டணம்.

மேல் விவரம்: bit.ly/ismsticket

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!