சிங்கப்பூர் குடும்பங்களுக்கு புதிய $4 மி. நிவாரண நிதி

பாதிக்கப்பட்டோருக்கு சமூக மேம்பாட்டு மன்றங்களும் புத்த மடாலயமும் உதவிக்கரம்

கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்ள சிங்­கப்­பூர் குடும்­பங்­களுக்கு உத­வு­வ­தற்­காக புதிய $4 மில்­லி­யன் நிவா­ரண நிதி தொடங்­கப்­பட்டு இருக்­கிறது.

ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் $500 ஒரு நேர உத­வி­யாக மொத்தம் 8,000 குடும்­பங்­க­ளுக்கு உதவு­வது இந்த நிதி­யின் நோக்­கம். ஐந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­களும் கோங் மெங் சான் போர் கார்க் ஸீ மடா­ல­ய­மும் கூட்­டாக இந்த நிதியை தொடங்கியுள்ளன.

இந்த பௌத்த மடா­ல­யம் $2 மில்­லி­யன் நன்­கொடை வழங்கி உள்ளது. மற்ற தொகையை மேம்­பாட்டு மன்­றங்­கள் கொடுக்­கின்­றன. இந்த ஆலயமும் அடித்­தள அமைப்­பு­கள் போன்ற சமூக அமைப்பு­களும் சேர்ந்து உதவி தேவைப்­படும் குடும்­பங்­களை அடை­யா­ளம் காணும்.

21 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள, குறைந்­த­பட்­சம் மூன்று மாத காலம் வேலை­யில்­லா­மல், ஊதி­யம் இல்­லா­மல், ஆட்­கு­றைப்­புக்கு அல்­லது வேலை நீக்­கத்­திற்கு ஆளாகி இருக்­கின்ற, வரு­மான இழப்பு உள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மட்­டும் இந்த நிதி உத­வும்.

சமூக மேம்­பாட்டு மன்­றம் தொடர்­பு­டைய இதர கொவிட்-19 நிவா­ரண தொகையை ஏற்­கெ­னவே பெறு­கின்ற குடும்­பங்­கள் இந்த நிதிக்கு மனுச் செய்ய முடி­யாது என்று இந்த மன்­றங்­கள் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தன.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று புதிய நிதி தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு இருக்­கும் குடும்­பங்­களுக்குப் பல உத­வி­களும் ஆதரவு­களும் கிடைக்­கின்­றன. அவற்­றுக்கு உறு­து­ணை­யாக இந்­தப் புதிய நிதி தொடங்­கப்­பட்டு இருக்­கிறது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் கடந்த ஒன்­பது மாத கால­மாக கொவிட்-19 தொடர்­பி­லான நூற்­றுக்­கும் அதிக செயல்­திட்­டங்­கள் மூலம் 670,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு உதவி இருக்­கிறது என்­றும் திரு மச­கோஸ் குறிப்­பிட்­டார்.

"நாம் செய்­யும் ஒவ்­வொன்­றி­லும் சிங்­கப்­பூ­ரர்­களை மிக முக்­கி­ய­மாகக் கருதி தொடர்ந்து செயல்­ப­டு­வோம். தலை­வர்­கள், குடி­மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­பட்­ட­தன் கார­ண­மாக மூன்­றாம் கட்ட தளர்வு சாத்­தி­ய­மாகி இருக்­கிறது," என்றார் அமைச்­சர்.

கொவிட்-19 கார­ண­மாக மற்­ற­வர்­க­ளுக்கு உதவ வேண்­டிய தேவை இப்போது அதி­க­மாகி இருக்­கிறது என்று இந்த பௌத்த மடா­ல­யத்­தின் தலைமைத் துறவி குவாங் ஷெங் குறிப்­பிட்­டார்.

மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் மக்­க­ளுக்கு இந்­தப் புதிய நிதி மூலம் மன­திற்­கும் இத­யத்­திற்­கும் கொஞ்­சம் தெம்பு கிடைக்­கும் என்று தாங்­கள் நம்­பு­வ­தா­க­வும் அந்­தத் துறவி தெரி­வித்­தார்.

தென்­மேற்கு மாவட்ட மேய­ரும் மேயர்­கள் குழு­வின் தலை­வ­ரு­மான திரு­வாட்டி லோ யென் லிங், இந்­த மடா­ல­யம் போன்ற அமைப்பு­கள் நம்­ சமூ­கத்­தின் மீள்­திறனைப் பலப்­படுத்­து­வதில் முக்­கிய பணி­யாற்­று­வ­தா­கக் கூறி­னார்.

உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு அவ­சி­ய­மான ஆத­ர­வும் கவ­னிப்­பும் இருக்­கிறது என்­ப­தை­ ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­ப­டு­வதன் மூலம் நாம் உறு­திப்­ப­டுத்­த­லாம் என்­றும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!