‘சமய நல்லிணக்கத்தின் பலமாக பன்முகத்தன்மையை மாற்றவும்’

சிங்­கப்­பூ­ரின் சமய நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்த வேண்­டு­மா­னால், பன்­மு­கத்­தன்­மையை அதன் பல­மா­க­வும் விரி­வாக்­க­மா­க­வும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­லின் டோங் தெரி­வித்­துள்­ளார்.

இன உற­வு­கள் தொடர்­பாக நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பேசிய அமைச்­சர், ஆக்­க­பூர்­வ­மான கருத்­து­களை வெளிப்­ப­டுத்த மக்­க­ளுக்கு போதிய வாய்ப்பு கொடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் இனப் பாகு­பாடு இல்­லா­மல் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்­றும் திரு டோங் யோசனை கூறி­னார்.

காணொளி கருத்­த­ரங்­காக நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சி­யில் சுமார் 100 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

இதற்கு 'ஒன்­பீப்­பள் எஸ்ஜி' அமைப்பு, யூரே­ஷி­யர் சங்­கம் ஆகி­யவை 'மதர்­ஷிப்.எஸ்ஜி' இணை­யத் தளத்­தின் ஆத­ர­வு­டன் ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

"பல்லினத்தை எவ்வாறு பல­மாக மாற்­று­வது," என்று தமது உரை­யில் சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான திரு டோங் கேள்வி எழுப்­பி­னார்.

"பன்­மு­கத்­தன்­மையை சிங்­கப்­பூர் சமய நல்­லி­ணக்­கத்­தின் ஒவ்­வொரு இழை­யி­லும் எவ்­வாறு பிர­தி­ப­லிக்க வைப்­பது? அதன் ஒவ்­வொரு நூலி­லும் இனம், சம­யம், கலா­சா­ரம் என்ற அம்­சத்­தைப் பல­மா­கப் பிணைக்க வேண்­டும். அப்­போ­து­தான் அதன் ஒவ்­வோர் அம்­சத்­து­டன் ஒட்­டு­மொத்த சமய நல்­லி­ணக்­க­மும் வலு­வாக இருக்­கும்," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

அதற்கு உதா­ர­ண­மாக அண்­மை­யில் யுனெஸ்­கோ­வின் அங்­கீ­கா­ரத்­தைப் பெற்ற சிங்­கப்­பூ­ரின் உண­வங்­காடி கலா­சா­ரத்­தைச் சுட்­டி­னார்.

"வெவ்­வேறு வகை­யான உணவு களை விற்­கும் கடை­கள், வாழ்க்­கை­யின் எல்லா பிரி­வு­க­ளைச் சேர்ந்த மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­கின்றன. அந்த உண­வு­களை மக்­கள் ஒரே மேசை­யில் அல்­லது அரு­க­ருகே அமர்ந்து ஒற்­று­மை­யு­டன் உண்­கி­றார்­கள். அது நாள்­தோ­றும் நாட்­டின் இன, மொழி, சம­ய ஒற்­று­மை­யைப் பிர­தி­பலிக் கிறது," என்­றார் திரு டோங்.

"இனங்­க­ளுக்­கி­டையே அவ்­வப்­போது கிளம்­பும் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­க­ளுக்கு நாம் எப்­படி முதிர்ச்­சி­யு­ட­னும் மீள்­தி­ற­னு­ட­னும் பதி­லடி கொடுக்­கி­றோம் என்­பது நமக்கு சோத­னை­யாக அமைந்து விடு­கிறது.

"இனம் சார்ந்த விவ­கா­ரங்­களை நாம் அதில் ஆக்­க­பூர்­வ­மான கருத்து­க­ளு­டன் எதிர்­கொள்ளும் போது நமது ஒற்­றுமை வெளிப்­ப­டு ­கிறது. அப்­படி வெளிப்­ப­டை­யான கருத்­து­களை முன்­வைக்­கும்­போது சில சம­யங்­களில் மூத்த தலை­முறை­யி­ன­ருக்கு சில சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்தி விடு­கிறது.

"முத­லில், சமய ஒற்­று­மைக்கு எதி­ரான விவ­கா­ரங்­களில் நாம் தைரி­ய­மாக நமது கருத்­து­களை வெளிப்­ப­டுத்த வேண்­டும். அதில் எது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யது எது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது என்­ப­தில் பொது­வான புரிந்­து­ணர்வு இருக்க வேண்­டும்," என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார்.

இந்­தக் கருத்­த­ரங்­கில் யூரே­ஷி­யர் சங்­கத்­தின் துணைத் தலை­வர் திரு வின்­சென்ட் ஷூன், இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் பொது மேலா­ளர் திரு­மதி பவானி தாஸ், கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் முன்­னாள் ஆய்­வா­ளர் திரு­வாட்டி ஸாங் ஜியாயி, அடித்­த­ளத் தலை­வ­ரும் 'ஒன்­பீப்­பள் எஸ்ஜி' அமைப்­பின் இளை­யர் தலை­வ­ரு­மான திரு ஹஃபீஸ் சொரோரி ஸன்­ஜானி ஆகி­யோ­ரும் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

இனம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லுக்கு எதி­ரான வெவ்­வேறு தலை­மு­றை­யி­னர் கொண்­டுள்ள மாறு­பட்ட கண்­ணோட்­டம், இன­வா­தம் பற்­றிய புரிந்­து­ணர்வு ஆகி­யவை தொடர்­பில் நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­றோர் தங்கள் கருத்துகளை முன்­வைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!