லி‌‌‌ஷா தலைமைத்துவத்தில் மாற்றம்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

லி‌‌‌ஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் தலை­வ­ரா­க கடந்த 15 ஆண்டு ­க­ளா­க சேவை­யாற்­றி­வந்த திரு ராஜ­கு­மார் சந்­திரா, 62, இன்­று­டன் அப்­ப­த­வி­யி­லி­ருந்து விடைபெ­று­கி­றார். தொடர்ந்து செய­ல­வை­யில் இடம்­பெ­ற­வி­ருக்­கும் அவர், காலத்­தின் மாற்­றங்­க­ளால் இளை­யர்­களின் உத்­வே­கத்­தில் லி‌‌‌ஷா­வின் அடுத்­த கட்ட பணி­கள் சிறப்­பாக நடை­பெ­றும் என்று நம்­பிக்­கை­ய­ளித்­தார்.

அவர் வகித்த தலை­வர் பத­வியை திரு சி. சங்­க­ர­நா­தன் ஏற்க இருக்­கி­றார். இன்று காலை நடை­பெ­றும் லி‌‌‌ஷா­வின் ஆண்­டுப் பொதுக் கூட்­டத்­தில் அவரை உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்க உள்­ள­னர்.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக லி‌‌‌ஷா­வின் துணைத் தலை­வ­ரா­கச் சேவை­யாற்­றி­வ­ரும் 48 வயது திரு சங்­க­ர­நா­தன், லிட்­டில் இந்­தி­யா­வில் புது­மு­கம் அல்ல. சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்­கள் சங்­கத்­தின் தலை­வ­ராக 2011ஆம் ஆண்­டு­மு­தல் ஐந்­தாண்­டு­கள் பத­வி­வ­கித்த அவர் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழில் சபை­யின் இயக்­கு­நர் சபை­யில் நான்­காண்­டு­கள் சேவை ஆற்­றி­னார். பனானா லீஃப் அப்போலோ, அப்­போலோ செல்­லப்­பாஸ் நிறு­வ­னங்­க­ளின் உரி­மை­யா­ள­ரான அவர், லிட்­டில் இந்­தி­யா­வில் வசிப்­ப­வ­ரும்­கூட.

தாம் ஏற்­க­வி­ருக்­கும் புதிய பொறுப்­புப் பற்றி கூறு­கை­யில், "இந்த நோய்ப் பர­வல் சூழ­லி­லி­ருந்து கடைக்­கா­ரர்­கள் மீண்­டு­வர எல்லா உத­வி­க­ளை­யும் முயற்­சி­களை­யும் எடுப்­பதே புதிய செயற்­கு­ழு­வின் தலை­யாய பணி," என்­றார் திரு சங்கர்.

"லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் எதிர்­நோக்­கும் மற்­றொரு சவால் மனி­த­வள தேவை­கள். வரும் ஜன­வரி மாதம் முதல் 'எஸ்­-பாஸ்' ஒதுக்­கீடு மேலும் கடு­மை­யாக்­கப்படு­கிறது. ஒன்­பது சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஒரு 'எஸ்­-பாஸ்' என்ற நடை­முறை உரு­வாக இருக்­கிறது. இது தற்­போ­தைய வர்த்­த­கச் சூழ­லில் மேலும் சவாலை ஏற்­ப­டுத்­தும். அதற்­காக, அர­சாங்க அமைப்­பு­கள், அமைச்­சு­க­ளி­டம் பேசி தீர்­வு­கள் காண­வும் செயற்­குழு முனை­யும்," என்று கூறி­னார் அவர்.

கடந்த 2000ஆம் ஆண்டு உத­ய­மா­னது லி‌‌‌ஷா அமைப்பு.

"சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்தை மறு­சீ­ர­மைக்­கும் முயற்­சி­யில் ஈடு­படத் தொடங்­கி­ய­போது இந்­தப் பகு­தி­யில் உள்­ள­வர்­களை உள்­ள­டக்­கிய அமைப்­பு­டன் கலந்­தா­லோ­சித்து திட்­டங்­கள் வகுக்க முனைந்­தது," என்று லி‌‌‌ஷா­வின் தோற்­றத்­திற்­கான கார­ணத்­தைப் பகிர்ந்­தார் திரு ராஜ­கு­மார்.

1982ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட சிராங்­கூன் வர்த்­த­கர்­கள் சங்­கத்­தின் தலை­வ­ராக அப்­போது பத­வி­வ­கித்த திரு ராஜ­கு­மார், அர­சாங்­கத்­து­டன் இணைந்து திட்­டங்­கள் வகுத்து செய­லாற்ற வணி­கர்­கள் மட்­டு­மல்­லாது சமய தலங்­கள், மர­பு­டைமை சார்ந்­த­வர்­கள், சமூ­கத் தலை­வர்­கள், குடி­யி­ருப்­பா­ளர்­கள் முத­லி­யோரை உள்­ள­டக்­கிய அமைப்பு தேவை என்­ப­தால் முந்­தைய சங்­கத்தை விட்­டு­விட்டு பரந்த பல­னுக்­காக லி‌‌‌ஷா­வின் தோற்­றத்தை ஆத­ரித்­த­தா­கத் தெரி­வித்­தார்.

முதல் தலை­வ­ரா­கத் திரு பரம் திறம்­ப­டச் சேவை­யாற்­றி­ய­தைக் குறிப்­பிட்ட திரு ராஜ­கு­மார், 2005ஆம் ஆண்டு தாம் அந்­தப் பத­வியை ஏற்­ற­தா­கத் தெரி­வித்­தார்.

லி‌‌‌ஷா­வின் தொடக்­க காலத்­தில் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் செய­லவை உதவி உட்­பட பெரும் ஆத­ரவு நல்­கி­ய­தா­க­வும் திரு வி.ஆர். நாதன், திரு பரம் போன்­ற­வர்­கள் பெரும் பங்­காற்­றி­ய­தை­யும் அவர் நினை­வு­கூர்ந்­தார்.

கலா­சா­ரம், பண்­பாடு தொடர்­பான பல நட­வ­டிக்­கை­கள், நிகழ்ச்சி­கள், முயற்­சி­கள் தொடர்ந்து எடுக்­கப்­பட்டு வந்­தன என்­றும் அவை நிலை­யாக உயி­ரோட்­டத்­து­டன் இருந்­தால்­தான் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரம் உயிர்ப்­பு­டன் இருக்­கும் என்­றார்.

அடுத்­த தலை­மு­றை­யி­ன­ருக்கு நமது கலா­சா­ரக் கூறு­க­ளைக் கொண்­டு செல்­லும் அள­விற்கு லிட்­டில் இந்­தியா, பண்­பாட்­டுக் கூறு­களை மறக்­கா­ம­லும் மறைக்­கா­ம­லும் வைத்­துள்­ளது என்­றார் அவர்.

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் கட்­டு­மா­னக் குழு­வில் சேவை­யாற்­றிய அனு­ப­வத்­தைப் பகிர்ந்த அவர், லிட்­டில் இந்­தி­யா­வின் மைய­மா­கக் கரு­தப்­படும் கேம்­பல் லேனில் அந்­த கட்­ட­டம் அமைந்­தது மற்­றொரு சிறப்­பம்­சம் என்­றார்.

கடந்த 15 ஆண்­டு­களில் குடி­பெ­யர்ப்பு, புதிய தலை­முறை, புதிய வர்த்­த­கர்­கள், மாறு­பட்ட தேவை­கள் என பல மாற்­றங்­க­ளைக் கண்­கூடா­கப் பார்த்­து­ வ­ரு­வ­தா­க­வும் அதற்­கேற்ப பல புத்­தாக்க முயற்­சி­க­ளைத் தமது செயற்­கு­ழு­வி­னர் எடுத்­து­வருவதாகவும் அவர் தெரி­வித்­தார்.

"கடந்த பத்­தாண்­டு­க­ளுக்கு மேலாக இந்­தி­யா­வின் வெவ்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் சிங்கப்பூரில் குடி­பெ­யர்ந்­துள்­ள­னர். அவர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய இந்­தி­யப் புத்­தாண்­டு­கள் நிகழ்ச்­சியை 2010ஆம் ஆண்­டு­மு­தல் நடத்­தி­னோம்.

"தீபா­வளி, பொங்­கல் போன்ற விழாக்­கள் ஆண்­டுக்­காண்டு மேம்­பட்டு தற்­போது விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது," என்­றார் அவர்.

அண்­மைக் காலங்­களில் பெண் வர்த்­த­கர்­கள் அதி­கம் பரி­ண­மித்­துள்ள நிலை­யில் லி‌‌‌ஷா பெண்­கள் பிரிவு, வர்த்­த­கர்­க­ளுக்­குத் தொடர்­புத் திறனை வளர்க்க லி‌‌‌ஷா பேச்­சா­ளர் மன்­றம் போன்ற அமைப்­பு­கள் தோற்­றம் கண்­ட­தை­யும் திரு ராஜ­கு­மார் குறிப்­பிட்­டார்.

தற்­போது 480 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட லி‌‌‌ஷா அமைப்பு, வர்த்­த­கர்­க­ளின் மின்­னி­லக்­க­மா­தல் முயற்­சிக்­கு ஊக்­க­ம­ளிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளில் இறங்கி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!