வெளிநாட்டிலிருந்து வந்தோரில் 17 பேருக்குத் தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 17 கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

அவர்­கள் அனை­வ­ரும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள் என்­றும் அவர்­கள் எல்­லா­ருக்­கும் வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சமூக அள­விலோ அல்­லது வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­யிலோ எந்த கொவிட்-19 சம்­ப­வங்­களும் பதி­வா­க­வில்லை.

நேற்று பதி­வான புதிய சம்­ப­வங்­க­ளை­யும் சேர்த்து இது­வரை சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 58,403 என்று கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் பதி­வா­கிய ஒன்­பது சம்­ப­வங்­களில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும் வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­த­வர்­கள்.

அவர்­களில் இரு­வர் சிங்­கப்­பூ­ரர்­கள், ஒரு­வர் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி. அவர்­கள் இந்­தியா, ஆஸ்­தி­ரியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள் என்­றும் அவர்­க­ளி­டம் கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­குறி முத­லில் தென்­ப­ட­வில்லை என்­றும் அமைச்சு கூறி­யது.

எஞ்­சி­யுள்­ள­வர்­களில் மூவர் சிங்­கப்­பூர் வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள். ஒரு­வர் சார்ந்­தி­ருப்­போர் அட்­டை­யு­டை­ய­வர். ஒரு­வர் குறு­கிய கால வருகை அனு­மதி உடை­ய­வர், ஒரு­வர் சிறப்பு அனு­மதி வைத்­தி­ருப்­ப­வர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஒன்­பது பேருக்­கும் வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட காலத்­தில் அவர்­க­ளி­டம் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது என்­றும் அமைச்சு விவ­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!