பாவேந்தர் பாரதிதாசன் 130 - சுழலும் சொற்போர்

சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கிய களம் நடத்­திய பாவேந்­தர் பார­தி­தா­சன் 130 சுழ­லும் சொற்­போர் நிகழ்ச்சி இம்­மா­தம் 12ஆம் தேதி இரண்டு மணி நேர இலக்­கி­யச் சுவை­யாக இடம்­பெற்­றது. முனை­வர் இரத்­தின வேங்­டே­சன் முன்­னின்று நடத்­திய இதில் புரட்­சிக் கவி­ஞ­ரின் கவிதா விலா­சம் கரை புரண்­டோ­டி­யது.

தமிழ்­தாய் வாழ்த்­தினை தன் இனிய குர­லால் பாடிய சுரு­தி­லயா அழ­கு­சுந்­த­ரத்­தைத் தொடர்ந்து ஃபெங்ஷான் தொடக்­கப்­பள்ளி மாணவி ஓவியா, பாண்­டி­யன் பரிசு பற்­றி­யும் செல்வி வைஷ்­ணவி, கண்­ணன் இருண்­ட­வீடு பற்­றி­யும் பேசிய எழி­லு­ரை­கள் அனை­வ­ரின் பாராட்­டை­யும் பெற்­றது.

தொடர்ந்து பார­தி­தா­ச­னின் குறுங்­காப்­பி­யங்­களில் கொட்­டிக் கிடக்­கும் சமு­தாய, அர­சி­யல், உணர்­வு­களை மூவர் சிறப்­புற விவா­தித்­த­னர். அவற்றுள் கண்­ணன் சேஷாத்­திரி, சஞ்­சீவி பர்­வதத்­தின் சார­லில் குப்­ப­னும் வஞ்­சி­யும் மலைச்­சா­ர­லில் உல­வு­வ­தும் அப்­போது சமூக பிரச்­சினை­களை விவா­திப்­ப­தும் அதில் பெண்­வி­டு­தலை இல்­லா­த­கா­லத்­தில் வஞ்சி பேசும் அறி­வு­பூர்வ பேச்­சும் அவ­ளின் வாதி­டும் திற­னை­யும் வெகு­வா­கப் பேசி வாதிட்­டார்.

குறுங்காப்­பி­யங்­களில் விஞ்சி நின்று நெஞ்சை ஈர்த்­தது புரட்­சிக்­கவியே என்று பேச வந்த புதுக்­கோட்டை பாரதி, பாவேந்­தர் மற்ற காப்­பி­யங்­களை விட இந்­தக் காப்­பி­யத்­தில் பொது உடைமையையும் குடி­யாட்­சி­யை­யும் அதி­கம் வலி­யுறுத்தி பேசி­யி­ருக்­கிற காரணத்­தா­லும் தனி­ம­னித சுதந்­தி­ரத்தை ஆத­ரிப்­ப­தா­லும் இந்த காப்­பி­யமே சிறந்­தது என்­றார்.

அவ­ரைத் தொடர்ந்து பேச வந்த இராம்­கு­மார் சந்­தா­னம், மற்ற இரண்டு காப்­பி­யங்­களை விட ஒரு பெண் தாயாய், அமைச்­ச­ராய், ஆசி­ரி­ய­ராய் இருந்து தன் மக­னுக்கு அர­சாட்­சி­யைப் பெற்­றுத் தரு­வ­தோடு நல்ல கல்வி கேள்வி வாழ்­வி­யலை கற்­றுத் தரு­கின்ற கார­ணத்­தால் ஒரு பெண் இங்கே மிளிர்­கின்­றாள். அந்த மிளி­ரும் பெண்­ணைப் படைத்த கார­ணத்­தால் வீரத்­தாய் என்ற இந்த காப்­பி­யமே சிறந்த, நெஞ்சை ஈர்க்­கும் காப்­பி­யம் என்று வாதிட்­டார்.

சொற்­போ­ரின் நெறி­யா­ளு­னர் முனை­வர் நா.இளங்கோ, பார­தி­தா­ச­னா­ரின் குறுங்­காப்­பி­யச் சிறப்பு­ க­ளை­யும் ஒன்று மற்­ற­திலிருந்து எவ்­வாறு வேறு­ப­டு­கிறது என்­ப­த­னை­யும் அத­னால் ஒன்று மற்­ற­தை­விட எவ்­வாறு சிறப்­பு­று­கிறது என்­பதை மனம் கவ­ரும் வண்­ணம் விளக்­கி­னார்.

மற்ற இரண்டு காப்­பி­யங்­க­ளை­விட புரட்­சி­க்க­வியே கதை­யா­லும் சமு­தாய விழிப்­பு­ணர்வு, அர­சி­யல் குடி­யாட்சி போன்­ற­வற்றை வலி­யு­றுத்­தி­யும் சிறப்­பித்­தும் பாடி­ய­தால் படிப்­ப­வ­ரின் நெஞ்சை ஈர்த்து விஞ்சி நிற்கிறது என்று சுழ­லும் சொற்­போ­ரின் முடி­வாக தந்தார்.

முனை­வர் இரத்ன வேங்­க­டே­ச­னின் நோக்­க­வுரை, சிறப்பு விருந்­தி­னர் திரு. இரா.தின­க­ர­னின் பாவேந்­த­ர் ­பற்­றிய சிறப்­புரை, கவி­ஞர் இறை­ம­தி­யின் நன்­றி­யுரை என அனைத்­தும் பெருஞ்­சி­றப்­புக் கூட்டின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!