மோசடிக்கு $180,000ஐ இழக்கவிருந்த மூத்த நிபுணர்

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் தற்­போ­தைய சூழ­லில் மோச­டிக் குற்­றங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன.

அந்த வரி­சை­யில் மோச­டி­யில் இருந்து ஒரு­வர் காப்­பாற்­றப்­பட்ட சம்­ப­வம் ஒன்று அண்­மை­யில் நிகழ்ந்­தது.

50களில் இருக்­கும் மூத்த தக­வல் தொழில்­நுட்ப நிபு­ணர் திரு கேகே­வுக்கு (உண்மைப் பெய­ர் அல்ல) கடந்த மாதம் 16 முதல் 18ஆம் தேதி வரை மோசடி அழைப்­பு­கள் வந்­தன. சிங்­கப்­பூர் இந்­தி­ய­ரான அவர் $180,000 இழக்கவிருந்தார்.

ஓசி­பிசி வங்கி ஊழி­யர்­கள், காவல் துறை­யின் மோசடி தடுப்பு நிலை­யத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், கிள­மெண்டி போலிஸ் பிரிவு அதி­கா­ரி­கள் ஆகி­யோர் இணைந்து செயல்­பட்­ட­தில் இந்த மோசடி தடுக்­கப்­பட்­டது.

மூன்று நாட்­கள் நீடித்த இந்த மோசடி முயற்­சி­யில் மூன்று வெவ்வேறு அதி­கா­ரி­க­ளாக ஆள்­மா­றாட்­டம் செய்து மோச­டிக்­கா­ரர்­கள் திரு கேகே­வி­டம் இருந்து பணம் பறிக்க முற்­பட்­ட­னர். முத­லா­ம­வர், தாம் சிங்­டெல் ஊழி­யர் எனக் கூறி, திரு கேகே­வின் திசைவி (router) ஊடு­ரு­வப்­பட்­டுள்­ள­தாக சொன்­னார்.

எனவே கூடு­தல் விசா­ரணை தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறிய அந்த நபர், மற்­றொரு சிங்­டெல் ஊழி­யர் தொடர்­பு­கொள்­வார் என்று திரு கேகே­வி­டம் கூறி­னார்.

திரு கேகேவை தொடர்­பு­கொண்ட இரண்­டாம் நபர், ஒரு கணி­னிக் கண்­கா­ணிப்பு மென்­பொ­ருளை திரு கேகே­வின் மடிக்­க­ணி­னி­யில் பதி­வி­றக்­கம் செய்ய வைத்­தார்.

அதன் பின்­னர் மூன்­றா­வது நபர், இணைய போலிஸ் அமைப்­பில் இருந்து அழைப்­ப­தா­கச் சொன்­னார். திரு கேகே ஒத்­து­ழைத்­தால் இணை­யக் குற்­றவாளி­கள் சில­ரைப் பிடிக்க முடி­யும் என்­றும் யாரி­ட­மும் எந்த தக­வ­லை­யும் பகி­ரக்­கூ­டாது என்­றும் அந்த நபர் திரு கேகே­வி­டம் சொன்­னார்.

நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திரு கேகே நடந்த சம்­ப­வத்­தைப் பற்றி பகிர்ந்­தார்.

“ஒரு வழக்­க­மான அர­சாங்க, சிங்­டெல் அதி­காரி எப்­படி அணு­கு­வார்­களோ அதேபோல மோச­டிக்­கா­ரர்­கள் பேசி­னர். நிதா­ன­மாக, தன்­னம்­பிக்­கை­யு­டன் என்­னு­டன் உரை­யா­டி­னர். நான் எதை­யும் உண­ர­வில்லை. மூன்­றா­வது நாள் என்­னி­டம் வங்­கி­யைப் பற்றி கேட்­ட­போது, அவர்­கள் கூறு­வது உண்மை என்று எனக்­குத் தெரிய என்ன ஆதா­ரம் உள்­ளது என்று கேட்­டேன். அவர்­கள் ஏதோ ஒரு ஆவ­ணத்­தைத் தொலை­பே­சி­யில் என்­னி­டம் காட்­டி­னார்­கள்.

“தங்­க­ளி­டம் ஆதா­ரம் இருக்­கிறது என்­ற­னர். ஆனால் அது ரக­சி­யம் என்­ப­தால் என்­னி­டம் அதைக் காட்ட முடி­யாது என்­றார்­கள்,” என்­றார் திரு கேகே.

அர­சாங்­கத்­திற்கு உத­வு­வ­தாக எண்ணி ஏமாந்­து­போன திரு கேகே­வுக்கு மூன்று வங்­கிக் கணக்­கு­கள் இருக்­கின்­றன. கேகே­யின் மடிக்­க­ணி­னி­யில் இருந்த மென்­பொ­ருள் தளம் மூலம் முதல் கணக்­கி­லி­ருந்து மூன்­றா­வது கணக்­கிற்கு $180,000 மாற்­றப்­பட்­டது.

ஊடு­ரு­வி­கள் இருக்­கும் இடத்­தைக் கண்­ட­றிய, ஹாங்­காங்­கில் உள்ள எச்­எஸ்­பிசி வங்­கிக் கணக்கு ஒன்­றுக்கு பணத்தை மாற்­றி­விட மோச­டிக்­கா­ரர்­கள் திரு கேகே­வி­டம் கூறி­னர்.

இதைச் செய்­வ­தால் இணை­யக் குற்­ற­வாளி அதைப் பார்ப்­பார் என்­றும் அது நடக்­கும் வேளை­யில் குற்­ற­வா­ளி­யைப் பிடித்­து­விடலாம் என்றும் மோச­டிக்­கா­ரர்­கள் சொன்­னார்­கள்.

அதை நம்­பிய திரு கேகே பணத்தை மாற்­றி­விட ஓசி­பிசி வங்­கிக் கிளைக்­குச் சென்­றார். பணத்தை மாற்­றி­வி­டு­வ­தற்­கான அவ­ரது நோக்­கம் குறித்து சந்­தே­கம் எழ, காவல் துறை­யின் மோச­டித் தடுப்பு நிலை­யத்­திற்கு வங்கி தக­வல் அளித்­தது.

“குடும்­பப் பரா­ம­ரிப்­புக்­காக எனச் சொல்லி சீனர் ஒரு­வ­ருக்கு பணம் அனுப்­ப­வி­ருப்­ப­தாக திரு கேகே சொன்­னார். ஹாங்­காங்­கில் குடும்ப உறுப்­பி­னர் உள்­ள­னரா என்று அவ­ரி­டம் விசா­ரித்­தேன். மேலும் பல கேள்­வி­க­ளைக் கேட்­டேன். அவ­ர் அது­குறித்து பகிர விரும்­ப­வில்லை,” என்­றார் கிள­மெண்­டி­யில் உள்ள ஓசிபிசி கிளை ஊழி­ய­ரான சுவா வென் சின், 25.

சந்­தே­கத்­திற்­கு­ரிய இச்­சம்­ப­வம் அதே நாள் போலி­சுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது. தக­வ­ல­றிந்து திரு கேகே­வின் வீட்­டிற்­குச் சென்ற போலி­சார், பணத்தை மாற்­றி­விட வேண்­டாம் என அறி­வு­றுத்­தி­னர்.

தொடக்­கத்­தில் அதி­கா­ரி­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்த திரு கேகே, அவ­ரின் சொந்த கணக்­கு­க­ளான ஒன்­றில் இருந்து மற்­றொன்­றுக்கு மோச­டிக்­கா­ரர்­கள் பணத்தை மாற்­றி­விட்­டது அறிந்­த­வு­டன் திரு கேகே நில­வ­ரத்தை உணர்ந்­தார்.

“அடுத்த முறை தொழில்­நுட்ப ஆத­ரவு ஊழி­யர்­க­ளி­டம் அடை­யா­ளத்தை உறுதி செய்­வேன். அவர்­களை நேரில் சந்­திக்­க­வும் கோரு­வேன்,” என்று திரு கேகே சொன்­னார்.

கடந்த ஆண்­டின் முதல் பாதி­யில் தொழில்­நுட்ப ஆத­ரவு குறித்த 313 மோச­டிச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. அதில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மொத்­தம் $14.9 மில்­லி­யனை இழந்­த­னர்.

2019ஆம் ஆண்டு அதே கால­கட்­டத்­தில் இத்­த­கைய 30 மோச­டிச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. அவற்­று­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்டு முதல் பாதி­யில் இத்­த­கைய மோச­டி­க­ளின் எண்­ணிக்கை 10 மடங்­கிற்­கும் அதி­கம். 2019 முதல் பாதி­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மொத்­தம் $340,000ஐ இழந்­த­னர்.

பெரிய அள­வி­லான மோச­டி­களில் இரண்­டாம் நிலை­யில் தொழில்­நுட்ப ஆத­ரவு மோச­டி­கள் வரு­கின்­றன. முதல் நிலை­யில் உள்ள முத­லீட்டு மோச­டி­க­ளுக்கு இலக்­கா­ன­வர்­கள் மொத்­தம் $22.3 மில்­லி­யனை இழந்­த­னர்.

2020ஆம் ஆண்­டில் முதல் பாதி­யில் ஒரே மோச­டிச் சம்­ப­வத்­தில் ஆகப்­பெ­ரிய தொகை­யாக $958,000 இழப்பு ஏற்பட்­டது.

இந்­நி­லை­யில், தொழில்­நுட்ப ஆத­ரவு மோச­டி­கள் குறித்து ஆலோ­சனை அறிக்கை ஒன்றை காவல் துறை வெளி­யிட்­டது.

போலி­யான உள்­ளூர், வெளி­நாட்டு எண்­க­ளி­டம் இருந்து தொலை­பேசி அழைப்­பு­கள் வந்­தால் அதை நிரா­க­ரிப்­பது, தேவை­யில்­லாத மென்­பொ­ருள்­களை கணி­னி­யில் பதி­வி­றக்­கம் செய்­யா­மல் இருப்­பது, வங்­கிக் கணக்கு, மறைச்சொற்கள் போன்ற முக்­கி­ய­மான தக­வல்­க­ளைப் பகி­ரா­மல் இருப்­பது போன்ற வழி­களைக் கடைப்பிடித்தால் மோச­டி­யி­லி­ருந்து தற்­காத்துக் கொள்­ள­லாம் என்­பதை அந்த அறிக்கை விளக்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!