‘கொள்ளை’நோய் பரப்பிய குற்றம்

சிங்­கப்­பூ­ரில் 2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் கடந்த ஆண்­டில் மோச­டிச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தாக போலிஸ் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. இங்கு நடை­பெற்ற ஆகப்­பெ­ரிய 10 மோச­டிச் சம்­ப­வங்­க­ளைக் கணக்­கிட்­டால், 2019ன் முதல் ஆறு மாதங்­களில் ஏமாற்­றப்­பட்ட தொகை $41.6 மில்­லி­யன். 2020ஆம் ஆண்டு அதே காலகட்­டத்­தில் இத்தொகை $82 மில்­லி­யன். கிட்­டத்­தட்ட இருமடங்கு தொகை மோச­டி­க­ளால் பறி­போய்­விட்­டது. ஈராண்­டு­க­ளி­லுமே ஆக அதி­க­மாக பதிவான புகார்­கள் இணைய வர்த்­தக மோசடி தொடர்­பா­னவை. 2019ஆம் ஆண்­டின் முதல்பாதி­யில் இத்­த­கைய 1,202 மோச­டி­கள் நிகழ்ந்த நிலை­யில் 2020ஆம் அதே கால­கட்­டத்­தில் இந்த எண்ணிக்கை 2,089ஆக அதி­க­ரித்­து­விட்­டது. இது 73.9% அதி­கம்.

எரி­யும் நெருப்­புக்கு எண்­ணெய் உத­வு­வ­து ­போல கொள்­ளை­நோய் பர­வல் காலம் மோசடி சம்­ப­வங்­க­ளுக்கு உத­வி­யுள்­ளது. 2020ஆம் ஆண்டின் முற்பா­தி­யில் பதி­வான 294 இணைய மோச­டிச் சம்­ப­வங்­கள் கிரு­மித்­தொற்று தொடர்­பான முகக்­க­வ­சங்­கள், கை சுத்­தி­க­ரிப்­பான், வெப்­ப­மானி போன்றவற்றோடு தொடர்­பு­டை­யவை. கொவிட்-19 சூழ­லால் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே பல­ரும் இணை­யத்­தைப் புழங்­கு­வது மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு சாத­க­மா­கி­யுள்­ளது என்­றார் தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யில் 15 ஆண்­டு­க­ளாக இருக்­கும் திரு விஜய் சங்கர் ராமு, 38.

“தொலை­பேசி அழைப்பு, இணை­யத்­த­ளம் அல்­லது வேறு ஏதா­வது தொடர்பு முறை­களில் வழக்­கத்­திற்கு மாறான கோரிக்­கை­களை எதிர்­நோக்­கி­னால் அதைத் தவிர்ப்­பது நல்­லது. உதா­ர­ணத்­திற்கு ‘ஐசிஏ’ அதி­கா­ரி­கள் போல் ஆள்­மா­றாட்­டம் செய்து, கட­வுச்­சீட்டு எண்ணைக் கேட்­டு அழைப்பு வர­லாம். அர­சாங்க அதி­கா­ரி­ கள் அப்­படி கேட்­க­மாட்­டார்­கள்,” என்­றார் அவர்.

இணைய மோசடி நடந்­த­பின் குற்­ற­வா­ளி­

க­ளைக் கண்­டு­பி­டிப்­பது மிகக் கடி­ன­ம் என்­றும் மோசடி நடக்காமல் தற்­காத்துக்கொள்­வதே சாலச்­ சி­றந்­தது என்­றும் கூறி­னார் ‘ராஜா & டான்’ சட்ட நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் வழக்­க­றி­ஞ­ரும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் வர்த்­தக தொழிற்­

ச­பை­யின் துணைத் தலை­வ­ரு­மான திரு இரா. சந்­தி­ர­மோ­கன், 58.

“உங்­க­ளுக்குத் தெரி­யாத ஒரு நபர் சந்­தே­கப்­ப­டும்­படி தொலை­பே­சி­யில் அழைத்­தால் உடனே அவர்களிடம் சுயவிவரம் எதையும் கொடுக்காதீர்கள். அவர்­களின் பெயர், அதி­கா­ர­பூர்வ தொலை­பேசி எண் ஆகிய விவ­ரங்­களை முத­லில் சேக­ரி­யுங்­கள். பின்­னர் சில நிமி­டங்­கள் கழித்து அவர்­களை அழை­யுங்­கள். ஆள்­மா­றாட்­டம் செய்­யும் நப­ராக இருந்­தால் பெரும்­பா­லும் இந்த விவ­ரங்­களை வழங்­க­மாட்­டார்­,” என்றார் அவர்.

பொது சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள், வங்கி ஊழி­யர்­கள் என்ற போர்வையில் நடக்­கும் மோச­டி­கள் அதி­க­ரித்­துள்ளதாக ‘எம­ரால்ட் லா’ நிறு­வ­னத்­தின் துணை நிர்வாக பங்­கா­ளி­ யான திரு கித் சூ கூறுகிறார்.

இணைய மோச­டி­களை அடுத்து சமூக ஊடக ஆள்­மா­றாட்ட மோச­டி­கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. “சமூக ஊட­கங்­களில் மற்­ற­வர்­க­ளு­டன் இணை­வ­தற்கு வாய்ப்­பு­ கிடைக்­கும்­போது அவர்களைப் பற்றி தீர விசா­ரிப்­பது நல்­லது. வலு­வான கடவுச்­ சொற்­களை பயன்­படுத்­து­வது இணையக் குற்­ற­வா­ளி­கள் உங்­கள் கணக்­கிற்­குள் புகமுடி­யா­மல் தடுக்­கும்,” என திரு சூ மேலும் கூறினார்.

குற்­றங்­க­ளின் பட்­டி­ய­லில் மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­தி­ருக்கும் கடன் மோச­டி­களில் ஈடு படுவோர் சமூக ஊட­கம் அல்­லது போலி இணை­யத்­த­ளம் மூலம் உடனே பணம் கிடைக்கும் என நம்­ப­வைத்து ஏமாற்­றி­வி­டு­வர். முன்­கூட்­டியே கட்­ட­ணம் ஒன்­றைச் செலுத்தச் சொல்லி அவர்­கள் கட்­டா­யப்­ப­டுத்­து­வர். அவர்

­க­ளின் பேச்சை நம்பி பணம் அனுப்பி ஏமா­று ­ப­வர்­களும் உண்டு.

“சட்­டபூர்­வ­மாக கடன் வழங்­கு­ப­வர்­கள் உங்­களை நேரில் சந்­தித்து, கடன் வழங்குவதற்­ கான படி­வங்­களில் கையெ­ழுத்து கேட்­ப­து­தான் வழக்­கம். நீங்­கள் கேட்­கா­ம­லேயே தொலை­பே­சி­யில் அழைப்­பது, செய்­தி­கள் அனுப்­பு­வது கூடாது,” என்­கி­றார் வழக்­க­றி­ஞர் திரு சிராஜ் ஷேக் அஸிஸ், 31.

“மலி­வான விலை­யில் பொருள், அல்­லது பரிசு கிடைக்கிறது என்பதைப் பார்த்து சிந்­திக்­கா­மல் அதற்கான இணைப்பை அணுகி, போலி இணை­யத்­த­ளம் அல்­லது நப­ரி­டம் சென்று ஏமாந்­து­வி­டு­கி­றார்­கள்,” என்­றார் 22 ஆண்­டு­க­ளாக தொழில்­நுட்­பத்துறை­யில் பணி­யாற்­றும் திரு இரா.மாத­வன், 45.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!