1995ல் சிறுமி கொலை: வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது

1995ஆம் ஆண்­டில் 7 வயது சிறு­மி­யான லிம் ஷியாவ் ரோங்­கைப் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்து கொன்­ற­வரை இன்­னும் கண்­டு­பி­டிக்­க­வில்லை.

அந்­தக் கொடூ­ர­மான சம்­ப­வம் நிகழ்ந்து 25 ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கி­விட்­ட­போ­தி­லும் வழக்கு தொடர்­பான விசா­ரணை தொடர்­வ­தாக கொல்­லப்­பட்ட சிறு­மி­யின் குடும்­பத்­துக்கு போலி­சார் உறுதி அளித்­துள்­ள­னர்.

மாண்ட சிறு­மி­யின் தாயா­ரான 65 வயது திரு­வாட்டி ஆங் கூன் லே, தங்கையான 27 வயது குமாரி லிம் ஜியா ஹுவீ ஆகி­யோரை மத்திய புல­னாய்­வுத் துறைக்கு அதி­கா­ரி­கள் நேற்று அழைத்­தி­ருந்­த­னர். அங்கு அவர்­களை சிறப்­புப் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் சந்­தித்­துப் பேசி­னார்.

இந்த வழக்கு 1995லிருந்து பல­முறை மறு­ஆய்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவ்­வி­ரு­வ­ரி­ட­மும் அவர் கூறி­னார். இந்­தச் சந்­திப்­புக்­குப் பிறகு தோ பாயோ லோராங் 5 புளோக் 75ல் உள்ள தமது தாயா­ரின் காப்­பிக்­க­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார் குமாரி லிம்.

குற்­றம் நிகழ்ந்த இடம் தொடர்­பான சில புகைப்­ப­டங்­களை அந்த அதி­காரி வைத்­தி­ருந்­த­தா­க­வும் அவற்­றைத் தமது தாயா­ரி­டம் காட்ட வேண்­டாம் என்று தாம் கூறி­ய­தா­க­வும் அவர் கூறி­னார்.

“என் அக்கா மாண்ட விதம் மிக­வும் கொடூ­ர­மா­னது. ஒரு 7 வயது பெண்ணை ஒரு­வர் அவ்­வாறு மூர்க்­கத்­த­ன­மாக அடித்­துத் துன்­பு­றுத்­தி­யி­ருப்­பதை நினைத்­துப் பார்க்­கவே முடி­யாது. என் அக்கா வலியால் எப்­ப­டி­யெல்­லாம் துடித்­தி­ருப்­பார்? உங்­கள் பிள்ளை இவ்­வாறு கொடூர­மான முறை­யில் மாண்­டி­ருந்­தால் உங்­க­ளால் தாங்­கிக்­கொள்ள முடி­யாது. என் குழந்­தைக்கு அப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டி­ருந்­தா­லும் என்­னால் தாங்க முடி­யாது,” என்­றார் குமாரி லிம்.

அந்­தப் புகைப்­ப­டங்­க­ளைத் தம்­மி­டம் காட்­டு­வ­தற்கு முன்பு அவை என்­னைப் பாதிக்­கக்­கூ­டும் ன்று அந்த அதி­காரி எச்­ச­ரித்­த­தாக குமாரி லிம் தெரி­வித்­தார்.

“புகைப்­ப­டங்­க­ளைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்­தேன். அவை என்­னைப் பெரி­தும் பாதித்­தன. அவற்­றில் இருந்த காட்­சி­களை என்­னால் மறக்­கவே முடி­யாது,” என்­றார் அவர்.

சாக்­க­டை­யி­லி­ருந்து கால்­கள் வெளியே நீட்­டிக்­கொண்­டி­ருந்த நிலை­யில் தமது அக்­கா­வின் உடல் இருந்­த­தா­க­வும் அவ­ரது முகம் முழு­வ­தும் ரத்­த­மாக இருந்­த­தா­வும், கழுத்­தைச் சுற்றி கறுப்பு நிற காயங்­கள் இருந்­த­தா­க­வும் குமாரி லிம் கூறி­னார். 1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி இரவு 9.30 மணி அள­வில் திரு­வாட்டி ஆங் தமது காப்­பிக்­க­டை­யில் வேலை­யாக இருந்­த­போது தமது தந்­தை­யின் நண்­ப­ரைச் சந்­திக்­கப் போவ­தா­கக் கூறி லிம் ஷியாவ் ரோங் சென்­றார். அது­தான் தமது மக­ளைத் திரு­வாட்டி ஆங் கடை­சி­யாக பார்த்த தரு­ணம். மறு­நாள் காலை, ஜாலான் உட்­பி­ரிட்ஜ் அரு­கில் உள்ள சாக்­க­டை­யில் அவ­ரது உடல் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!