சிங்கப்பூர் தம்பதியர் பங்களிப்புடன் இன்று மெல்பர்ன் விநாயகர் கோயில் குடமுழுக்கு

கொவிட்-19 சூழ­லி­லும் பக்தி குறை­யா­மல் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரில் அமைந்­துள்ள ஸ்ரீ வக்­ர­துண்ட விநா­ய­கர் ஆல­யத்­தின் மூன்­றா­வது குட­மு­ழுக்கு விழா இன்று நடை­பெ­றுகிறது.இக்­கோ­யில், உல­கின் தெற்கு அரைக்­கோ­ளத்­தில் உள்ள ஆகப் பெரிய கருங்­கல் கோயில் என்று கோயில் நிர்­வா­கம் தெரி­வித்­தது.

“இந்து ஆல­யத்தை ஏழு வித­மான பொருட்­களைக் கொண்டு கட்­ட­லாம். கருங்­கல்­லுக்கு ஈர்ப்பு சக்தி அதி­கம். மற்ற திர­வி­யம் எதை­யும் சேர்க்­கா­மல் கருங்­கல்லை மட்­டும் கொண்டு கோயி­லைக் கட்ட முடி­யும் என்­பது அதன் தனிச்­சி­றப்பு,” என்­றார் கோயி­லின் அர்ச்­ச­கர் நித்­யா­னந்தா சிவாச்­சா­ரி­யார்.

6,000 கிலோ கிராம் எடை கொண்ட ஒரே கருங்­கல்­லி­னால் செதுக்­கப்­பட்ட கரு­வ­றை­யின் விமானம் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வேறு எங்­கும் காணமுடி­யா­தது.

பிர­தான கரு­வறை உட்­பட கோயி­லில் அமைந்­துள்ள மொத்­தம் 11 சந்­நி­தி­கள் கருங்­கல் கொண்டு உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன. அனைத்து கருங்­கற்­களும் இந்­தி­யா­வின் சேலம் நக­ரத்­தின் மலை­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்டு கப்­பல் மூலம் மெல்­பர்­னுக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. இம்­மா­தம் 17ஆம் தேதி முதல் குட­மு­ழுக்கு விழா தொடர்பான வழி­பா­டு­கள் தொடங்­கின. மெல்­பர்­னின் கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு இணங்க அன்றாட வழி­பாட்­டுக்கு 400 பக்­தர்­களும் குட­மு­ழுக்கு தினத்­தன்று 500 பக்­தர்­களும் நேரடி வழி­பா­டு­களில் கலந்­து­கொள்­ள­லாம். ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கட்­டப்­பட்ட இரண்­டா­வது இந்து ஆல­யம் இது. 1992ஆம் ஆண்டு அக்­டோ­பர் 10ஆம் தேதி இக்­கோ­யி­லின் முதல் குட­மு­ழுக்கு விழா நடந்­தது.

இக்­கோ­யி­லைக் கட்­டு­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­த­வர்­கள் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த திரு சண்­மு­க­ரத்­னம் பிள்ளை, திரு­மதி பர­மேஸ்­வரி பிள்ளை தம்­பதி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 1989ஆம் ஆண்­டில் இக்­கோ­யி­லுக்­கான விநா­ய­கர் சிலை­களைத் தேடி இந்­தி­யா­விற்கு இத்­தம்­பதி சென்­ற­போது, காஞ்சி மடத்­தின் சங்­க­ராச்­சா­ரி­யார் ஜெயேந்­திர சரஸ்­வதி சுவாமிகள் விநா­ய­கர் சிலை ஒன்றை அளித்­தார். மற்­றொரு பஞ்­ச­லோக விநா­ய­கர் சிலை­இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்­டது. இந்த இரு சிலை­க­ளை­யும் சிங்­கப்­பூ­ருக்கு எடுத்து வந்­த­னர். வக்­ர­துண்ட விநா­ய­கர் கோயி­லின் மூல­மூர்த்­தி­யும் பஞ்­ச­லோக உற்­ச­வ­மூர்த்­தி­யும் சிலோன் ரோடு ஸ்ரீ செண்­பக விநா­ய­கர் ஆல­யத்­தில் கண் திறப்பு செய்­யப்­பட்டு விமா­னம் வழி­யாக மெல்­பர்­னுக்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

“கடந்த 17 ஆண்­டு­க­ளாக முடிந்­த­வரை நாள்­தோ­றும் இந்த கோயி­லுக்­குச் சென்று வரு­கி­றேன். குடும்­பத்­திற்­கும் தனிப்­பட்ட வாழ்­வி­லும் அத­னால் பல நன்­மை­கள் ஏற்­பட்­டுள்­ளன,” என்­றார் இக்­கோ­யி­லின் தொண்­டூ­ழி­ய­ரான பக்­த­ர் திரு சங்­கர் சுந்­த­ர­ரா­ஜன், 39.

இன்று காலை 9.15 முதல் 10.30 மணி வரை நடக்­கும் குட­மு­ழுக்கு விழா­வைக் காண கோயி­லின் ஃபேஸ்புக் பக்­கத்தை நாட­லாம்.குட­மு­ழுக்கு விழா, கோயி­லின் வர­லாறு குறித்த மேல் விவ­ரம் பெற www.mvhs.org.au/ என்ற இணை­யப் பக்­கத்தைப் பார்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!