ஜாலான் புசாரில் 2025க்குள் நீர் தடுப்புத் தொட்டி கட்டப்படும்

தாழ்­வான பகு­தி­கள் உள்ள ஜாலான் புசார் வட்­டா­ரத்­தில் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க அங்கு புதிய நிலத்­தடி நீர் தடுப்­புத் தொட்டி வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் கட்டி முடிக்­கப்­படும் என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தெரி­வித்து உள்ளது.

சையது ஆல்வி ரோட்­டுக்கு அரு­கில் அமை­ய­வி­ருக்­கும் அந்த நீர் தடுப்­புத் தொட்­டி­யின் கட்­டு­மா­னப் பணி­கள் இவ்­வாண்டு மூன்­றாம் காலாண்­டில் தொடங்­கும்.

அடிக்­கடி கடு­மை­யான மழைப் பொழி­வு­க­ளைக் கொண்டு வரும் பரு­வ­நிலை மாற்­றத்­துக்கு ஏற்ப புதிய திட்­டங்­களை அறி­மு­கப்­படுத்­தும் அர­சாங்­க முயற்சி­களின் ஒரு பகு­தி­யாக இது அமைந்­துள்­ளது.

நீர் தடுப்­புத் தொட்டி கட்டி முடிக்­கப்­பட்­ட­வு­டன் அது 9,300 கன மீட்­டர் அள­வுள்ள அதா­வது நான்கு ஒலிம்­பிக் நீச்­சல் குளத்தை நிரப்­பக்­கூ­டிய அள­வுள்ள நீரைச் சேமித்து வைக்­கும் ஆற்­றல் கொண்­ட­தாக இருக்­கும்.

ரோச்சோர் கெனல் கால்­வா­யி­லி­ருந்து நீர் சையது ஆல்வி ரோட்­டில் உள்ள வடி­கால்­க­ளுக்­குச் செல்­வ­தைத் தடுக்­கும் விதத்­தில் தொட்டி அமைக்­கப்­படும் என்று கழ­கம் நேற்று கூறி­யது.

மேலும் அப்­ப­கு­தி­யில் பெய்­யும் மழை நீரை தற்­கா­லி­க­மாக அத்­தொட்­டி­யில் சேமித்து வைக்க முடி­யும். கடும் மழைப் பொழி­வுக்­குப் பிறகு சேமித்து வைக்­கப்­பட்டு உள்ள அந்த நீர் மீண்­டும் கால்­வாய்க்­குத் திருப்பி விடப்­படும்.

இந்த வட்­டா­ரத்­தில் வெள்­ளப் பெருக்­கைத் தடுக்க கழ­கம் முன்பு பல முயற்­சி­களை எடுத்­துள்­ளது.

2015ல் சுங்கை ரோடு, ரோச்­சோர் கெனல் ரோடு ஆகி­ய­வற்­றின் நெடு­கில் ஓடும் ரோச்­சோர் கெனல் கால்­வா­யின் அளவு விரி­வுப்­ப­டுத்­தப்­பட்டு, அதன் ஆழ­மும் அதி­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

சையது ஆல்வி ரோட்­டில் நீர் தடுப்­புத் தொட்டி கட்­டும் திட்­டத்தை கடந்த ஆண்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!